Sunday 7 June 2015

9 இன்றுவொரு ஜோதிடத்தகவலை அறிந்து கொள்வோம்.





இந்த வையகம் முழுதும் படைக்கப்பட்ட ஜீவராசிகள் அனைத்திற்கும், தன் மரபை கடத்திக் கொள்ளும் அதி அற்புதமான உணர்வு காதலாகும். காதல் உணர்வுகளைப் பாடாத கவிஞன் கவிஞனே அல்ல. உன்னதம் உணராதவன்.
ஜோதிடத்தில் "ஆத்மார்த்தமான காதலை" உணர்த்தும் கோள்களான சூரியனும், சுக்கிரனும் இலக்கின கேந்திரங்களில் நிற்கின்ற ஜாதகர்கள், காதலிக்கிற பாணிகளில் கைதேர்ந்தவராக இருந்தாலும், வாழ்க்கையில் இணைந்து வாழ முடியாதவர்கள்  .

10
ஒருவரின் ஜாதகத்தில் இலக்கினம் என்பது, புனிதமானது என்று அறிந்துள்ளோம். இலக்கினம் புனிதமானது என்றால், இலக்கினாதிபதியும் புனிதமானது என்றுதானே அர்த்தம். எந்த ஜாதகமானாலும், ஐந்தாமிடம் என்பதும் தெய்வங்கள் உறையுமிடம் என்பதும் நம் அனைவருக்கு தெரியும். அதாவது, அந்த இடம் கருவறை போன்ற புனிதமானது. இதேபோல், ஏழாமிடம் என்பது, இலக்கினத்திற்கு மாரகத்தைக் குறிக்குமிடம் என்றால், புனித இடத்தின் நேரெதிரான போக்குடைய இடம் என்று அர்த்தமாகிறது அல்லவா? இதேபோல், ஏழாமிடம் என்பது ஐந்தாமிடத்திற்கு மூன்றாமிடம் அல்லவா? அது தெய்வத்தின் வீரியத்தைக் குறிக்குமிடமல்லவா? அந்த இடம் பகையானால்….. சரி…

இலக்கினாதிபதியும், ஐந்துக்குடையக்கோளும் கூடி, ஏழாமிடத்தில் பகை, நீசம்பெற்று அமர, இறைவனால் தண்டிக்கப்படுவான். ஆனால், ஏழாமிடம் நட்பு, ஆட்சி, உச்சம் பெற நன்மை ஏற்படும் .

91501 06069

No comments:

Post a Comment