Saturday 6 June 2015

மதுரை கைரேகை பயிற்சி வகுப்பும், எனது அனுபவங்களும்...14







இரவு உணவு முடிந்து 02. 05. 2015 அன்று சுமார் 10. 00 மணியளவில் முகநூல் நண்பர்களிடம் உரையாடி விட்டு நள்ளிரவு சுமார் மணி 01.00 அளவில் உரையாடலை முடித்துக் கொண்டு உறங்கச் சென்றோம். அயர்ந்த உறக்கம். எல்லோருக்கும் போல அன்றைய பொழுது எனக்கு விடியவில்லை. நண்பர் ஜோதிவேல் குளிக்கச் செல்கிறார். நண்பர் ஜெயவேல் அருகே அமர்ந்திருக்க, கட்டிலில் நான் அமர்ந்திருக்க, “ அவர் “ கேட்டார், “உங்களுக்கு “ஹை பிரஷர் “ இருக்கா “ என்றார். நான் , “ இருக்கிறது “ என்றேன். “ பார்த்துப்பா, ரொம்பவும் ‘’ லோ “  ஆனால், காப்பாத்த முடியாது. செத்துவிடுவ ” என்றார். நான் ரொம்ப கூலா, “ செத்தா பரவாயில்லங்க. நல்லவனுக நாலு பேரு இருக்கானுக. எப்படியும் ஊர்போயி சேத்துடுவானுக “ என்றேன்.

ஆம், நண்பர்களே! ஜோதிடத்தால் உடன்பிறப்புகளை சொல்லமுடியாது என்கிற கருத்துக்கு, எதிர் கருத்தாக சொல்லமுடியும் என்று நிரூபிக்க முயன்ற எனக்கு, அவர் கொடுத்த சாபம், “ வெறும் வயிறோடு சொல்கிறேன். செத்துப் போவாய் “ என்பதாகும்.     நான் துருவக்கணிதம் இல்லாமல் ஜாதகக் கட்டமும், சாரமும் வைத்து உடன்பிறப்புகளை சொன்னேனா? சொல்லவில்லையா? என்பது வேறு கதை. ஆனால், முயற்சி செய்த எனக்கு, அவர் கொடுத்த சாபம், “ லோ பிரஷர் வந்து செத்துப்போவாய் “ என்பதாகும்.

ஆம், நண்பர்களே! நம்மைப் படைத்த ஆண்டவன், “ நீங்கள் விடும் சாபத்தால், அடுத்தவன் உயிர் அடுத்த நொடியே பறிபோகும் “ என்ற வரம் மட்டும் தந்துவிட்டால் போதும், செத்துவிழும் பிணத்தை எடுத்துப் போடக்கூட ஒருவனும் இந்த பூமியில் இருக்கமாட்டான்.
மீண்டும் மீண்டும் ஒரு குரல் ஒலித்தது. ஜோதிடம் என்பது அனுமானம்தான். இதை வைத்து தீர்க்கமான எந்த செய்திகளையும் சொல்லமுடியாது. உடன் பிறப்புகளைச் சொல்வேன் என்பது முட்டாள்தனமானது. அப்படிச் சொல்லத்துணிந்தவன் முட்டாள். அவனுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். அவர் யாராக இருந்தாலும், என்னைப் போன்றவர்கள் எதிர்ப்பார்கள். அந்த அரங்கத்தில் பலரிடம் கைதட்டல் எழுந்தது. அதன்பின் கிருஷ்ணமூர்த்தி பத்ததி முறையால் இன்னதேதி, இன்ன கிழமையில், இன்ன நேரத்தில், இன்ன மண்டபத்தில், இன்னாருக்கும், இன்னாருக்கும் திருமணம் நடக்கும் என்று சொல்லமுடியுமா? நான் கேட்கிறேன் என்றார். அதற்கும் பயிற்சி வகுப்பில் பலரிடமிருந்து கைதட்டல் எழுந்தது. அதன்பின் கோபம் அடங்காமல், வாஸ்துவைப் பற்றி சொல்ல நாக்கூசும் வார்த்தைகள், அதற்கும் கைதட்டல். அதன்பின் ஜெம்மாலஜியைப் பற்றி …. அதற்கும் கைதட்டல்.

ஆம். நண்பர்களே! எல்லாமே குறைவுடைய சாத்திரங்கள் என்றால், ………….. நாமும் கேள்வி கேட்கலாம் அல்லவா? நாங்கள் கேட்டோமா? கேட்கவில்லையா? என்பதனை அடுத்த பதிவில் காண்போம். நன்றி … முகநூல் உறவுகளே!             

தொடர்புக்கு…. 9751822129  8754873378

No comments:

Post a Comment