Tuesday 30 December 2014

இல்லற வாழ்வை இனிக்க வைக்காத கிரக நிலைகள். (4)


உதாரணம் ஜாதகம். 8. இலக்கினம் மேஷம். இராசி விருச்சிகம். இலக்கினத்துக்கு ஏழாமிடமெனும் களத்திர ஸ்தானத்தில் சூரியன், குரு, சுக்கிரன் கூடிநின்றால், பெண்களால் கைவிடப்பட்டவர் ஆவார்.

கேது

இல
செவ்






13.11.1959. மாலை. ஆண் துறவி
இராசி










சனி

சந்  புதன்
சூரி குரு சுக்

இராகு


இராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் சூரியன், சுக்கிரன் அமர, பொன்னவன் என்றழைக்கப்படும் குருவுக்கு, இரண்டாமிட தொடர்பு ஏற்பட்டால், பெண்களால் நிராகரிக்கப்பட்டவர் ஆவார்.
சுக்கிரனுக்கு பனிரெண்டில் இராகு, எட்டில் செவ்வாயும் இருப்பது, திருமணத் தடையை ஏற்படுத்தும்.
இராசிக்கு விரைய ஸ்தானத்தில், இராசிக்கு ஏழாமதிபதி சுக்கிரன் அமர்ந்து, திருமண வாழ்வை விரையப்படுத்தி விடுவார். துறவு வாழ்க்கையைத்தந்து விடுவார். மேலும், மறைவு ஸ்தானங்களில் சுக்கிரன் அமர்ந்தாலே திருமணம் நிகழாமல் போய்விடுகிறது.
உதாரணம் ஜாதகம். 9. இலக்கினம் கடகம். இராசி சிம்மம். திருமணத்துக்குத் தடையே, சனி ஏழில் நிற்க, செவ்வாய் காண்பது தான். சந்திரனுக்கு ஏழில் குரு. இந்த குரு சந்திர யோகத்துக்கான விளக்கம், முதல் உதாரண ஜாதகத்திலே கொடுக்கப்பட்டுள்ளது.  






செவ்


குரு

30.08.1962. காலை. 05.05 ஆண்
இராசி

இல இராகு


சனி கேது

சூரி  சந்







புதன் சுக்


இலக்கினத்துக்கு ஏழாமிடத்தில் சனி, கேது தொடர்பே திருமணத் தடையைத் தரும். மேலும், இலக்கினத்தில் இராகுவும், ஏழில் சனி, கேதுவும், பனிரெண்டில் செவ்வாயும் அமர்ந்திருப்பதும், திருமணம் நிகழாமல் போனதற்குக் காரணமாகும்.
உதாரணம் ஜாதகம். 10. இலக்கினம் கன்னி. இராசி விருச்சிகம். கால புருஷனுக்கு ஏழாமிடமான துலாமிலும், இலக்கினத்துக்கு இரண்டாமிடமான குடும்ப ஸ்தானத்தில் சூரியன் நீசமடைவதும், திருமணம் நிகழாமல் போவதற்கு முழுக் காரணமாகும். இலக்கினத்துக்கு ஏழாமிடத்தில் குரு வக்கிரமடைந்து, களத்திரக்காரகன் சுக்கிரனைக் காண்பது முறை தவறிய வாழ்வைத் தருவார்.

குரு ()





இராகு





15.11.1963 காலை.ஆண்
இராசி




சனி






கேது


புத செவ்
சுக் சந்
சூரி

இல


இந்த ஜாதகர் தாலி கட்டாமல் நீசப்பெண்ணுடன் குடும்பம் நடத்திவருகிறார். எட்டாமதிபதி செவ்வாய், சுக்கிரனுடன் கூடி மூன்றிலமர்வது வீர்யமிழந்த நோயாளி பெண்ணே இவருடன் வாழ்வார். குடும்பாதிபதி சுக்கிரனுக்கு, இரண்டில் கேதுவும், எட்டில் இராகுவும், பனிரெண்டில் சூரியனும் இருப்பது, திருமணத் தடையை உறுதி செய்கிறது. மேலும்,
ஏதோவொரு இராசியில் கிரகங்கள் கூடுவதால், குடும்பவாழ்வில் வெறுப்பு வரும். கால புருஷனுக்கு எட்டாம் வீட்டில் சந்திரன், புதன், சுக்கிரன் எனும் சுபக்கிரகங்கள் கூட, குரு காண்கிறார். அதனால், இந்த ஜாதகர்க்குநல்லொன் நால்வரும் நாலோனுடன் கூடி, எட்டிலமர, கிட்டாது மணமாலைஎனும் விதி, மிகச்சரியாகப் பொருந்துகிறது.
பருவம் கடந்தும் திருமணம் நிகழாமல் போவதற்கு, பல காரணங்கள் இருந்தாலும், நாமும் சில காரணங்களை ஜாதக ரீதியாக ஆய்வு செய்தோம்.
                                       வாழ்கதமிழ்
                                    வாழ்க   வாழ்கவே

       ஆய்வு .   முத்துப்பிள்ளை. ஆத்தூர்.91501 06069.