Saturday 27 June 2015

50. இன்றுவொரு ஜோதிடத் தகவலை அறிந்து கொள்வோமா?




நம் முன்னோர்கள் பல நுட்பமான செய்திகளையும், மிக அழகான பாடல் வரிகளில் புனைந்து சொல்லியுள்ளனர். நம் பெரியவர்கள்,  வேறு எந்த கிரகத் தொடர்புகளையும் சொல்லாமல், இரண்டுக்கிரகங்களை மட்டும் வைத்து, அற்புதமான செய்திகளைச் சொல்லியுள்ளனர். அதில் ஒன்றுதான் இது….. ,
சனிக்கும், சுக்கிரனுக்கும் ஏதோவொருவகையில் தொடர்பு இருக்கவேண்டும். அதாவது, இருவரும் கூடியிருக்கலாம், சப்தமத்தில் பார்த்துக் கொள்ளலாம், சார பரிவர்த்தனையோ, பாவகப் பரிவர்த்தனையோ, அல்லது, அருகருகே அமர்ந்து கொள்வது போன்ற நிலைகளில் இருந்தால், ஜாதகன் புத்தகம் எழுதுவதிலும், ஓவியங்கள் வரைவதிலும் ஆர்வம் உள்ளவனாகி மற்றக் கோள்களின் கருணையால் பெரியளவில் புகழடைய வாய்ப்புள்ளது. இந்த அமைப்புடையவர்கள் முயற்சி செய்து பாருங்களேன், என்கிற தகவலுடன், உங்கள்……


51. 

ஒவ்வொரு மனிதனும் தன் பெருங்கனவாக காண்பது, தனக்குவொரு வீட்டை, தன்னுடைய விருப்பப்படியே கட்டிக் கொள்வது தான். ஒரு விவசாயி களஞ்சியம் இல்லாமல் கட்டுவதில்லை. விளைபொருள்களை சேகரித்து வைப்பதற்கென்றே, குறிப்பிட பகுதியை ஒதுக்கியிருப்பான். அதுபோல் தான் நெசவாளியும்…. என்ன தொழில் செய்கிறோமோ, அதற்குத் தகுந்தாற்போல் தன் வீட்டை மாற்றிக் கொள்கிறான். ஒரு பெண் தன் கணவனின் வேலைக்குத் தகுந்தாற்போல், தன்னை தகவமைத்துக் கொள்கிறாலோ, அதேபோல்தான்.
இலக்கினத்திற்கு சந்திரன், சுக்கிரன், செவ்வாய் இம்மூன்று கோள்களும் கேந்திர, கோணத்தில் இருந்தாலும், ஆட்சி, உச்சம் பெற்றாலும், தனக்கான நல்ல வீட்டையும், நிலபுலங்களுடன் நிம்மதியாய் வாழ்வான் என்கிற தகவலுடன், உங்கள்…..


52. 

நாம் எல்லோரும் உயர்ந்த வாழ்க்கை வாழ்வதையே விரும்புவோம். ஆனால், நினைப்பது எதுவும், நினைத்தபடி நடப்பதும் இல்லை. ஏழையாய் இருந்தபோது, கட்டாந்தரையில், கையை அணைகொடுத்து நிம்மதியாய் தூங்கியவனுக்கு வந்த கனவில், பஞ்சு மெத்தையில் சொகுசாய் தூங்கியதாக கனவு வந்தது. ஆனால், உண்மையில் பணக்காரனான போது, பஞ்சுமெத்தையும் நொந்தது. பாலும் கசந்தது.  எல்லாம் மனம் என்கிற மந்திரக்கோல் செய்யும் மாயம்தான்.
இலக்கினத்திற்கு மனமெனும் கோள் கடகத்தில் ஆட்சியாக, அதற்கு நேரே மகரத்தில் ஜெயக்கோளான செவ்வாய் உச்சமடைந்து, ஒன்றுக்கொன்று சப்தமத்தில் பார்த்துக் கொள்ள, ஜாதகன் உயர்ந்த வாழ்க்கை வாழ்வான் என்கிற தகவலுடன், உங்கள் ……    

கைபேசி 8754873378  91501 06069

No comments:

Post a Comment