Tuesday 16 December 2014

ஜோதிட கவிச்சோலை.



            1
அந்தணன் , புதன்கூட
அழகன்

2    
மீனக்குளத்தில்
அருணன்மதி நீராட,
பூத்ததோ,
மலர்ந்த முகம்.

3    
ஒன்றோன்
எட்டில் அமர,
மறைவான கலையொன்று
அறிவான்.

4
ஒன்றில்
குரு,மதி,சனிகூட,
மாயையை வெல்லும்
மகாமுனி.
மனதைக் கொல்லும்
தவமுனி.

   
         5
இரண்டில்                                  
கரும்பாம்புடன் புதன்சேர,
கற்கும் கல்வியில்
கருங்கல் விழும்.


6
 வெய்யோனும்,
சேயோனும்
வாக்கினிலமர,
மேல் கொண்ட பார்வை.

7
புதனும் , வெள்ளியும்
வாக்கினில மர,
கீழ்கொண்ட பார்வை,8 


      8
குருமதி
இரண்டில்கூட,
நேர்நோக்கியப் பார்வை.


9
வெள்ளியுடன்
இராகு , சனிகூட,
பொய்யிலே பிறந்த
புலவர் பெருமகன்.


10
இரண்டு , ஐந்தில்சேய்

நெஞ்சக்கூட்டுக்குள்         
எண்ணங்களைச்
சிறைப்படுத்தாதவன்.

மனதுக்குள்
மறைவில்லை.

இரகசியங்களின்
கர்ணன்.


11
இரண்டில் சேய்நிற்க
மண்கலய உணவை
அமிழ்தென்பான்.


12
வாக்கோன் நீச்சம்பெற,
அம்மா தாயே”-என
நாக்கோன்
யாசிக்கும்.



13
மதிவெள்ளி
வாக்கோன்
எங்கேனும்கூட
விழியுண்டு
ஒளியில்லை.

14
பரிதியை
பேரன்காண,
வரவுகள்
அற்றுப்போகும்.


15
ஒன்றோனை
இரண்டோன்காண,
.இரை உண்ணுமுன்                                                           
இறையை எண்ணுபவன்.


16
அந்தணனுடன்
வாக்கோன்மறைய,
நாசிபழுதாகி,
நாக்கசையும் வாக்கும்
பழுதாகிப்போம்.


17
இரண்டோன்
உதயன் மறைய,
இப்பிறவியில்
விழிகளில் ஒளியில்லை.


18
சனிமதி
இரண்டில்
திக்குவாய்.


19
இரண்டோன்
பாவியுடன்கூட,
அற்பக்கல்வி.


20
உச்சனை
நண்பன்காண;
ஊரறியபேர்பெறுவான்.

21
அரவோடு
இரண்டோன்
இரண்டில் இணைய,
கல்வியில் சிறந்து
சொல்மழை பொழிவான்.

22
ஒன்றோன்
இரண்டோன்,குளிகன்கூட,
விழியேஇல்லை.                                           


23
இரண்டோன்
இரண்டில மர,
கஞ்சத்தனத்தில்
மிஞ்சிநிற்பான்.


24
இரண்டோன்
இராகுகூட,
தேவதைவசியன்.



25   
குருவோடு
புதனிருக்க,
குடும்பம் இரண்டு.


26
தனாதிபதி
இலாபமேற,
மேலானபலன்களே.


27
இரண்டாமிடம்
குருவீடாகி
குரு,சேய்கூட,
குபேரன்.


28
கோணதிபதியும்
ஒன்றோனும்கூட,
கோமகனாவான்/
குமரனை வணங்கும்
குலமகனாவான்.


29     
நாலோன் ஒன்றிலேற,
நல்லோன்காண,
நாடறிந்தகல்வியில்
வல்லோன் ஆவான்.


30
ஒன்றோன்
மறைவில் சஞ்சரிக்க
என்றும்
மனதில் சஞ்சல்மே.


31
ஆறெட்டேழில்
வெய்யோனும்,
சேயோனும்சேர,
அக்னியில்
பூத்த உடம்பு.


32
மேடஇலக்கினம்.
சனிபுதன்
மூன்றில் கூட
கால்கோணலாகி
கோலூன்றி நடப்பான்.


33
விருச்சிகத்தில்சேய்
வீடுமனைத்
தேடிவரும்.


34
ஒன்பதோன் எட்டில்
பத்தோன் பதினோன்றில்
கெட்டிடும்யோகமெல்லாம்


35
மேடமது ஒன்றாகி
கடகம் சிம்மத்திலசீற,
கடல் கடந்துKKKம்
தேடுவான்.


36

விருச்சிகத்தில்சேய்
வீடுமனைத்
தேடிவரும்.

34
ஒன்பதோன் எட்டில்
பத்தோன் பதினோன்றில்
கெட்டிடும்யோகமெல்லாம்


          35
நான் கோனை
ஆறோன்காண
காமதேனுவைக்                                                            
கொன்ற


36
சிம்மம் இலக்கினம
நான் கோனை
ஆறோன்காண
காமதேனுவைக்                                                            
கொன்ற
கொடும்பாவியாவன்


37
 மிதுன இலக்கினம்                                                                                 
மதிபுதன்  
மயங்கிக்கூட
பேராசைப் பேயழகன்


38
 பாவரோடு
அநதணன் கேந்திரமேற
அங்கம் பழுதாகிப்போவான்.


39
கடக இலக்கினம்
குரு,
மதியைக்கண்டால்
கூனன்.
.
40
சனி
மீனம் கண்டால்
கூனன்.                                                                                                                                        

41
 எட்டோன்
ஒன்பதோன்கூட
தரித்திரமானவன்.
                        

42
வெய்யோனும்                                 
சேயோனும்
ஒன்றின் மேலேற,
சிடுசிடுத்தவன்
முகம் கடுகடுத்தவன்.


43 
உயிரோடு எவரும்
உறவாகாத போது
கபடு அற்றவன்.


44
ஒன்றோன் பாவியுடன் கூடி
மறைவிலிருக்க
சீக்காலி.


45
ஐந்தோனை
மதி,புதன்காண
மாமன் வீட்டில்
பிறப்பான்.


46
ஒன்றை சனிகாண
வயது மூத்தவளுடன்
வாழ்வான்.


47
ஒன்றில் நிழல்படர,
ஒன்றோன் மறைய
தேகஅங்கத்தில்
பங்கம் வரும்.


48
மிஞ்சும் யோகியும்
பாவச்சந்தியில் நிற்க,
அஞ்சியே பலன்தருவான்.


 49
மதியும், வெள்ளியும்
மறைவாகப் போக,
மாலைக்கண்ணன்.
         

 50
எழு கோள்களும்
உயிரை நோக்க,
உலகையாள்வான்.
         

 51
பிறப்பு காலத்தில்
சத்தானப் பலனைத் தராத
அத்தங்கக் கோள்,
சுத்தி சுத்தி வந்தாலும்
சுபப்பலனைத் தரமாட்டான்.
         

 52
சுடர்கிரகமிரண்டும்
நிழலோடு கூட,
இருளாகிப் போவார்.
                   

53
கிரகண தோடம் - பிறப்பில்
எவரையும் விடார்.



முத்துப்பிள்ளை. ஆத்தூர். திண்டுக்கல் மாவட்டம். 91501 06069. 93456 56268.  

No comments:

Post a Comment