Wednesday 5 November 2014

முகூர்த்தத்திற்கு ஆகாத நாட்கள் எவை?





நாம் எந்தவித செயலைச் செய்யத் துவங்கினாலும், முதலில் நல்லநாளில், நல்லநேரத்தில் துவங்க வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால், முதலில் நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ள நல்லநேரத்தைப் பார்க்க துவங்கிறோம். அதனினும் துல்லியமாக பஞ்சாங்கங்களில் அறிபவர்கள் இருக்கிறார்கள். மேலும்,நல்லநாள், நேரத்தை ஜோதிடர்களின் உதவியின் மூலம் அறிபவர்களும் இருக்கிறார்கள். சில ஜோதிடர்களுக்கும் தெரியாத, இந்த முகூர்த்த நுட்பத்தை நம் சித்தர்கள் கூறியதைக் காண்போமா? இதற்குள் இருக்கும் சூட்சுமங்களை நம்மில் யாராவது விலக்கினால் நல்லது.

1.   தமிழ் வருடத்தின் கடைசி மாதமான பங்குனியின் கடைசி பதினான்கு நாட்களும்,
2.   தமிழ்மாதங்களின் கடைசி மூன்று நாட்களும்,
3.   ஒவ்வொரு நட்சத்திரத்தின் கடைசி இரண்டு நாழிகையும்,
4.   வாரக் கரிநாளையும், சனி, செவ்வாய் கிழமைகளையும்,
5.   கிரகணநாளையும், மரணயோக நாளையும்,
6.   பஞ்சப்பட்சியில் உங்களின் பட்சி எதுவோ, அது சாவுபட்சியாக இருக்கக் கூடாது.  
7.   கார்த்திகை, திருவாதிரை, பரணி, கேட்டை, பூரம், பூராடம், பூரட்டாதி, சித்திரை, விசாகம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளையும்,
8.   அமாவாசை, சதுர்த்தி, சஷ்டி, அஷ்டமி, நவமி, சதுர்த்தசி முதலிய திதி வரும் நாட்களிலும்,


முகூர்த்தம் செய்யக்கூடாது என நம் தமிழ்சித்தர் கூறியுள்ளார். இனி இதையே கடைப்பிடிப்போம் நன்றி. அடுத்த பதிவில் சந்திப்போம்.. 

முத்துப்பிள்ளை. 

91501 06069,     93456 56268

No comments:

Post a Comment