Saturday 27 June 2015

56.இன்றுவொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?





நம் வாழ்க்கையை நாம் விருப்பியபடி வாழ்ந்திருக்கோமா? அல்லது நம் வாழ்க்கையின் போக்கை, நம்மால் தான் மாற்ற முடிந்திருக்கிறதா? முகநூல் உறவுகளே! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
நம்மைப் பெற்றவர்களும், நாம் பெற்றெடுத்தவர்களும், உறவுகளும், நண்பர்களும் ஏன் காதலியும், அருகில் இருப்போர்களும்,.இன்னும் சொல்லப் போனால் வருபவனும், போகிறவனும் என்று இல்லாமல், நம் பகைவர்களும், துரோகிகளும் கூட, நம் வாழ்க்கையை திசை திருப்பி விடுவார்கள்.

இலக்கினத்திற்கு ஆறாமிடம் என்பது எதிரிகளைச் சொல்லுமிடமாகும். இங்கே, பாவக்கிரகங்கள் இருந்தால் எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். இலக்கினம் என்பது நீங்கள்தான். இலக்கினாதிபதி ஆறில் இருந்தால், நீங்கள் எதிரிகளிடம் இருப்பதாக அர்த்தம் என்கிற தகவலுடன், உங்கள் ...

57-  

தினம்தினம் ஏதோவொன்றை கற்றுக்கொண்டுதான் இருக்கிறோம். ஆனால், சிறுவயதில் படித்த பாடங்களதான், முதுமையிலும் துணைசெய்கின்றன.

பொதுவாக, இலக்கினாதிபதியும், புதனும் கூடினாலே, அனைத்து நூல்களையும் கற்றுக் கொள்வான். அதிலும், ஜீவனவீடான பத்தில் நின்று, வாக்கின் அதிபதி வலுத்தால், கற்ற புராண, இதிகாசம், காப்பியங்களை, ஆன்மீக, இலக்கிய மேடைகளில் முழங்குவதன் மூலம், பொருள் சம்பாதிப்பார் என்கிற தகவலுடன், உங்கள் ...


58- 

ஏற்கனவே சொல்லப்பட்ட கருத்துகளில் உண்மைகள் இருந்தாலும், அந்த கருத்திற்கு நேரெதிராய் ஒரு கருத்து வருமானால், அதிலும் உண்மை உள்ளதா? இல்லையா? என நாம்தான் தீர்மானிக்கவேண்டும் அல்லவா

நம்மிடையே " உச்சனை உச்சன் பார்க்கில் பிச்சையெடுப்பான் " என்ற கருத்து சொல்லப்பட்டு வழக்கத்திலும் எல்லோரையும் பயமுறுத்தும்படி உள்ளது. அதற்கு மாறாக, அச்சப்பட வேண்டாம், அதுபோல் கெடுபலன்கள் நடக்காது. நல்லதே நடக்கும். இதுவும் ராஜயோகத்திற்கு இணையானதே என்பதாக முன்னோர் அனுபவமொழியும் உள்ளது என்ற தகவலுடன் உங்கள் ...

கைபேசி எண் 87548 73378   91501 06069

No comments:

Post a Comment