Sunday 7 June 2015

31. இன்றுவொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?





நாம் பல ஏற்ற இறக்கங்களுடன் வாழ்கிறோம். ஆனாலும், நாம் பல விடயங்களில் சமரசமும் செய்து கொள்கிறோம். எப்படியெனில், நம்மால் நுணுக்கமாய் பேசமுடியாத செய்தியை பேசியவரைக் கண்டால், “ இது போல பேச நமக்குத் தோணவில்லையே “ என எண்ணுகிறோம். அதேபோல, ஆடையலங்காரத்துடன் “ செமையாய் “ வந்து, நளினமாய் கைகுலுக்கும் போது, எங்கிருந்தோவொரு நமக்குள் புதைந்திருந்த தாழ்வு நிலை தலைதூக்கும் பாருங்கள். அதை எந்த மந்திரத்தாலும் போக்க முடியாது. மேலும், ஒருவனுக்கு வழிகாட்டும் தகுதியுடையவனையும் அமைச்சன் போல் ஆலோசனை சொல்பவனையும் கண்டால், “ இவனெல்லாம் என்ன நேரத்தில் பிறந்திருப்பானோ “ என்கிற பொறாமையுணர்வு தலைதூக்கும் அல்லவா? இதற்கு ஜோதிடம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

இலக்கினத்திலோ,   இலக்கினத்திற்கு நான்கு, ஏழு, பத்து இவைகளிலோ, சந்திரன் தவிர்த்த சுபக்கிரகங்கள், ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட கோள்களோ இருந்தால், மேலே சொல்லப்பட்ட அத்தனை விடயங்களும் கிட்டும் .

32.
நம்மில் பலருக்கு கடன்பெறுவது பிடிக்காது என்றாலும், சிலருக்கு அதுதான் அன்றாட வாடிக்கையாகிப் போனது. வடிகட்டிய கஞ்சனிடம் கூட, வாய்ச்சாலம் காட்டி கறந்து விடுவார்கள். தன்னுடைய தொழிலை நிலைநிறுத்த வாங்கிய கடனுக்காக, வட்டிகட்டியே ஓய்ந்துபோய், பின் வட்டிகட்டுவதற்காக கடன் கேட்டு அலையும் பரிதாப நிலையும் ஏற்படும். ஆனால், இதில் சில வியாக்கினங்களும் சொல்வதுண்டு. “ நான் மட்டுமா? கடன் வாங்குறேன். நம் ஒவ்வொருத்தர் பேரிலும் இந்திய கவர்மெண்டே கடன்வாங்குது “ என்பார்கள். கடன் வாங்குவது தவறல்ல. நம்மில் பலரும் கடன்பெற்றவர்கள் தான். ஆனால், அவர்கள் பெறும் கடன் கட்டுக்குள் இருக்கும். தங்களின் கைகளை மீறிப் போகாதவாறு வைத்திருப்ப்பார்கள். ஆம். உறவுகளே!



உங்களின் ஜாதகத்தில் இலக்கினாதிபதியை விட, ஆறாமதிபதி பலம் குறைவானவராக இருக்கவேண்டும். இல்லையென்றால், கடன் பெற்று காலம் கழிப்பார். இதேபோல், அதிக நற்பலனைத்தரும் பதினொன்றாமதிபதி ஆறாமதிபதியை விட பலம் குறைவானவராக இருந்தால், வாங்கிய கடன் அடையாது.

எந்த நிலையிலும் ஒன்று, பதினொன்றாமதிபதிகள் பலம் கூடியவராக இருந்தால், எல்லா வழிகளிலும், வறுமை, கடன் ஆகியன ஒழிக்கப்படும். சமூக உயர்வு அனைத்தும் கிட்டும். இல்லையென்றால், வறுமை வாட்டும், கடன் பெருகும், சமூக உயர்வு இருக்காது .

 91501 06069

No comments:

Post a Comment