Sunday 7 June 2015

33. இன்றுவொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?





நம் சமூகத்தில் உழைக்கும் மக்களுக்குத் தந்த மதிப்பையும், மரியாதையையும், தற்போதைய “ நாகரீக “ சமூகம் வழங்குகிறதா? என்று தெரியவில்லை. முன்பு உழைப்பு என்பது உடல்பலம் சார்ந்து இருந்தது. ஆனால், இன்று அப்படியில்லை என்பதும், பொருள்சார்ந்த உழைப்பே மேன்மையானது என்றும் கூறப்படுகிறது.

இலக்கினத்திற்கு பத்தாமிடம் வினை எனும் தொழிலைப் பற்றிக் காணுமிடமாகும். பத்தாமதிபதி, பத்தில் கூடியுள்ள கிரகங்கள், பத்தாமதிபதி கூடின கிரகங்கள், தொழில்காரகனான சனி இவர்களைக் கொண்டுதான், ஒருவரின் தொழிலைப் பற்றி காணவேண்டும். இலக்கினத்திற்கு பத்துக்குடையவன் எட்டு, பனிரெண்டாமதிபதிகளின் சாரம் பெற்றாலும், எட்டு, பனிரெண்டில் இருந்தாலும், ஜாதகன் தனக்காக உழைக்காமல், பிறருக்காக உழைப்பான். இவரின் உழைப்பை அலுவலகங்களில் உறிஞ்சப்படும். இவர்கள் எந்த பணிகளில் இருந்தாலும், உழைப்புக்கேற்ற மதிப்புடன் இருப்பதில்லை
34
நேற்று இரவு ஒருபதிவு பதிந்தேன். அதையொட்டியே தான் இதுவும். என்னுடைய கருத்து தான். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. நான் முகநூலில் வந்த புதிதில், மலைபோல் தன்னைக் காட்டிக் கொண்ட“ ஆசான்கள் “ அனைவரும், இன்று கூலாங்கல்லாய் சிதறிக் கிடக்கின்றனர். அன்று உச்சத்தில் இருந்த அவர்களின் கால்களை நக்கிப் பிழைத்தவர்கள் இன்று மற்றொருவரின் கால்களை கழுவிக்கொண்டு இருக்கின்றனர். தனக்குள்ள ஒரு முகத்துக்குள் இத்தனை விதமான முகமூடிகளை மாட்டிக் கொள்கிறார்கள். இன்று புகழும் ஒருவனை நாளை திட்டுகிறார்களே, இவர்களுக்கான கிரக அமைப்பு என்ன என்பது தெரியுமா?

ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனோடு, சனி கூடி இருந்து, செவ்வாய் எனும் கோப உணர்ச்சியுடைய கோள் பார்க்க, ஜாதகன் பிறரை திட்டிக் கொMடே இருப்பான். அதுவே சந்திரன் சனியை குரு காண, புகழ்ந்து கொண்டே இருப்பான். இவ்விருவரும் காண, திட்டுதலும், புகழ்தலும் மாறி, மாறி நடக்கும். இதில் இன்னொரு நுட்பமாக, இவர்களை செவ்வாய் குருவின் சாரம் பெற்றுக் காண்பதும், இவர்களை குரு, செவ்வாயின் சாரம் பெற்று பார்த்தாலும், குரு, செவ்வாய் கூடுவதற்கு சமம் தான். இந்த ஜாதகரின் பேச்சில் உண்மை தன்மை இருக்காது. இவர் திட்டுவதையும், புகழ்வதையும் மாறி மாறி செய்வார் 

91501 06069

No comments:

Post a Comment