Sunday 7 June 2015

21. இன்றுவொரு ஜோதிடத் தகவலை அறிந்து கொள்ளலாமா?




நம் சமூகம் என்பது ஆணாதிக்கச் சிந்தனை உடையது. நாம் குழந்தையை வளர்க்கும் விதமே, இது ஆண்குழந்தை, அது பெண்குழந்தை எனும் வித்தியாசம் பார்த்தே வளர்க்கிறோம். கல்வி, உணவு, உடை விஷயங்களில் கூட ஆண் குழந்தைக்கு ஒரு மாதிரியும், பெண் குழந்தைக்கு ஒரு மாதிரியும் தான் தருகிறோம். குழந்தையை பெற்றவர்கள் வளர்ப்பில் பேதத்தை பார்ப்பது போல, ஜோதிடம் ஆண்பெண் என பிரிப்பதில்லை. அதற்கு எல்லாமே ஒன்றுதான்.

உங்களின் இலக்கினத்திற்கு, உங்களின் குழந்தையின் இலக்கினம் ஆறு, எட்டாக வந்தால், அக்குழந்தை உங்களுக்கு அடங்காமல் துன்பத்தை தரும். இதேபோல, உங்களின் மனைவியின் இலக்கினம், உங்களுக்கு ஆறு, எட்டாக இருக்கக் கூடாது. இன்னும் சொல்லப்போனால், அண்ணனின் இராசி, இலக்கினத்தையும் உங்களோடு பொருத்திப் பாருங்கள். இப்படி குடும்பத்தில் உள்ளவர்களின் இராசி, இலக்கினங்களை பொருத்திப்பார்த்து, அதான்படி வ்ழ்க்கையை நகர்த்தலாம் அல்லவா?  , உயிரையே தருவதாக சொன்ன நண்பனுக்கு, உங்கள் இலக்கினம்  ஆறு, எட்டாக வரக்கூடாது. அப்படியே வந்தால், ஆண், பெண் என்றால், திருமணமாகாமல் விலகுவது, நண்பனாக இருந்தால், அதிக ஈடுபாடு காட்டாமல், அளவாகப் பழகலாம். இதேபோல, எல்லா உறவுகளையும் பாருங்கள் .

22.
நம் குடும்ப உறவுகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று பின்னிப் பிணைந்தவைகள் ஆகும். ஒரு உறவை தவிர்த்துவிட்டு, மற்றொரு உறவை இணைத்துக் கொள்ள முடியாது. அவர்கள் உறவு என்பது தண்ணீருக்குள் கிடக்கும் தாமரைக் கொடியைப் போன்றது. ஒன்றை இழுத்தால், மற்றொன்றும் கையோடு வந்துவிடும். நல்லதுக்கு உறவாய் கூடாத, இவர்கள் கெட்ட நிகழ்வுக்கு அவசியம் கூடி விடுகின்றனர். ஒரு மகனுக்கும், தந்தைக்குமான உறவு, ஒரு ஜாதகத்தில், ஒரு பாவத்தில் அமர்ந்த இருகிரகங்களால் எப்படிக் கெடுகிறது என்பதை காண்போம்.

இலக்கினத்திற்கு ஐந்தாமிடத்தில் சூரியனுடன், இராகுவுடனோ, கேதுவுடனோ கூட, ஜாதகனுக்கும், அவனின் தகப்பனுக்கும் கடும்பிரச்சனை ஏற்பட்டு, சொத்து, சொந்தங்களை எல்லாம் விட்டு வெளியேறுவான். இந்த விதிக்கு காரணம்,

சூரியன் + ஜாதகனுக்கு தகப்பன்காரகன், அவனே காலதேவனின் ஐந்தாமதிபதியுமாகி, மகனுமாவான். ------ இராகு, கேது + மறைக்கும் நிழல், ------- ஐந்தாமிடம் + பூர்வீகம். அப்பனும், மகனுமாகவே சூரியன் இருந்து, தன்னை மறைக்கும் நிழல்கோள்களான இராகுவோ, கேதுவுடனோ கூடி, ஐந்தில் இருக்க, அப்பன், மகனுக்குமே பிரச்சனை ஏற்படுகிறது. அவர்கள் இருக்குமிடம் பூர்வீகம் தொடர்புடையது என்பதால், அவைகளை விட்டு வெளியேறும் சூழ்நிலையும் ஏற்படுகிறது 

91501 06069

No comments:

Post a Comment