Monday 3 November 2014

இலக்கினக் கேதுவும், ஞானத்தின் நிலையும்….


இலக்கினம் என்பது சூரியனிடமிருந்து உயிர் குவிக்கப்பட்ட இடமாகும். அதை உயிரின் மையம் என்றும் சொல்லலாம்.  இலக்கினத்தின்   ஒட்டுமொத்த 30 பாகையும் மிகச்சரியாக வரையறுக்கப் பட்டவை அல்ல. அதற்குள் வெற்றுப் பரப்பளவுகளும் உண்டு.

அதனால் குவிக்கப்பட்ட  உயிரின்  மையம் என்பதை ஜென்ம இராசி, ஜென்ம நட்சத்திரம் என்று இல்லாமல்,  நட்சத்திரத்தின் அந்தரப் புள்ளியைத் தான் கவனிக்கவேண்டும். இவைதான் முக்கியமானது. இப்போது இலக்கினாதிபதியும், ஜென்ம நட்சத்திரமும் தான், ஒருவரின் ஜாதகத்தை தீர்மானிக்கிறதாக நினைக்கிறோம். ஆனால், அந்தரத்தின் மையம்தான் ஜாதகத்தைத் தீர்மானிக்கிறது. நாம் தசாபுக்தியைத் தான் பார்க்கிறோமே, அந்தரத்தை பார்த்தோமா? அந்தரநாதனின் வலுவைப் பொறுத்தே, நாம் போகப்போகும் திசை நிர்ணயம் செய்கிறது. நம் உயிரின் மையத்தை நல்லகிரகங்கள் கோட்சாரத்தில் நெருங்கும் போது, நன்மையான பலன்களை அடைந்துவிடலாம். கெட்டகிரகங்கள் நெருங்கும் போது, கெடுதியான பலன்களே நடக்கும். இதேபோல, ஒவ்வொரு கிரகத்திற்கும் பார்க்கவேண்டும்.

இந்த வலுவை வெகுசிலர் மட்டுமே உள்ளுணர்வால் உணரமுடிகிறது. நம்மில் பலர் இலக்கினப் புள்ளியின் ஆன்ம பலம் இருந்தாலும், அன்றாட ஜீவனத்திற்கு மட்டுமே காட்டிக் கொண்டு இருக்கிறோம். ஆன்மாவை (இலக்கினப் புள்ளியை) கர்மா(சனி), காமம், ஆசை (சுக்கிரன்) போகம்(இராகு) சூழ்வது, மாயைக்குள் மாட்டிக் கொள்வதாகவே அர்த்தமாகிறது.

ஆன்மாவின் மையப்புள்ளியான இலக்கினத்தை ஞானம் (கேது) கூட, ஆன்மா ஈடேற்றம் அடைய எந்தபோஷாக்குதேவையோ, அது கிடைத்துவிடும். அவன் ஆன்மா ஞானம் பெறும். இலக்கினத்தில் கேது இருந்தால் மட்டும் ஞானம் கிட்டிவிடுமா என்ன? அவன் கர்மா எந்த துறை சார்ந்து பயணிக்கிறதோ, அதில் ஞானம் மிக்கவன். எங்கு எது கிடைக்கிறதோ, அதை உண்பவனாக இருப்பான். காடுகளுக்குள் சிக்கிக் கொண்டால் கவலையில்லை. இலைதழைகளைப் புசிப்பான். அவள் அழகானவள், அவள் கிடைத்தால் ….. இவள் அழகானவள் இவள் கிடைத்தால்…. இந்த வேறுபாடுகள் இல்லாதவன். எவள் கிடைத்தாலும் ஓகே சொல்பவன். எப்படி ஞானம் தேடுவதில் வல்லவனோ, அதே போலத்தான் சொத்து சேர்ப்பதிலும்கேட்பவனுக்கு இல்லையென மாட்டான். பசித்தவனுக்கு குறிப்பறிந்து அன்னமிடுவான். பின்விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் உதவி செய்வான். அதனால் விளைவதையும் சந்திப்பான்.  
அந்தரத்தைத் தேடுங்கள் சுந்தரமாக வாழுங்கள். நன்றி

முத்துப்பிள்ளை

91501 06069  
93456 56268

No comments:

Post a Comment