Friday 12 June 2015

45. இன்றுவொரு ஜோதிடத் தகவலை அறிந்து கொள்வோமா?

நம் கண்முன்னே, நமைச் சார்ந்த இனம் அழிக்கப்பட்டது. உலக வல்லாதிக்கங்கள் கோரப்பிடியில் சிதைந்து சிதைக்கப் பட்ட காலத்தில், இந்த உயிரும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. சரியான போர் யுக்தியை, கருவறுக்க, கிழக்கே ஒரு கருணாவும், இங்கே ஒரு கருணாவும் கருவியானார்கள். வஞ்சகத்தால் விளைந்த நஞ்சுக்கோப்பையை அவர்கள் அருந்தியதால், எம்மக்கள் சிதறடிக்கப்பட்டனர். ஆனாலும், நாங்கள் “ சாம்பல் மூடிய தீக்கங்குகள் “. உள்ளுக்குள்ளே குமுறிக் கொண்டிருக்கும் ‘ எரிமலை “ என்பதை உணர்த்தும் காலம் வரும்.

இலக்கினத்திற்கு பூர்வபுண்ணியாதிபதியான ஐந்துக்குடையவனும், இலாப, வரவுகளின் அதிபதியான பதினொன்றுக்குடையவனும் பரிவர்த்தனைப் பெற, ஐந்தாமிடத்தில் சந்திரன் அமர, பல போர்க்களங்களில் வெற்றி வாகை சூடுபவனாகவும், தம் மக்களைக் காப்பவனாகவும், அதிக செல்வங்களை திரட்டும் ஆற்றல் உள்ளவனாகவும் இருப்பார் என்கிற தகவலுடன், உங்கள்….  

நாம் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யவே, உழைக்க துவங்குகிறோம். ஆனால், காலங்களின் மாறுபாட்டால், மனித மனங்களின் வேறுபாட்டால், எது தேவை, எது தேவையற்றது என்பதை தீர்மானிப்பதில் மயக்கம் ஏற்படுகிறது. பலநேரங்களில் மனித உழைப்பு திருடப்படுகிறது. இன்னும் சில நேரங்களில் வீணான தேவைகளை நிறைவு செய்யப் பயன்படுகிறது. அதனால், மனிதனுக்கான நிலையான உழைப்பு என்பது மிகவும் அரிதாகவே நடக்கிறது. 

இலக்கினத்திற்கு இரண்டுக்குடையவன் குருவுடன் கூடி, தனுசு வீட்டினில் கேது சாரம் பெற்றிருக்க, நிலையான செல்வங்களை தேடுவதில் வல்லமை உள்ளவனாக இருப்பான்

46.
நாம் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யவே, உழைக்க துவங்குகிறோம். ஆனால், காலங்களின் மாறுபாட்டால், மனித மனங்களின் வேறுபாட்டால், எது தேவை, எது தேவையற்றது என்பதை தீர்மானிப்பதில் மயக்கம் ஏற்படுகிறது. பலநேரங்களில் மனித உழைப்பு திருடப்படுகிறது. இன்னும் சில நேரங்களில் வீணான தேவைகளை நிறைவு செய்யப் பயன்படுகிறது. அதனால், மனிதனுக்கான நிலையான உழைப்பு என்பது மிகவும் அரிதாகவே நடக்கிறது.
இலக்கினத்திற்கு இரண்டுக்குடையவன் குருவுடன் கூடி, தனுசு வீட்டினில் கேது சாரம் பெற்றிருக்க, நிலையான செல்வங்களை தேடுவதில் வல்லமை உள்ளவனாக இருப்பான் என்கிற தகவலுடன், உங்கள்…..

No comments:

Post a Comment