Saturday 6 June 2015

மதுரை கைரேகை பயிற்சி வகுப்பும், எனது அனுபவங்களும்…11





சில உண்மைகளை நோக்கிப் பயணப்படும் நேரமிது. சிலவார்த்தைகள் வெல்லுவதையும், கொல்லுவதையும் அனுபவப்பூர்வமாக எல்லோருமே அறிந்திருப்போம் அல்லவா? நான் பல உண்மைகளைச் சொல்லிவரும் போது, அதில் சில தவிர்க்கமுடியாத “நழுவல்களும்” இருக்கலாம். பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர்கள் மட்டும் அந்த நழுவல்களை காணமுடியும். பயிற்சி வகுப்பு என்பது என் நண்பர் மீனாட்சி சுந்தரம் அவர்களின் ஏற்பாட்டில் நடக்கும் சமாச்சாரம். அதில் நாங்களும் பங்கு கொண்டுள்ளோம் என்பதுதான் உண்மை. ஆனால், எந்த நிகழ்ச்சியும் எங்களால் நடத்தப்படவில்லை. நண்பர் கேட்டுக் கொண்டதின் பேரில் சில உரையாடல்களை மட்டும் நடத்தினோம்.

மதியம் சில கருத்துக்கள் எழும்பின. அது என்னவெனில், “எந்த ஜோதிட விதிகளாலும் சகோதரவர்க்கத்தைக் கூறமுடியாது. அப்படி கூறுவதாக இருந்தால் அது ஏமாற்று வேலை. துருவக் கணிதத்தாலன்றி வேறு எந்த முறையாலும் சொல்லமுடியாது “ என்ற கருத்தை பதியவிட்டார்கள். அவர்களே, “ கைரேகையால் எல்லா நுட்ப விடயங்களைக் கூற முடியும் “ என்றும் கூறிவிட்டனர். இது எப்படி என்றுதான் எனக்குத் தெரியவில்லை. எங்களுடைய நிகழ்ச்சியான இளவயதில் திருமணம் முடிக்கும் யோகம் யாருக்கு அமையும் என்கிற விவாதம்  முடிந்ததும், நான் காலையில் இருந்து அஸ்ட்ரோ செந்தில் குமாரை அவருடன் பேசவே இல்லாத காரணத்தால், அவரிடம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அப்போது, மேடையில் இருந்து அழைப்பு வந்தது. சென்றேன். “ உங்களால் துருவகணிதம் இல்லாமல், சகோதர வர்க்கத்தை சொல்லமுடியுமே, சொல்கிறீர்களா? “ என்று கேட்டார்கள்.

நானும் ஒலிபெருக்கியை கையில் வாங்கி, “ என்னால் துருவகணிதம் இல்லாமல் சொல்லமுடியும். புது முயற்சியாக இந்த மேடையில் செய்து காட்டுகிறேன். எங்களால், 70%, 80% சதவீதம் வரை சொல்லமுடியும். ஜோதிடத்தால் முடியாது என்று சொல்லாதீர்கள். உங்களால் முடியாது என்று வேண்டுமானாலும் கூறுங்கள். ஒரு கலையை உயர்த்த மற்றொரு கலையை யாரும் தாழ்த்தாதீர்கள். என்னால் சகோதரவர்க்கம், தாய், தந்தையுடன் உடன் பிறந்தவர்கள், மனைவி வழி உடன்பிறப்புகள், மனைவியின் வீட்டு அமைப்பு போன்றவைகளையும் கூறமுடியும் “ என்று கூறினேன். இவை அனைத்தையும் மறு நாள் நிகழ்த்திக் காட்டுவதாக உறுதி கூறினேன். இதையெல்லாம் ஏன் செய்கிறேன் என்றால்,  காரணம், எங்களை ஜனாசங்கர் அவர்களின் குருப்பெயர்ச்சி விழாவிலும், அவிநாசி தெக்கலூர் செல்வராஜ் அவர்களின் பட்டிமன்ற விவாதத்திலும், பி. எஸ். ஐயர் மைய விழாவிலும், தற்போது நடக்கும் கைரேகை பயிற்சி வகுப்பிலும் கலந்து கொள்ளவைத்து எங்கள் திறமைகளை வெளிக்கொணரக் காரணமாக இருந்ததால், மீனாட்சி சுந்தரம் மற்றும் ஜோதிடக் கலைமாமணி கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் தான். அதனால் தான் ஒத்துக் கொண்டேன்.  நன்றி…. முகநூல் உறவுகளே



தொடர்புக்கு…. 9751822129  8754873378

No comments:

Post a Comment