Tuesday 30 December 2014

இல்லற வாழ்வை இனிக்க வைக்காத கிரக நிலைகள். (1)


         ஊழின் பெருவலியாஉள மற்ற ஒன்று
         ஊழினும் தான்முந் துறும்.     குறல்.380.
ஊழ்வினையை விட வலிமையானவை வேறு எவையேனும் உண்டோ? இந்த ஊழ்வினையை நம்மிடமிருந்து விலக்க, வேறு ஏதேனும் மாற்று வழியை ஆராய்ந்து, அதை செயல் படுத்தி தப்பிவிடலாம் என்றாலும், அங்கும் முன் வந்து நிற்பது ஊழே.
ஆடிப்பட்டம் தேடி விதைஅப்படி விதைக்கவில்லையென்றால் பயிர் தொழிலால் பயனில்லை. இது உழவன் அறிந்த பாடம். “பருவத்தே பயிர் செய்அப்படி பருவம் கடந்து செய்யப்படும், எந்த செயலும் நல்ல பலன் தராது என்பதை, உழவன் மட்டுமல்ல, எல்லா தரப்பு மக்களும் அறிந்தபாடம்.
ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ள பருவ காலங்களை ஏழு என்னும் எண்ணிக்கையில் பிரித்தான் திராவிடன்.
1)  பாலன்.
2)  மீளி
3)  மறவோன்
4)  திறலோன்
5)  காளை
6)  விடலை
7)  முதுமகன்  எனும்,
ஏழு பருவத்தில் திருமணப் பருவமாக காளை, விடலைப் பருவங்களைத்     தேர்ந்தெடுத்தான்.
1)  பேதை
2)  பெதும்பை
3)  மங்கை
4)  மடந்தை
5)  அரிவை
6)  தெரிவை
7)  பெரிளம் பெண்  எனும்,

ஏழு பருவத்தில் திருமணப் பருவமாக பெண்ணுக்குஅரிவை, தெரிவைபருவத்தைத் தேர்ந்தெடுத்தான். ஆணுக்கும், பெண்ணுக்கும் இவ்விரு பருவங்களைத் தவிர்த்து செய்யப்படும் திருமணம் குழந்தைத் திருமணம் அல்லது பருவம் கடந்த திருமணமாகவும் கருதப்படுகிறது. இப்போது நாம் பருவம் கடந்தும் திருமணம் ஆகாமல் இருப்போரின் ஜாதகங்களை ஆய்வு செய்வோம்.
உதாரண ஜாதகம். 1. இலக்கினம் ரிடபம். இராசி  மகரம். இவரின் ராசிக்கு ஏழாமிடமான கடகத்தையோ, இலக்கினத்துக்கு ஏழாமிடமான விருச்சிகத்தையோ எந்த சுபக்கிரகமும் பார்க்கவில்லை. ஆனால், முழுச் சுபக்கிரகமான குரு விருச்சிக ராசியைக் காண்கிறது என்றாலும், குரு எட்டுக்குடையக் கிரகமாகும். எட்டுக்குடைய கிரகமும், எட்டிலமர்ந்துள்ள கிரகமும், எட்டாமதிபதியின் பார்வையும் நன்மை தருவதில்லை. மாறாக, கெடுதலான பலன்களையையே தரும். ஆதலால், ஏழாமிடத்தை எல்லா கிரகங்களும் கைவிட்ட நிலைதான். அதனால், திருமணமும் நடைபெறாத நிலையே உண்டாகும்.


இல
கேது





இராசி.

குரு

               சந்தி
  சூரிசுக்கி
செவ்



இராகு
சனி

புதன்


சரி, குருவை சந்திரன் காண்கிறான்இது கஜகேசரி யோகமல்லவா? ஒருவர் ஜாதகத்தில் கஜகேசரி யோகமிருந்தால், சிங்கத்தைக் கண்ட யானைக்கூட்டம் போல், தோஷங்கள் எல்லாம் சிதறி ஓடிவிடும் என்போமேயானால் தோஷம் சிதறாது. குரு, சந்திர அவயோகம் தான் ஏற்படும்.
குருவும், சந்திரனும் இணைந்தாலோ, சமசப்தமமாய் பார்த்துக்கொண்டாலோ, அது குரு, சந்திரயோகம் தான். குருவும், சந்திரனும் நான்கு, பத்தில் ஒருவருக்கொருவர் மாறி அமர்ந்தால்  மட்டுமே கஜகேசரி யோகமாகும்.
குருவும், சந்திரனும் கூடுவது அல்லது பார்த்துக்கொள்வது மட்டுமே குரு, சந்திர யோகமாகும். இது ஒரு அவயோக அமைப்பேயாகும்.
ஏழாமிடத்தில் குருவும், சந்திரனும் கூடும்போது, என்ன பலன் நிகழுமோ, அதே பலன் ஏழாமிடத்தில் பார்வையால் சந்தித்துக்கொள்ளும் போதும் நிகழும்.
               பாரப்பா இன்னுமொரு புதுமை கேளு                                                                                                                                                                      
                 பால்மதியும், பரமகுருவும் ஏழில் நிற்க
               சீரப்பா ஜென்மனுக்கு வேட்டலில்லை
                 செந்திருமால் தேவியுமே விலகி நிற்பாள்
              கூரப்பா குமரியவளில்லாமல் தான்
                 குமரனின் அங்கிசமும் நாசமாச்சு
              ஆரப்பா அயன் விதியை கூறலுற்றேன்
                 அப்பனே புலிப்பாணி பாடினேனே
இதே போல் சமசப்தமத்தில் உள்ள ஜாதகங்கள், இக்கட்டுரையில், ஆறாவது, ஒன்பதாவது உதாரண ஜாதகங்களாய் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும்,
திருமாங்கல்ய ஸ்தானமான எட்டாமிடத்தில், பாவக்கிரகங்கள் இருப்பதும், களத்திரக்காரகனான சுக்கிரன், சூரியனுடன் இணைந்து அஸ்தங்கம் அடைவதும், திருமணம் நிகழாமல் போனதற்கு காரணமாகும்.
இலக்கினத்துக்கு ஆறுக்குடைய சுக்கிரன், ஏழாமதிபதி செவ்வாய், சூரியனுடன் கூடி, ஏதோவொரு இராசியில் இருப்பது, ஜாதகர்க்கு போக எண்ணமே இருக்காது.
இலக்கினத்துக்கு மறைவு ஸ்தானங்களிலோ, இராசிக்கு மறைவு ஸ்தானங்களிலோ, களத்திரக்காரகன் சுக்கிரன் அமர்ந்திருப்பதும், இராசிக்கு இரண்டாமதிபதியான குடும்பஸ்தானாதிபதி சனியை, எட்டுக்குடைய சூரியன் காண்பதும், இலக்கினத்துக்கு இரண்டாமதிபதியான குடும்பஸ்தானாதி புதன் உச்சம் பெற்றிருந்தாலும், பாவிகள் மத்தியில் அமர்ந்திருப்பதும், திருமணம் நிகழாமல் போனதற்கு காரணமாகும்.
தொடரும்

No comments:

Post a Comment