Sunday 7 June 2015

29. இன்றுவொரு தகவலை அறிவோமா?





நாம் ஜோதிடத் தகவலை  பதியும் போது, ஒரு அழுத்தமான சிந்தனை மனதுக்குள் வந்து போனது. அதனால், இன்றுமட்டும் ஜோதிடப்பதிவுக்கு விடுமுறை விட்டுவிடுவோம், உறவுகளே!   

நம்மில் யாரையும் வயது வித்தியாசம் பார்க்காமல், முகநூல் மட்டுமே நண்பர்கள் ஆக்கியது. ஆனாலும், நீங்கள் யாரோ,…. நான் யாரோ….. தான்  இருந்தாலும், நீங்களும், நானும் நண்பர்கள்.

நம் பெரியவர்கள் பலவிதமான பழமொழிகளை சொல்லியுள்ளனர். அதில் ஒன்று இந்திரனின் சபையில், “ இந்திர்ன் மாறினாலும், இந்திராணி மாறமாட்டாள் “ என்பார்கள். ஒருவரை நேற்றுவரை புகழ்ந்து, புகழ்ந்து பேசி, துதி பாடி, தந்தணக்காம் ஆட்டமாடி, அய்யனே, ஆசானே, எஞ்சாமீயே பூதமே வளைஞ்சு நெளிஞ்சு கும்பிடு போட்டு, கூன் தள்ளி, நாக்கு தளும்பு ஏற துதிபாடி விட்டு, திடீரென்று தங்களின் நிலையை எப்படி மாற்றிக் கொள்ள முடிகிறது. நாம் எப்போதும் நித்திய சுமங்கலியாகவே இருக்க வேண்டாம்.

ஒருவரை “ஆசான் “ என்று மனதுக்குள் சித்திரம் வரைந்து விட்டால், அவர் “ ஆசான் தான் “. மற்றவரை, ‘ ஐயா “ என்று விளித்தால், அவர் ‘ ஐயா தான் “. இன்னொருவரை ‘ குரு “ என்று சொன்னால், “ அவர் குரு தான் “. இதில் ஒன்றையும் மாற்றி, எந்த நிலையையும் எடுக்காதீர்கள். அவர்களை நிந்திக்காதிர்கள். அவர்கள் மனம் கோணும்படி நடக்காதீர்கள். உண்மையில் இதுவும், “ குரு நிந்தனை தான் “ .

30.

நம்மில் பலருக்கு தாயின் பாசம் அதிகமிருக்கும். பெரும்பாலும் தாய்க்கு நம்மீதும்  பாசம் இருக்கும். தாயை வெறுப்பவர்களும், குப்பைபோல் தூக்கி எறிபவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனால், தாயை தூக்கி எறிந்தவர்களால், தாயின் மூமூலம் கிடைத்த சொத்தை தூக்கி எறிவார்களா? என்பது மில்லியன் டாலர் கேள்விதான்.

ஒன்று நான்குக்குடையவன் கூடினால், ஒருவருக்கொருவர் அன்பாய், பாசமாய் இணைபிரியாமல் இருப்பார்கள். அதுவே, இவர்கள் இருவரும் பகை பெற்றவர்களாக கூடியிருந்தால், குறிப்பிட்ட பருவத்திற்கு மேலே, அல்லது தாய் சொல்லை கேட்காத மூடனாய் வாழ்ந்திருப்பான். இதுபோல,

இரண்டுக்குடையவன், நான்குக்குடையவன் கூடினால், தாயின் மூலம் சொத்துக் கிடைக்கும். இவர்களே பகைத்து இருந்தால், சொத்தில் வில்லங்கத்துடன் கிடைக்கும்.  

91501 06069

No comments:

Post a Comment