Sunday 7 June 2015

37. இன்றுவொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?




ஒரு “ மாபெரும் சபைதனில் நீ நடந்தால், உனக்கு மாலைகள் விழவேண்டும் “ இந்த பொன்வரிகள் மெய்பிக்கப்படும்போது, வாழ்க்கையின் பிறவிப்பயனை அடைந்து விடுவார்கள். ஓரிடத்தில் இருந்து மறு இடத்துக்கான நகர்தலை ஜென்மா அடையவேண்டும். அந்த  “ சூட்சுமக் கதவுகள் “ எப்போதுமே திறந்திருக்காது. அது சிலருக்காகத் திறப்பதும், பலரை உள்ளிருந்து வெளியே தள்ளுவதற்குமே திறக்கும். நாம் அதை விதிப்பயனால் மட்டுமே தட்டிக் கொண்டிருக்க முடியும்.

இலக்கினத்திற்கு இரண்டாமிடத்தில் முழுச்சுபக்கிரகமான குரு இருந்து, அவரை மற்றச் சுபக்கிரகங்கள் காண, குருவின் காரகங்கள் எவையோ அவையனைத்தும் கிடைப்பதுடன், வண்டிவாகனமும், மூத்தவர்களின் ஆசிர்வாதமும், நேர் வழியில் வருமானம் ஈட்டும் பக்குவமும் கிட்டும் .

38.
ஒவ்வொரு மனிதனும் பசியின் கோரப்பிடியில் இருந்து விடுபடவே போராடினாலும், அவனின் தேவைகள் அனைத்தும் பசியில் இருந்துதான் நிவாரணம் தேடிக் கொள்கிறது. எல்லா நோய்களுக்கும் மருந்து கண்ட சித்தனையும் விட்டுவைக்கவில்லை. “ கொல்லன் உலைபோல கொதிக்குதடா என் வயிறு “ என்று பாட வைக்கிறது. அதனால், பசியென்று வருவோருக்கு ஒருவேளை உணவிடுங்கள். அது அவனின் ஆத்மப்போராட்டத்திற்கான உத்வேகமாகமாகக் கூட இருக்கலாம்.

இலக்கினத்திற்கு இரண்டாமதிபதியுடன் குரு, புதன் தொடர்பு கொண்டாலோ, அல்லது இவர்களின் பார்வையில் இரண்டுக்குடையவன், கேந்திரத்தில் இருந்தாலோ, ஜாதகர் அன்னதானமிட்டு அனைவரையும் காப்பார் .

91501 06069

No comments:

Post a Comment