Sunday 7 June 2015

15. இன்றொரு ஜோதிடத் தகவலை அறிந்து கொள்வோமா?


ஒரு ஜீவனின் நோக்கத்தை அடையவிடாமல், மனம் தடுப்பதைப்போல, திசை திருப்பி விடுவதைப் போல, ஜோதிடத்தில் பலவிடயங்களை அடையவிடாமல், குழப்ப மனமான சந்திரன் தடுக்கிறது. குரு என்கிற ஜீவனும், மனம் என்கிற சந்திரனும் கூடினால், அதை ஒரு யோகம் செய்யும் கிரகக் கூட்டாகப் பார்க்கப்படுகிறது. ஆனால்,

உண்மையில் நான்கு, பத்தில் இருந்தால் மட்டுமே, நன்மையான பலன்கலைத் தருகிறது. இவர்கள் ஒன்றில் ஏழில் இருந்தால், திருமணம் நிகழ்வதில்லை. நிகழ்ந்தாலும், இணைந்து வாழ்வதில்லை. வாழ்ந்தாலும், தெய்வதின் பேரருள் இருப்பதில்லை. இவர்களில் ஒரு கிரகம் ஒன்றிலும், மற்றொரு கிரகம் ஏழிலும் இருந்தாலும், இந்த சமசப்தப்பார்வையும் பாதிப்பைத் தருகிறது. இதேபோல,

இந்த குரு சந்திரன் என்கிற நல்லக்கோள்கள் எட்டாமிடத்தில், இருந்தாலும், அல்லது குடும்பவீடான இரண்டில் இவர்களில் ஒருவர் நின்று,, எட்டாமிடத்தில் மற்றவர் நிற்க, குடும்பபாச உணர்வை துறந்து, இறைவனை துதித்துப் பாடி தன்னிலை மறக்கும் துறவியாக இருப்பார். இவர்க்கு திருமணம் செய்து கொள்ளும் மனோநிலை இருக்காது.



16
தன் மரபின் சங்கிலியை அறுபடாமல் கடத்திச் செல்வதற்காகவே, ஒரு உயிரினம் “ சந்ததி ”களை உருவாக்கொள்கிறது. அதற்காக, ஆணை வன்மையுள்ளவனாகவும், பெண்மையை மென்மையுள்ளனவாகவும் பரிணமிக்கப்பட்டது. இதுவரை தொட்டுணராத மென்மையை, பெண்மையிடம் காணும் போது, இயல்பாகவே, கட்டி அணைக்கவும், களியாட்டம் புரியவும் துடிக்கிறான். போகச்சிந்தனைக்குள்ளும், அதனை அனுபவிக்க தேகசுகத்திற்காகவும் எந்த நிலைக்கும் இறங்கவும் துணிகிறான். முந்தி சுகம் தேடி சந்தி சிரிக்கும் நிலைக்கும் போகிறான். காரணம், தன்னை அறியாமலே மரபைக் கடத்தி, புத்திர சுகத்தைப் பெறுகிறான். அவ்வாறு சிற்றின்பச் சுகத்தைப் பெறும், உங்களுக்கு…..

இலக்கினத்திற்கு ஐந்தாம் வீட்டினில், உலகிற்கே பேரருள் புரியும் சூரியன் இருந்து, ஐந்தாம் வீட்டின் அதிபதியையோ, ஐந்தாம் வீட்டையோ பகைக்கோள்கள் சூழ்ந்திருக்காமலும், குழந்தைச் செல்வத்தை அருளும் குருவும் பகைக்கோள்கள் சூழாமலும் இருக்க, சிற்றின்பத்தில் பிறந்த பிள்ளையானாலும், தாய்தந்தையரை மதித்து வாழ்வான். கணகக்கற்ற செல்வத்திற்கு அதிபதியாகவும், சமூக நலன் காப்பவனாகவும் வாழ்வான் 


91501 06069

No comments:

Post a Comment