Tuesday 30 December 2014

இல்லற வாழ்வை இனிக்க வைக்காத கிரக நிலைகள். (3)




உதாரணம் ஜாதகம். 5.இலக்கினம் மிதுனம். இராசி துலாம். இலக்கினத்துக்கு ஏழாமிடத்தில் சனி,செவ்வாய் கூடினாலும், பார்த்துக்கொண்டாலும் திருமணயோகம் கைகொடுக்காது

புதன் சனி

 சூரி இராகு
சுக்கி

இல


       28.01.1964. காலை 04.19 ஆண்
                 இராசி

      குரு  மா

     






சந்  கேது

செவ்


இவரின் ஜாதகத்தில் சனி, தன் பத்தாம் பார்வையாக, ஏழாமிடத்தையும், செவ்வாய் தன் நான்காம் பார்வையாக, ஏழாமிடத்தையும் காண்கின்றனர். இதனால் திருமண வாழ்வே இல்லாமல் போகவும், இதுவும் ஒரு காரணமாகும். மேலும், கிரகணம் விலகிய ஜாதகமானாலும், தோஷம் தோஷம் தான்
உதாரணம் ஜாதகம். 6. இலக்கினம் சிம்மம். இராசி மீனம். சந்திரனுக்கு ஏழில் குரு, இது குரு சந்திர யோகம் தான். இதற்கான விளக்கம் உதாரண ஜாதகம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது. ஸ்திர லக்கினத்துக்குப் பாதகாதிபதியான சனி, சிம்ம லக்கினத்துக்கு ஏழாமதிபதியாகி, பாக்கியஸ்தானத்தில் நீசமும் அடைவதாலும், இப்படிப்பட்ட சனியை எந்த சுபக்கிரகங்களும் காணாததாலும் திருமணமில்லை.  

சந்  இராகு

சனி
சுக்கி

சூரி  புதன்


05.07.1969. காலை. 09.30. பெண்
இராசி

       மா

     

இல




செவ்


குரு  கேது


இலக்கினத்துக்கு எட்டாமதிபதியான திருமங்கல்ய அதிபதி குருவுடன், பிரிவினைக்கிரகமான கேதுவும் கூடி, இராசிக்கு ஏழாமிடத்திலும், இலக்கினத்துக்கு இரண்டாமிடமான குடும்பஸ்தானத்திலும் அமர்வதாலும், தாலி கட்டிக்கொள்ளாத, குடுமபவாழ்வு இல்லாத, மறைமுக வாழ்வை வாழ வைப்பார்கள். சுக்கிரனுக்கு இரண்டில் சூரியனும், ஏழாமிடத்தை செவ்வாயிம், பனிரெண்டில் சனி கூடுவதும், சந்திரன், செவ்வாயை கேதுவும் பார்வையால் தொடர்பு கொள்வதும், திருமணம் நிகழாமல் போனதற்குக் காரணமாகும்.
உதாரணம் ஜாதகம். 7. இலக்கினம் சிம்மம். இராசி தனுசு. இலக்கினத்துக்கு ஏழாமதிபதியான சனி பாதகதிபதியாய், குடும்ப வீடான இரண்டாம் இடத்தில் கேதுவுடன் அமர திருமணமில்லை.
சுக்கிரனுக்கு ஏழாமிடம், பனிரெண்டமிடத்தினில் பாவிகள் அமர்வதும், இலக்கினத்துக்கோ, இராசிக்கோ, ஏழாமிடத்தை சுபக்கிரகங்கள் பார்க்கவில்லை. மாறாக, பாவக்கிரகங்கள் தான் பார்க்கின்றன. குறிப்பாக, செவ்வாயும் சனியும் ஏழாமிடத்தை காண்பது திருமணத் தடையை உறுதிப்படுத்துகிறது.மேலும்,
சுக்கிரன் எந்த ராசியில் நிற்கிறாரோ, அந்த ராசியதிபதியை சனி கண்டாலும்,அல்லது சந்திரன் எந்த ராசியில் நிற்கிறாரோ, அந்த ராசியதிபதியை சனி கண்டாலும், அது சன்னியாசி யோகத்தைத் தரும்.

செவ்  இராகு

சுக்கி
குரு

சூரி   புதன்




26.06.1894.காலை. ஆண்
இராசி






இல


சந்

மா

சனி கேது


இவர் ஜாதகத்தில், சந்திரன் நின்ற ராசியின் அதிபதி குருவாகும். இவரை மந்தன் என்றழைக்கப்படும் சனி காண்கிறார். அதனாலும் திருமணம் நிகழாமல் போனதற்கு காரணமாகும்.

தொடரும்

No comments:

Post a Comment