Tuesday 30 December 2014

இல்லற வாழ்வை இனிக்க வைக்காத கிரக நிலைகள். (2)



உதாரணம் ஜாதகம். 2.  இலக்கினம் துலாம். இராசி மிதுனம்.இலக்கினத்துக்கு இரண்டு, ஏழுக்குடைய செவ்வாய் அஸ்தங்கம். இராசிக்கு குடும்பாதிபதியான சந்திரன், தன் வீட்டுக்கு பனிரெண்டில் இராகுவுடன் மறைந்திருப்பதும். குடும்பவாழ்வு அமையாமல் போனதற்குக் காரணமாகும். இராசிக்கு நான்குக்குடைய சுகாதிபதியான புதன், கேதுவுடன் இணைந்திருப்பது தேகசுகம் இல்லாமலே போய்விட்டது.


குரு




சந்   இராகு

சுக்  சனி

27.12.1964 காலை ஆண்
இராசி




சூரி  செவ்
   

மா


புதன்  கேது


இல




இலக்கினத்துக்கு எட்டாமிடமான திருமாங்கல்ய ஸ்தானத்தில் பாவக்கிரகங்கள் அமர்ந்திருப்பதும், எட்டாமதிபதியுடன் சுக்கிரன் கூடியிருப்பதும் திருமண தடையைத் தரும். மேலும்,
காலபுருஷத் தத்துவத்தின் படி களத்திரக்காரகன் சுக்கிரன், பாதகாதிபதியான சனியுடன் கூடி, பாதகஸ்தானத்திலே அமர்ந்திருப்பதும், சுக்கிரன் நின்ற இராசிக்கு, ஏழு, பனிரெண்டில் பாவக்கிரகங்கள் அமர்ந்திருப்பதும், திருமணம் நிகழாமல் போனதற்குக் காரணமாகும்.
உதாரணம் ஜாதகம். 3. இலக்கினம் விருச்சிகம். இராசி மேஷம். இலக்கினத்துக்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் பாவிகள் தொடர்பு கொள்வதும், சுக்கிரன் அஸ்தங்கம் அடைவதும், ஏழாமிடத்தில் உள்ள செவ்வாயை, சனி காண்பதும் திருமணம் நிகழாமல் போனதற்கு காரணமாகும்.


இராகு  சனி

சந்
சூரி    செவ்
சுக்

புதன்


        25.05.1968 காலை7.30 ஆண்
                
                 இராசி





குரு




இல


கேது

மேலும்,ஏழாமிடத்தில் சுக்கிரன், செவ்வாய் கூடுவது விதவையின் மேல் நாட்டம் வரும்.ஆறுக்குடைய செவ்வாயும், ஏழுக்க்டைய சுக்கிரனும் சூரியனுடன் கூடி, ஏதோவொரு ராசியில் அமர்ந்திருந்தால், அதீத போகம் எண்ணம் இல்லாமல் இருப்பார். இலக்கினத்துக்கு மறைவில் அதிபதியான செவ்வாயும், சுக்கிரனுக்கு அருகில் அமர்ந்திருப்பதும், திருமணம் நிகழாமல் போனதற்குக் காரணமாகும்.
உதாரணம் ஜாதகம். 4.
இலக்கினம் தனுசு. இராசி கடகம். இலக்கினத்துக்கு ஏழாமதிபதியான புதன், பாதாகாதிபதியாய் கேதுவுடன் கூடியிருக்கத் திருமண வாழ்வு அமையாது   
 குரு




இராகு

    சுக் சனி
         28.01.1964 காலை.04.19. ஆண்
                 இராசி

      சந்

      சூரி செவ்




இல புதன் கேது






திருமணம் நடந்தாலும் வாழ்க்கையில் பிரிவினைதான் ஏற்படும். இராசிக்கு ஏழில் அமர்ந்துள்ள செவ்வாய் அஸ்தங்கம் அடைவதும்,இராசிக்கு எட்டமிடத்தில் சனி, பாவிகளுடன் அமர்ந்திருப்பதும், திருமணம் நிகழாமல் இருப்பதற்கான நிலையை உறுதி செய்கிறது. மேலும்,
சந்திரனுக்கு பனிரெண்டில் போகக்காரகன் இராகு இருப்பது, போக எண்ணமிருக்காது. இராசிக்கு ஏழாமதிபதி, எட்டில் மறைவதும், ஏழில் பாவிகள் அமர்ந்திருப்பதும், திருமணம் நிகழாமல் போனதற்கு காரணமாகும்.

தொடரும்.

No comments:

Post a Comment