Sunday 7 June 2015

25. இன்றுவொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?





ஒரு மனிதனின் வெற்றி தோல்வி என்பது, அவன் நல்லவனா? கெட்டவனா? என்பதைப் பார்த்து வருவதல்ல. நல்லவனுக்கு கிடைக்கவேண்டிய அனைத்து மதிப்பும், மரியாதையும், இன்றைய காலகட்டத்தில் கெட்டவனுக்குத் தான் கிடைக்கிறது. அந்த வகையில் பொருளாதாரம் வலுத்தவனை மட்டும் வளப்படுத்தி விடுகிறது.

இலக்கினத்திற்கு ஆறு, எட்டு, பனிரெண்டாமதிபதிகள் வலுவிழந்து, மற்ற பாவங்கள் பலம்பெற்று இருந்தால், ஜாதகன் அனைத்து துறைகளிலும் வல்லவனாக இருப்பான். இது பொது நியதி.

இலக்கினத்திற்கு ஆறாமதிபதி நீசம், அத்தமனம் பெற்று இருக்க, பத்தாமதிபதி வலுத்திருந்தால், தொழில் மேன்மை, வருமானம் பெருகுதல், போட்டி, பந்தயங்களில் வெற்றிபெறுதல், வழக்குகளில் வெற்றி, தொழில் போட்டியே இல்லாத நிலை உருவாதல் போன்ற அற்புதமான பலன்கள் ஏற்படும்,

26.
நம்மால் ஒரு இட்சியக் கனவை காண முடியவில்லை. ஏன்? நம் சிந்தனையையும், செயலையும் தடுக்கும் சக்தி எது? நம்மில் யாரேனும் முன்னேறக் கூடாது என விரும்புவோமா? பின் ஏன் நாம் முன்னேறவில்லை. நமக்குள் தன்முனைப்பு இல்லையா? நம் முன்னேற்றத்தின் இலக்கை தடுக்கும் சக்தி எது? இவைகளைப் பற்றி, என்றாவது சிந்தித்திருந்தோமா? இதற்கு ஜோதிடம் என்னதான் சொல்கிறது. பார்ப்போமா?

இலக்கின அதிபதி யாராக இருந்தாலும், அவர்க்கு கேந்திரங்களான நான்கு, ஏழு, பத்தினில், இலக்கினத்திற்கு பதினொன்றாமதிபதி அமரவும், அல்லது சுக்கிரன் என்னும் அசுரகுரு அமரவும், இல்லையென்றால், இவர்கள் இருவருமே அமரவும் உள்ள ஜாதகர் நினைத்த செயல்கள் அனைத்தையும் அடைந்தே தீருவார். செல்வமும், செல்வாக்கும் பெற்றவராக 


91501 06069

No comments:

Post a Comment