Wednesday 29 October 2014

மிக எளிதாய் தின ஓரையை நினைவில் வைத்துக்கொள்வது எப்படி?



அன்பு வாசகர்களுக்கு வணக்கம்.
 ஒரு வாரம் என்பது ஏழு நாட்களைக் குறிக்கிறதுஒவ்வொரு நாளையும்ஒவ்வொரு கிரகத்தின் பெயரையும் வைத்து தான் அழைக்கிறோம்ஒருநாளின் இருபத்தி நான்கு மணி நேரத்தைஏழுக்கிரகங்களும்மணிக்கொருவராக ஆட்சி செய்கின்றன

ஒரு நாளுக்குள் ஆட்சி செய்யும் கிரகங்களின் வரிசைகிழமைகளில் குறிப்பிடும் வரிசைப்படி இல்லாமல்சற்றே மாறுபட்டு இருக்கும்உதாரணமாகஞாயிற்றுக் கிழமையை ஆட்சி செய்யும் சூரியன்அந்த நாளின் அதிபதியாகும்சூரிய உதயம் முதல் ஒரு மணி நேரத்தைசூரியன் ஆட்சி செய்வான்


அடுத்த ஒருமணி நேரத்தைகிழமையின் வரிசைப்படி சந்திரன் ஆளாமல்சுக்கிரன் ஆள்வான்இதேபோல்ஒவ்வொரு மணிநேரமும் சிறிது மாறுபாட்டுடன்ஒவ்வொரு கிரகங்கள் ஆட்சி செய்கின்றனஇதை எளிய நினைவாற்றலுடன் மனதில் பதிய வைத்துக்கொள்வது எப்படி என்பதை அறிந்து கொள்ளலாம்


முதலில் ஜாதகக் கட்டத்தை மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள்ஏழுக் கிரகங்களில் சுபக்கிரகங்கள்பாவக் கிரகங்கள் எதுவெனஉங்களுக்குத் தெரிந்திருக்கும்தெரியவில்லை என்றாலும் பரவாயில்லைஇப்போது தெரிந்து கொள்ளுங்கள்பாவக்கிரகங்கள்சூரியன்செவ்வாய்சனியாகும்சுபக்கிரகங்கள் சந்திரன்புதன்குருசுக்கிரன் ஆகும்நாம் நினைவில் வைத்திருக்கும் ஜாதகக் கட்டத்தில்பாவக்கிரகங்களை அதன் உச்ச வீட்டில் நிரப்புங்கள்.

சூரியன்





செவ்வாய்



   சனி

அதன்பின்சுபக்கிரகங்களைஅக் கிரகங்களின்முதல் ஆட்சி வீட்டில் நிரப்புங்கள்.

சூரியன்
சுக்கிரன்
புதன்


சந்திரன்
செவ்வாய்

குரு

சனி

இப்போது ஓரையின் அட்டடவணையைக் காண்போம்.
காலை
பகல்
இரவு
விடி
ஞாயி
திங்
செவ்
புதன்
வியா
வெள்
சனி
06.
07 
08
09 
10 
11 
12
01 02 03 04 05 06 07
08 09 10 11 12 01 02
03 04 05
சூ சுக்
புத
சந்
சநி
கு 
செ
 
 
கு
செ
சூ சு
பு
செ 
சூ
சுக்
புத 
சந்சநிகு
புத 
சந்சநி
குசெ
சூசுக்

கு 
செசூ
சுக்புத
சந்சநி
சுக் புத
சந்சநி
கு 
செ 
சூ
 
கு
செ
சூசுக்
புதசந்

  இவ்வாறு இந்த அட்டவணையை மனதில் பதிய வைத்துக் கொள்வது மிக எளிதாகும்தினஓரை என்பது பொதுவானதாகும்நம் பிறப்பு ஜாதகத்தில் உள்ள கிரகங்களின் வலிமையைப் பொறுத்தேஆதாவது நம் ஜாதகத்தில் சூரியன் வலுவானதாக இருந்தால்அன்றாடம் நாம் பார்க்கும் சூரிய ஓராதிபதியும் வலுவானதாக இருக்கும்ஜாதகத்தில் வலுக்குறைந்திருந்தால்தினம்பார்க்கும் ஓராப் பலன்களும் வலுக்குறைந்ததாக இருக்கும்.
இப்படி ஓரை பார்த்துஜோராக வாழ்வோம்நன்றி

முத்துப்பிள்ளை,
4/7/1 வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர். 624 701 (அஞ்சல்)
ஆத்தூர் வட்டம்
திண்டுக்கல்மாவட்டம்


கைபேசி. 91501 06069

தொல்காப்பியத்தில் திருமணப் பொருத்தங்கள்.

.
கடைச்சங்கக் காலத்துக்கும் முற்பட்ட இடைச்சங்க காலத்தில் தோன்றிய தமிழனின் காலப்பெட்டகம்.   இன்றிலிருந்து சுமார் 2500 ஆண்டுகால வரலாற்றைத் தொட்ட தமிழனின் சிகரம்தமிழின் தொன்மையான நூல்திராவிட வாழ்வியல் முறையைமொழியைநாகரீகத்தைபண்பாட்டு வழிமுறைகளை பதிவு செய்ய, தமிழன்னை கருவறையில் இருந்து ஈன்றுதந்த எத்தனையோ நூல்களில் முதல் நூல்அதுதான் தொல்காப்பியம்.  தமிழனின் வாழ்வியலை வகுத்துத் தந்தவர் தொல்காப்பியர்.

திருவள்ளுவர் தன் குறளில் அறம்பொருள் இன்பம் என்று மூன்றாகப் பிரித்து இருந்தாரோஅவர்க்கு முன்னோடியான தொல்காப்பியர் எழுத்துசொல்பொருள் என மூன்றுபெரும் பிரிவுகளாகப் பிரித்துத் தருகிறார்.

தொல்காப்பியத்தைப் புரட்டிக் கொண்டிருக்கும்போதுஅதில் இரண்டு பாடல்கள் கண்ணில் பட்டனஅந்தப் பகுதி எதுவென்றால்பொருளதிகாரத்தில் மெய்பாட்டியலில் புறனடையில் 25வது பாடலாகும். அதில் சாதிபேதமற்று “வர்ணாசிம” கிடுக்கிக்குள் சிக்காத திராவிட ஆண்மகனுக்கு வாழ்க்கைத்துணை அமைத்துதரும் முறையை விளக்குகிறார்ஒரு ஆணுக்கு   மணமுடிக்க என்ன தகுதி இருக்கவேண்டும்.  

பெண்ணுக்கு பொருத்தமானவன் எப்படி இருக்கவேண்டும் என்று தொல்காப்பியரும் பத்துப்பொருத்தங்களை ஒரு பாடலில் தந்திருந்தார்அதுமட்டுமல்லாமல்மணமக்களுக்கு இருக்கக் கூடாத பண்புகள் என்னஎன்று இன்னொரு பாடலிலும் கூறியிருக்கிறார்உண்மையில் எனக்கு வியப்பு மேலிட்டது.


உலகம் முழுவதும் திருமணப் பொருத்தங்கள் பார்த்துதான்தங்கள் வாழ்க்கையையை துவக்குகிறார்களாஎழுபத்தி ஐந்து சதவீதத்திற்கும் மேற்பட்ட  மக்கள் பொருத்தம் பார்த்து திருமணம் முடிப்பதில்லைஅதனால்தான்திருபொசங்கரன்பிள்ளை அவர்கள் தமது “திருமணப்பொருத்தம் பார்ப்பது எப்படி” என்கிற நூலில், “மேல்நாடுகளில் காதல் திருமணங்கள் முறிவடைவதற்கும்நமது சமுதாயத்தில் பொருத்தம் பார்த்துச் செய்து வைத்த திருமணங்கள் நிலைப்பதற்கும் காரணம்இந்த நாட்டின் பண்பாடேயன்றிப் பார்க்கப்பட்ட இந்தப் பொருத்தங்களால் அல்ல” என்கிறார். “திருமணம் செய்ய இருக்கும் ஆண்பெண் இருவரிடையே மனப்பொருத்தம் அமையின்ஜாதகப் பொருத்தங்கள் பார்க்கவேண்டியதில்லை” என்கிறார் உத்திரகாலாமிருதத்தில் காளிதாசர்திருவி.கே சுவாமி அவர்கள்தனது “ திருமணப் பொருத்தங்களும் சில திருத்தங்களும்” என்கிற நூலில்பத்துப் பொருத்தங்களையும் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று குறிப்பிடுகிறார்

பல குறைகளை வைத்திருக்கும் திருமணப் பொருத்தங்களை ஜோதிடர்களும் பார்த்தே ஆகவேண்டுமாவாழையடியாய் வாழப்போகும் திருமண உறவைநொடியில் பார்க்கலாம் என்று புத்தகம் போடலாமா?   அற்புதமான சாத்திரத்தை ஏமாற்றுவதற்குப் பயன்படுத்தலாமாசிந்திப்போம்இப்போது,
 தொல்காப்பியர் தரும் திருமணப்பொருத்தப் பாடலைக் காண்போம்.
பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவு நிறுத்த காமவாயில்
நிறையே அருளே உணர்வோடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே25

1) பிறப்பே – திராவிடச் சமூகத்தில் சாதீயப் பிரிவுகள் இல்லை. இங்கே பிறப்பு என்பது அவன் சார்ந்த தொழில் குடியைப் பொறுத்ததுஅதில் நற்குடியில் பிறந்த என்கிற அர்த்தம் கொள்ளவேண்டும்.

2) குடிமை – நற்குடியில் பிறந்திருந்தால் மட்டும் போதாதுஅந்த சமுகத்தில் ஒழுக்கம் உடையவனாக இருக்கவேண்டும்.

3) ஆண்மை _ ஆளுமைத் திறன் உள்ளவன்எவருக்கும் அஞ்சாதவன்மண்நோக்கிப் பாராதவனாகவும் கூர்த்த மதி படைத்தவனாகவும் இருக்கவேண்டும்.

4) ஆண்டோடு – தலைவியின் வயதையொத்து தலைவனின் வயது இருக்கவேண்டும்.

5) உருவு – தலைவன் தலைவி இருவரின் உருவமும்வளர்த்தியும்உடல் கட்டமைப்பும் இணையாக இருக்கவேண்டும்.

6) நிறுத்த காமவாயில் – நிறுத்த என்றால் ஆட்படுதல்காத்தல்நிலைப்படுத்தல் என்று அர்த்தமாகும்காமத்தீயில் ஆட்படும்போதுஅதை அணைப்பவன் வரும்வரை கற்பைக் காப்பாற்றிநிலைப்படுத்ததன் தோழியிடமோதோழனுடனோ பகிர்வது இன்று நேற்று அல்லகாலங்காலமாக நடந்து வரக்கூடிய விடயம்தான்தலைவன் தலைவியின் காம உணர்வு எப்படிப்பட்டதுஅதீத உணர்வுள்ளவர்களாமிதமான உணர்வுள்ளவர்களாஎன்பதை அறியஅவர்களின் நட்புவட்டங்களின் உதவியைத்தான் நாடுவார்கள்.

7) நிறையே – நெறிபிறழாதவன்.எதிலும் மனநிறைவோடு மாட்சிமை குறையாமல்மனக்கட்டுப்பாடுடன் இருத்தல்
  
8) அருளே – அருளுடையவராகபெரியோரை மதித்து அவர்வழியில் நடப்பராக இருப்பவர்.

9) உணர்வோடு- மன உணர்ச்சிகளை கோபக்குறியோடு வெளிப்படுத்தாமல்சமன்படுத்தும் வல்லமை உள்ளவராக,

10) திருவென – தலைவன்தலைவிக்கு உண்டான செல்வ நிலைகளைப் பார்த்தல்.

முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே – தலைவன் தலைவி இருவருக்கும்அல்லது இருவீட்டாருக்கும் இந்த பொருத்தங்களில் எத்தனை ஒத்துவருகிறது என்பதைமுறையாக அளந்துகலந்து பேசி மன ஒப்பமாக வேண்டும் என்கிறார்.

இந்த பாடல் தொல்காப்பியர் எழுதி சுமார் 2500 வருடங்கள் ஆனதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்ஆனால்இந்த பாடலே தெரியாமல்இந்த பாடலின் ஒவ்வொரு வரிகளையும்தங்கள் பொண்ணுக்கோபையனுக்கோ வரன் பார்க்கும் போதுகவனிக்கிறோமா இல்லையாஜோதிடப் பொருத்தம் பார்த்தும்தங்கள் பையனுக்கும்பொண்ணுக்கும் இது போன்ற பொருத்தங்களும் பார்க்கிறோமே எப்படிஇன்றையகாலத்தில் ஜோதிடவழி திருமணப்பொருத்தம் பார்க்காதவர்களும்இது போன்ற பொருத்தங்களை பார்ப்பது எப்படி?

ஒரு திருமணத்திற்கு செல்கிறோம்அங்கே நடக்கும் பேச்சுக்களைக் கேட்டாலேதொல்காப்பியர் சொன்ன பத்துப் பொருத்தங்கள் அலசி ஆராயப்பட்டு இருக்கும். “ பொண்ணுக்குப் பையன் பொருத்தமானவனா தெரியல”, “பையன் ஒழுக்கமானவன் இல்லைகொண்டு செலுத்திடுவான்னா” “பையன் முரட்டுத்தனமா இருக்கான்பொண்ணு பாவம் குருவிக் குஞ்சாட்டம் இருக்கு” பொண்ணு வசதியானதுபையனுக்குப் படிப்பு மட்டும்தான்ஆனாவசதி இல்லஅதனால பொண்ண தந்து இழுத்துக்கிட்டாக” இது போன்ற நம் காதுபடவே, “பட்டாசுகள்” கொளுத்திப் போடப்பட்டிருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் தொல்காப்பிய நூலை எல்லோரும் கற்றுணர்ந்து அதன்படி தங்கள் வாழ்க்கையை வகுத்துக் கொள்பவர்கள் அல்லஇலக்கணமும் இலக்கியங்களும் அந்நியப் பட்டுப்போய் உள்ளதுநம் மக்கள் பாடலைப் படித்து புரிந்து அதன்படி நடப்பவர்கள் அல்லஅதன்படி தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளபவர்களும் அல்லபின் எப்படி பாடலில் கூறிய கருத்துப்படிவரன் தேடுகிறார்கள்

ஜோதிடரை நாடி திருமணப்பொருத்தங்கள் பார்ப்பவர்கள்இது போன்ற எழுதப்படாத பொருத்தங்களை எப்படிப் பார்க்கிறார்கள்இந்த மக்கள் என்னவிதமான கருத்தோட்டங்களில் வாழ்கிறார்களோஅதை தொல்காப்பியர் குறிப்பிடுவதால்இது போன்ற தமிழ் நூல்கள் உயிர்ப்போடு இருக்கின்றனதொல்காப்பியன் காலத்தில் வாழ்ந்த தமிழனின் மரபணுக்களில் பொதிந்திருக்கும்வாழ்வியல் தத்துவங்கள் தான் இன்றைய தமிழனின் மரபணுவிலும் புகுந்திருக்கிறதுஅதனால்தான்காலமாற்றத்துக்கு ஏற்ப ஜோதிட சாத்திரத்தை பலர் ஏற்றுக் கொண்டிருந்தாலும்திருமணப்பொருத்தம் மட்டும் பார்க்காமல்தொல்காப்பியர் கூறும் பத்துப் பொருத்தத்தையும் அறியாமலே பார்க்கிறார்கள்.   


னி,
மணமகன்மணமகள் இருவரிடையே இருக்கக் கூடாத பனிரெண்டு குணங்கள் எவை என்று தொல்காப்பியர் வரையறுத்துக் கூறுகிறார்அதையும் பார்ப்போம்.

நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொல் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை மறப்போடு ஒப்புமை
என்றிவை இன்மை என்மனார் புலவர் 26

1) நிம்பிரிமனதுக்குள் பொறாமையை வளர்த்து வஞ்சக எண்ணம் உள்ளவன்.
2) கொடுமை-  பிறருக்கு கேடு செய்யும் தீவினை எண்ணம் கொண்டவன்.
3) வியப்புதன்னைப் பெரியவனாகப் பாவித்துக் கொண்டுஅதன்படி நடத்தல்.
4) புறமொழிஅடுத்தவனைப் பற்றி இல்லாததும்பொல்லாத்துமாக பேசித் திரிதல்.
5) வன்சொல் – மனதுக்குள் சூழ்ந்திருந்த வஞ்சினத்தை வார்த்தைகளில்வரம்பு மீறி பேசுபவன்.
6) பொச்சாப்பு – எந்த செயலிலும் தன்முனைப்பு இல்லாமல்முயற்சியின்றி இருத்தல்,
7) மடிமையொடு – சோம்பேறித்தனம் உள்ளவன்.
8) குடிமைஇவள் தன்னை விட தாழ்ந்த குடியைச் சேர்ந்தவள் என்று நினைப்பவன்.
9) இன்புறல்உன்னைவிட அதிக ஆனந்த்ததை அடைய வேண்டியன் என்றிருத்தல்
10) ஏழைமைஅறிவின்றி செயல்படுவதால்ஏழ்மையை நோக்கி குடும்பத்தை நகர்த்துபவன்.
 11) மறப்போடுஎதுவும் நினைவில்லாமல் மறந்துவிடுவது.
12) ஒப்புமைதன்னால் முன்பு காதலிக்கப்பட்ட பெண்ணுடன் ஒப்புமை காட்டிப் பேசுபவன்.

என்றிவை இன்மை என்மனார் புலவர் என்றுதலைமகனுக்கும்தலைமகளுக்கும் ஆகாத பண்புகள் என்கிறார் தொல்காப்பியர்இந்த ஒவ்வாத பனிரெண்டு குணங்களைக் கொண்டவர்கள் தங்களின் இல்லற வாழ்வை மிக எளிதாய் இழந்து விடுவார்கள்.  இப்படிப் பட்ட மனநிலையுள்ளவர்களை இளம்வயதிலே இனம்கண்டு தாய்தந்தையர்களும்,சமூகமும் அவர்களை நல்வழிப்படுத்திசமூகத்தின் தொடர்சங்கிலிக்குள் இணைத்துக் கொள்ளவேண்டும்.

கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும்
உணர்வுடை மாந்தர்க் கல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே.  27

கண்ணினால் கண்டு படிப்பதனாலும்காதால் கேட்டு மகிழ்வதினாலும் மெய்ப்பாட்டின் இப்பகுதி ஆராய்ச்சிக்கு மிக அருமையானதுஅறிவுள்ள மக்கள் விரும்பிக் கற்பது என்கிறார் தொல்காப்பியர்நீங்களும் படியுங்கள்தொல்காப்பியனின் மரபணுக்கள் தான்நம்மிடமும் உள்ளன

நாம் வாழுகிற வாழ்க்கையை அவன் சொல்கிறான்அவன் சொன்னதை எதுவும் நாம் படிக்கவில்லைபடிக்கவில்லையென்றாலும்அவன் காட்டிய வழிகளில்தான் வாழ்கிறோம்அந்த வகையில் பெருமைப் படலாம்இந்த கட்டுரையைப் படிப்பவர்களின் ஒருவர் தொல்காப்பியம் வாங்கி மெய்ப்பாட்டைப் படித்தால்தொல்காப்பியத்திற்கு கிடைத்த வெற்றியாக பாவிக்கிறேன்.

முத்துப்பிள்ளை
4/7/1. 
வடக்கு வெள்ளாளர் தெரு
த்தூர்
அஞசல் 624701 
கைபேசி 91501 06069.
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.