Sunday 7 June 2015

11. இன்றுவொரு ஜோதிடத்தகவலை அறிந்து கொள்வோம்.





நம் தமிழ்சமூகத்தின் உன்னதமான நிலைப்பாடுகளில் காதலும், வீரமும் சமமான பங்கு வகிக்கின்றன.காதலின் புனிதத்தை, இந்த மொழிபோல், வேறு எந்த மொழிகளும் அகப்பாடல்களுக்கு தனியிடத்தையும், வீரத்தை, கொடையைச் சொல்லும் புறப்பாடலுக்கு தனியிடத்தையும் ஒதுக்கியதில்லை. ஜாதீயக் கட்டுக்கள் இல்லாத சமூகவாழ்வில், காதல் பிரச்சனைகள் தரக்கூடியதாக இல்லை. எப்போது கூட்டுச் சிந்தனைக்குள், ஜாதீய பிளவுகள் புகுத்தப்பட்டனவோ, அப்போதே காதலும், வீரமும் அடக்கப்படவேண்டிய மனோபாவ சிந்தனையானது.

பொதுவாக, எந்த லக்கினமாக இருந்தாலும், ஏழாமதிபதி பாவக்கிரகங்களுடன் கூடி, ஏழாமிடத்திற்கு முன்னும்பின்னும் அதாவது, ஆறு, எட்டாமிடங்களில்(பாவகர்தாரி) அமர்ந்திருக்க, ஜாதீய கட்டுக்களை உடைத்து எறிந்துவிட்டு, காதல்மணம் புரிவர்.

இதேபோல், மனைவியையோ, கணவனையோ குறிக்கும் காரகக் கிரகங்கள், ஆறு, எட்டாமிடங்களில் அமர்ந்தாலும், சமூக எதிர்ப்புகளையும் கடந்து, காதல் திருமணம் செய்வர் .
 12

நம் சொந்த நாட்டில் வாழவழியற்றோரும், கீழ்நிலை வேலை செய்யத் துணியாதவர்களும், அல்லது அதிக வருவாயை அடைய வேண்டுவோரும், தன் தாய்நாட்டை விட்டு, வேறுநாட்டிற்குப் பிழைப்புத்தேடி செல்பவர்களாக இருப்பார்கள். இதே நிலையில் தான் சொந்த ஊரைவிட்டும் வேற்றூருக்குப் பிழைப்புத்தேடி செல்லும் மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. ஒன்று கடல் கடப்பது, மற்றொன்று தன் உறவுகளை, வீடுவாசலை விட்டுப் பிழைப்புக்காக வேறூருக்குச் செல்வது. இதில் முதல் நிலைக்கு,

நீர்ராசிகளான கடகம், மகரம், மீனம் ஆகிய இடங்களின் பிற்பகுதியில் அனேகமாக, ஒவ்வொரு ராசிகளுக்கும் 20 பாகைகளுக்கு மேல்,30 பாகைகளுக்குள் நீர்க்கிரகங்கள் நடமாட உதித்தவர்கள் கடல்கடந்து செல்வர். இதேநிலையில் பத்தாம் இராசியும் நீர்ராசியாகி அதில் நீர் கிரகங்கள் நின்றால் கடல்கடந்து தொழில் செய்யப்போவார். மேலும், இரண்டாம்வீட்டில் தீயக்கிரகங்கள் இருந்து, எட்டுக்குடையவன் ஆறு, பனிரெண்டில் அமர, பன்னிரெண்டோன் திரிகோணம் பெற கடல்கடந்து பிழைப்பு நடத்துவான்.

இரண்டாம் நிலையான, ஊர் உறவுகளை வீடுவாசலை விட்டுத் தொழிலுக்காக பிரிந்து செல்லும் நிலைக்கு, இலக்கினத்திற்கு பனிரெண்டில் உச்சம்பெற்றக்கிரகம் இருந்தாலும், சனி பனிரெண்டில் நின்று பலப்பட்டாலும், இலக்கினத்தின் அதிபதி பனிரெண்டில் நின்றாலும், ஜாதகர் பிழைப்புக்காக அன்னியமண்ணில் அலைந்து திரிவார் .

91501 06069

No comments:

Post a Comment