Saturday 27 June 2015

53. இன்றுவொரு ஜோதிடத் தகவலை அறிந்து கொள்வோமா?





இந்த பூமியில்  நிரந்தரமாய் இருக்கப்போவதில்லை என்பதும், நாம் இழுத்துவிடும் மூச்சுக்காற்றும் நம்முடையதில்லை என்றும் தெரியும் ஆனாலும், வீடு, வாசல், நிலங்களைத் தனதாக்கிக் கொள்ளவேண்டும் என்கிற பேராசை மட்டும் குறைவதில்லை. நமக்கு என்றைக்குமே சொந்தமாகாத பூமியை சொந்தமாக்கிக் கொள்ள ஆர்வம் காட்டுகிறோம். இந்த பூமியின் வளத்திற்காக துரும்பைக் கூட எடுத்துப் போடாத நாம், அதை விலைக்கு வாங்கிவிட எறும்பைப் போல உழைக்கிறோம். கடைசியில் மண்ணுக்கே இரையாகிறோம்.

உங்களின் ஜாதகத்தில் புதனும், சுக்கிரனும் கூடியிருந்தால், நிலங்களை வாங்குவதில் ஆசையும், ஆர்வமும் கொள்வான். புத்தியும், அலங்காரமும் கூடுவதால், வார்த்தைகளில் வெல்லமுடியாதவனாய், தன் அலங்காரப் பேச்சால் சபைகளை வசப்படுத்திக் கொள்பவனாகவும் இருப்பான் என்கிற தகவலுடன், உங்கள்……


54. 
பலரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட வண்டி, வாகனங்கள் உள்ளனர். ஆடம்பரத்துக்காகவும், அவசியத்துக்காவும், பயன்படுத்திவரும் நாட்டில், எப்போதுமே தன் கால்களையும், அரசுப் பேருந்தையும் பயன்படுத்துபவர்களும் அதிகப்பேர் இருக்கின்றனர். இந்த நாட்டில் உள்ளவர்களால், பதிமூன்றாயிரம் ரூபாய்க்கு தலைக்கவசமும் விற்கவும், வாங்கவும் முடியும்.  அதேசமயம், அன்றாடம் பதிமூன்று ரூபாய் கூட வருமானம் பார்க்க முடியாத மக்களை, ஏழைகளாகவே வைத்திருக்கவும் முடியும்.

ஒரு ஜாதகத்தில் நான்காமிடத்தை வண்டி வாகனத்துக்கு உரிய இடமாக சொல்கிறோம். கால புருட ராசிகளில் நான்காமிடம் சந்திரன் வீடாகும். வண்டி வாகனத்தின் காரகன் சுக்கிரனாகும். இவர்கள் ஒருவருக்கொருவர் நான்கினில் இருந்தால், பல வாகனங்களுக்கு அதிபதியாக இருப்பான். அதாவது, சந்திரன் நிற்குமிடத்தினில் இருந்து சுக்கிரன் நான்கினில் இருக்கவும்,  சுக்கிரன் இருக்கும் வீட்டினில் இருந்து நான்கினில், அல்லது, சந்திரனுக்குப் பத்தில் சுக்கிரன் இருப்பதும் வண்டிவாகன யோகத்தைத் தரும் என்கிற தகவலுடன், உங்கள்……


55.  
இந்த மனித மனம் தனக்குள் எந்த கட்டுப்பாடுகளையும் விதித்துக் கொள்வதில்லை. தேவை, தேவையற்றது என்று, அதுவால் பேதம் பிரித்துப் பார்க்கத் தெரியவில்லை. அதனால்தான், மனதால், எங்கு வேண்டுமானாலும் தாவிக் குதிக்க முடிகிறது. பணம், மனம் என்ற இரண்டு மாயசக்திகளும் மனிதனைப் பாடாய்படுத்துகிறது.
உங்களின் ஜாதகத்தில் இலக்கினதிபதியும், பதினொன்றுக்குடையவனும் பரிவர்த்தனை அடைந்தோ, கூடியோ, உச்சம் பெற்றோ, இருந்து, பணத்தினைத் தரும் இரண்டாம்வீட்டில் பத்துக்குரியவன் இருந்தால், உங்களுக்கு செல்வமும், செல்வாக்கும் பெருகிக் கொண்டே போகும் என்கிற தகவலுடன், உங்கள் ….

கைபேசி 87548 73378    91501 06069

No comments:

Post a Comment