Sunday 16 November 2014

யோகினியும், வாரசூலமும் மறைந்திருக்கும் சூட்சுமங்களும்…. 3.

      


இனி யோகினியைப் பற்றி அறிந்து கொள்வோம்.
யோகினி என்ற பதத்திற்கு, காளி என்றும், துர்க்கை என்றும் பொருள் சொல்லப்படுகிறது. சன்மினி, சூர்மகள் என்று அழைக்கப்படுகிறாள். நிர்வாணியாக இருப்பாள். இவள்  விரித்ததலையுடனும், நிர்வாணக்கோலத்துடனும் தேகத்தில் வெண்ணீறும், சங்காபரணமும் அணிந்தவளாய் அமங்கலமாய் அகோரமாய் இரத்தநிறமுடையவளுமாய்  இருப்பாள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.                                                 

எப்படி சிவனார் கை சூலம்என்று வாரசூலையை, “சூலதோஷம்என்று அழைப்பதைப் போலவே, யோகினியும் தோஷமாகவே பார்க்கப்படுகிறது. இப்படி,

வாரசூலைக்குக் குறிப்பிடப்பட்டுள்ள  திக்கு, அதாவது திசை, எப்படி மனிதனின் பயணத்துக்கு நன்மை செய்வதில்லையோ, அதே போல, யோகினிக்குக் குறிப்பிடப்பட்டுள்ள திசைகளும் , மனிதர்களுக்கு நன்மையைத் தருவதில்லை. அழிக்கும் ஆயுதமான சிவனின் சூலத்தைப்போல, அகோர நிர்வாணி மாகாளியான துர்க்கையும் குறிப்பிடப்பட்டுள்ள திசைகளை நாசம் செய்கிறாள். இது எப்படி சாத்தியமாகிறது என்றால்,

அகண்ட, பிரமாண்ட சூரியனுக்குள் கரும்புள்ளி(Black) இருப்பது போலவும், பூமிக்கு நீசப் பகுதிகள் உள்ளது போலவும், திதிக்கு சூன்யமாக, இராசிமண்டலத்தில் ஒன்றிரண்டு ராசிகள் இருப்பதுபோலவும், சூலமுள்ள திசையில்,

கெடுதிதரும் நீசம் இருப்பது போலவும், யோகினியால் கெடுதி தரும் திசைகளும் இருக்கும். நாம் முதலில் யோகினிக் காணப் பாடல்களைக் காண்போம்.
   
வளர்பிறை யோகினி.    
பிரதமைக்குக் கிழக்குத் திக்காகும் பாரு
பேசுகின்ற துதியைக்கு வடக்கதாகும்
வரமுற்ற திரிதியைக்குத் தென்கிழக்கு
மற்ற சதுர்த்தி தனக்குத் தென்மேற்காகும்
திரமுற்ற பஞ்சமிக்குத் தெற்கதாகும் பிறை
சிறந்ததொரு சஷ்டிக்கு மேற்கதாகும்
 நிறமுற்ற சப்தமிக்கு வடமேற்காகும்
தீட்சயம் அஷ்டமிக்கு வடகிழக்கதாமே.   (1)

      வளர்பிறை     
      திதி
யோகினி 
திசைகள்
         பிரதமை
         துதியை
         திரிதி
         சதுர்த்தி
         பஞ்சமி 
         சஷ்டி
         சப்தமி
        அஷ்டமி
     கிழக்கு
     வடக்கு  
     தென்கிழக்கு
     தென்மேற்கு
     தெற்கு
    மேற்கு
   வடமேற்கு
  வடகிழக்கு


        வளர்பிறை யோகினி.    
 மற்றதொரு நவமி தனக்(கு) ஆகாசந்தான்
வருகின்ற தசமிக்குப் பூமியாகும்
உற்றிடும் ஏகாதசிக்குக் கிழக்காகும்
ஓங்கு துவாதசி தனக்கு வடக்கேயாகும்
பெற்ற திரயோதசிக்குத் தென்கிழக்காம்
பேசு சதுர்த்தசி தனக்கு தென்மேற்காகும்   
முற்று பூரணை தனக்குத் தெற்கதாகும்
முன்னிலையா யோகினியும் இருப்பாள் பாரே.    (2)

    வளர்பிறை
      திதிகள்
   யோகினி            
    திசைகள்
        நவமி
       தசமி
     திரயோதசி
       ஏகாதசி
       துவாதசி
      சதுர்த்தி
       பூரணை
     ஆகாசம்
     பூமி
    தென்கிழக்கு
    கிழக்கு
    வடகிழக்கு
    தென்மேற்கு
    தெற்கு


தேய்பிறை யோகினி.
நிகரில்லா பிரதமைக்கு மேற்கதாகும்
நேர்ந்ததொரு துதியைக்கு வடமேற்காகும்
சுகமுற்ற திரிதியைக்கு வடகிழக்காம்
சுத்தமாம் சதுர்த்திக்கு ஆகாசமாகும்
இதமுற்ற பஞ்சமிக்குப் பூமியாகும்
இசைவான சஷ்டிக்குக் கிழக்காகும்
செகமதனில் சப்தமிக்கு வடக்கதாகும்
திரமாம் அஷ்டமிக்குத் தென்கிழக்குமாமே.    
(3)

     தேய்பிறை
    திதிகள்
   யோகினி           
   திசைகள்
         பிரதமை
          துதியை
           திரிதி
          சதுர்த்தி
           பஞ்சமி 
          சஷ்டி
          சப்தமி
         அஷ்டமி
  மேற்கு
  வடமேற்கு
  வடகிழக்கு
 ஆகாசம்
 பூமி
 கிழக்கு
 வடக்கு  
 தென்கிழக்கு


தேய்பிறை
மிக்கதோர் நவமிக்குத் தென்மேற்காகும்
வியப்புடைய தசமிக்குத் தெற்குமாகும்
தக்க ஏகாதசி தனக்கு மேற்கதாகும்
தகுந்த துவாதசி தனக்கு வடமேற்காகும்
பக்க திரயோதசிக்கு வடகிழக்காம்
பாங்கு சதுர்த்தசி தனக்கு ஆகாசமாகும்
திக்கில் அம்மாவாசைக்குப் பூமிதன்னில்
திறமாக யோகினியும் இருப்பாள் பாரே.   
(4)
தேய்பிறை திதிகள்
   யோகினி
    திசைகள்
     நவமி
    தசமி
    ஏகாதசி
    துவாதசி
    திரயோதசி
    சதுர்த்தி
   அமாவாசை
    தென்மேறகு
   தெற்கு
   மேற்கு
   வடமேற்கு
   வடகிழக்கு
   ஆகாசம்
   பூமி


இப்படி எட்டுத்திக்கிலும், வானத்திலும் பூமியிலும் யோகினி நிற்கும் திதிகளையும் பாடல்களினால் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், யோகினி எப்படி நின்றால் என்ன பலன் நிகழுமெனவும் உள்ளது.   

யோகினி இருந்தபலன்.
யாத்திரைக்கு யோகினியும் எதிரே ஆகா
அத்திசைக்கு யோகினி பின்பக்கத்துற்றால்
நேத்தியதாய் நலமாகும் ; இடதுபக்கம்
நேர்மையாய் யோகினியும் இருந்திட்டாக்கால்
ஆத்திரமாய்ப் பிரயாணம் செல்லலாகும்
ஆகாசம் பூமியில் இருப்பாளானால்
சாத்திரத்தின் படியாக மத்திமந்தான்
சகலத்துக்கும் யோகினியைப் பார்த்துச் செய்யே.    (5)

விளக்கம்ஒருவர் பயணம் செல்லும் திசைக்கு நேரெதிர் திசையில் யோகினி எனும் அகோர காளிதேவி நிற்பாள். அதனால், அந்த திசை பயணத்துக்கு ஆகாது. ஆனால், அத் திசைக்கு  பின்புறம் காளி தேவி நின்றால், நன்மையே ஏற்படும். மேலும், அத்திசைக்கு இடதுபுறம் யோகினி தேவி நின்றால், பயணம் செல்லலாம்.

ஆகாயம், பூமியில் யோகினி தேவி நிற்பாளானால், சாத்திரத்தில் கூறியபடி, மத்திம பலனே ஏற்படும்.

அதனால் எல்லா செயலுக்கும் யோகினியைப் பார்த்தே செய்யுங்கள் எனச்சொல்லப்பட்டுள்ளது.

 தினம் யோகினி நாழிகை.
நல்ல மூன்றே முக்கால் கிழக்கேயாகும்
நலமான ஏழரையில் தென் கிழக்காம்
வல்ல பதினொன்றேகால் தெற்கதாகும்
மகிழ்வாகப் பதினைந்தில் தென்மேற்காகும்
சொல்லு பதினெட்டே முக்கால் மேற்காகுமசுகம்

இருபத்திரண்டரையில் வடமேற்காகும்
வெல்லும் இருபத்தாறே கால் வடக்காம்
விரும்பிட  முப்பது தானும் வடகிழக்கே.          
(6)

ஒரு நாளைக்கு அருணன் உதயம் முதல்கொண்டு மறைவு வரை உள்ள பகல்பொழுதை, அதாவது (முப்பது நாழிகையை)   மூன்றேமுக்கால் (ஒன்றரை மணி நேரம் ) நாழிகை வீதம்எட்டு சம பங்காய் பிரித்து, எட்டுதிசைகளுக்கும், முகூர்த்த நேரமென வழங்கப்பட்டுள்ளது.

அதாவது, அருணன் ஆறுமணிக்கு உதித்ததாக இருந்தால், ஆறுமணியிலிருந்து ஏழரை மணிவரை கிழக்கில் யோகினி நிற்கும். அதனால், அந்த திசையில் அந்த நேரத்திற்குள்ளாக நாம் பயணத்தைத் துவங்கக் கூடாது. ஏழரை மணிக்கு மேலாக கிழக்கே பயணம் செல்லலாம். அதேபோல் ஏழரை மணிமுதல் ஒன்பது மணி வரை  தென்கிழக்கில் யோகினி நிற்கும். அந்தநேரத்தில் தென்கிழக்கில் பயணத்தைத் துவங்கக் கூடாது. இதே போல்,

ஒன்பது முதல் பத்தரை வரை தெற்கிலும்,
பத்தரை முதல் பனிரெண்டு வரை தென்மேற்கிலும்,
பனிரெண்டு முதல் மதியம் ஒன்றரை வரை மேற்கிலும்,
ஒன்றரை முதல் மூன்று வரை வடமேற்கிலும்,
மூன்று முதல் நான்கரை வரை வடக்கிலும்,
நான்கரை முதல் மாலை ஆறு வரை வடகிழக்கிலும் யோகினி நிற்பாள்.

அதனால், அந்த நேரத்தில் துவக்கும் பயணத்தை சிறிது காலம் தாழ்த்தி துவங்கவும்.

இருந்ததோர் ஊர்விட்டுப் பிரயாணங்கள்
ஏகுதற்கு யோகினியும் எதிரேயானால்
அறிந்து அந்த திசை போக வேணுமோதான்
அத்திசையின் நாழிகையைத் தள்ளி நீயும்
திருந்து தினம் யோகினியும் எட்டுத்திக்குகளை போனபின்பு
சீராக ஊர்பயணம் செல்லலாகும்
பொருந்தவே பரிகாரம் இதுதானப்பா
பூலோக மாந்தருக்காய்ச்  சொல்லினேனே.        
(7)

ஊர்பயணம் செய்வதற்கு, யோகினியும் எதிரே நின்றால், அந்த திசைக்கு கட்டாயம் சென்றேயாக வேண்டுமானால், அந்த திசைக்குரிய நாழிகையை, அதாவது மணி நிமிடத்தை கழித்தபின் செல்வதுதான் இதற்கானப் பரிகாரமாகும். இதை பூலோக மாந்தர்க்காக சொல்லினேனே என்கிறார்.

இந்த சூலமும் யோகினியும் சிவசக்தியானவர்கள் தான். இறைநிலையில் உள்ள இவர்களால் அழிக்கமுடியுமா? கேள்வியெழுவது நியாயம் தான். படைத்தவற்றைக் காப்பது இறையின் கடமையல்லவா? அப்படியிருக்கும் போது, அவனிருக்கும் திசைக்குள், அல்லது பார்க்கும் திசைக்குள் நாம் பயணப்பட்டால், நம் செயல்கள் எப்படி தோற்றுப்போகும். நாம் எந்தசெயல் செய்தாலும், அவனை வணங்கித் துவங்குகிறோம். அவனால் துவக்கப்பட்ட செயலை, அவனே தோற்கச்செய்வானா?

நம் நண்பர் ஒருவருடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இப்போது வேகமாக அந்த இடம்நோக்கி ஓடுவோம் அல்லவா? சண்டைக்குள் நுழைவதற்குள்ளாக, நம் நண்பரின் கை நம்மேல் பட்டுவிட்டால், நம்மை தாக்கிவிட்டார் என்று அர்த்தமில்லை. சண்டை நடக்குமிடத்தில், அவர் சண்டைக்காரராகவே இருப்பார். நண்பர் என்கிற நிலையில் இருப்பது இல்லை.

அழிவுக்குக் காரணமான உருத்திரமூர்த்தி, தன் அழிக்கும் செயலுக்கு, ஒரு சக்தியைப் பயன்படுத்தவேண்டும். அந்த சக்திதான், இந்த காளிவடியுடைய துர்க்கை. அண்ட, பிரசண்ட, சண்ட, முண்டர்களாகிய அசுரர்களை வதம் செய்யும், சாமுண்டியாய் நிற்பாள். தாரகனை கொன்று தாரகமர்த்தினியெனவும், நிர்வாணியாய், விரித்த தலைமுடியுடன், அகோரமாய், அமங்கலமாய், இரத்த நிறமுடையவளுமாய் இருப்பாள். எட்டுக் கரங்களில் எட்டு ஆயுதங்களைக் கரங்களில் ஏந்தி சிங்கவாகனத்தில் வீற்றிருப்பாள். இப்படி போர்வெறியோடு நின்றிருக்கும் திசைநோக்கி, நாம் பயணமேற்கொண்டால் யோகினியின் பார்வையால் தீங்குதான் ஏற்படும். மேலுயோகினி தேவிக்குப் பின்புறமோ, இடதுபுறமோ நாம் நின்றால், அவளின் கொடூரப்பார்வைக்குள் சிக்கமாட்டோம். இதேபோல், நாள், நட்சத்திரம், திதியறிந்தும், அதன்படியும், சூலம்ள்ள திசைநோக்கி பயணம் செய்யுங்கள். குறிப்பிட்ட திசைநோக்கி சென்றேயாக வேண்டுமானால், அத்திசைக்குக் கொடுத்துள்ள காலநேரத்தை கழித்துவிட்டு பயணம் செய்யுங்கள்.   

இந்த சூலத்தையும், யோகினியையும் எங்கேனும் பயணம் செய்வதற்காக மட்டும் பயன்படுத்தலாமா? என்றால், இக் கட்டுரையில் கொடுத்துள்ள ஐந்தாவது பாடலின் கடைசி வரியில்சகலத்துக்கும் யோகினியை பார்த்து செய்யே”  எனக்குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால், சூலமும், யோகினியும் நிற்கும் திசைநோக்கிப் பயணம் செய்வதோ, அத்திசையில் தொழில் துவங்குவதோ கூடாது. நீசதிசையில் உள்ளவர்களுக்கு பெண்கொடுப்பதோ, பெண் எடுப்பதோ வேண்டாம். அது குடும்பவாழ்வில் பிரச்சனைகளைத்தருகிறது. நீசதிசையிலுளள் மருத்துவமனையில் உடல் நலமற்றவர்கள் இருந்தால், நோய் குணமாவதற்கு நாளாகிறது. கடுமையான நோய்க்கு ஆளானவர்கள் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

               சூலம்.
           யோகினி
    திதிகள்
சூல திசை
வளர்பிறை
         தேய்பிறை
பிரத
துதிய
திரிதி
சதுர்த்
பஞ்ச
சஷ்டி
சப்தமி
அஷ்
நவமி
தசமி
ஏகாத
துவா
திர
சதுர்த்
பெள
அமா
கிழ
தெனகி 
தெற்கு  தெமே
வடகிழ    மேற்கு         
தென்கி 
வடக்கு        
கிழக்கு         
வடமே
தெற்கு      
தெமே
வடகிழ
வடக்கு      
வடமே
  மேற்கு                      
      கிழக்கு         
     வட              தென்கி
தென்மே  
தெற்    
மேற்
வடமே
வடகி
ஆகா   
பூமி    
கிழ  
வடக்
தென்கி தென்மே   தெற்கு  
--------
            மேற்
         வடமேற்
         வடகிழக்
         ஆகாயம்
          பூமி       
          கிழக்கு
           வடக்கு
          தென்கி
           தென்மே
           தெற்கு
          மேற்கு
          வடமேற்
         வடகிழக்  
         ஆகாயம்
        -----------
          பூமி


இந்த அட்டவணையிலுள்ள திசைகள், அன்றைய திதிகளுக்கான சூனியத் திசையாக இருப்பதைப்போல, ஜெனமத் திதிகளுக்கும் சூன்ய திசையாகவும் இருக்கும். அன்றாடமுள்ள திதியையோ, வாரநாளையோ, குறிப்பிட்ட நட்சத்திரத்தையோ வைத்து சூலத்தையும், யோகினியையும் பார்ப்பது ஒருவழியென்றாலும், ஜெனன திதி எதுவோ, அந்த திதிக்கு எந்த திசை சூலமாகவும், யோகினியாகவும் வருகிறதோ, அந்த திசையை வாழ்நாள் முழுவதும் தவிர்ப்பது நல்லது. அதே போல் ஜென்மக்கிழமை எதுவென்று அறிந்து,அக்கிழமைக்குக் கொடுத்துள்ள சூலதிசையையும் தவிர்ப்பது நலம் தரும். மேலும், குறிப்பிட்டுள்ள ஏழு (அவிட்டம், கேட்டை, திருவோணம்பூசம், ரோகிணி, உத்திரம், அஸ்தம்) நட்சத்திரங்களில் பிறந்தவர்கள், அந்த நட்சத்திரங்களுக்கு எந்த திசையில் சூலமெனக் குறிப்பிடப் பட்டுள்ளதோ, அந்த திசைகளையும், தங்கள் வாழ்நாளில் தவிர்ப்பது நல்லது.

சூலத்தையும், யோகினியையும், பயணத்துக்கு மட்டும் பார்க்காமல், “சகலத்துக்கும்என்ற பாடல் வரியில் குறிப்பிடப் பட்டதைப்போல, ஜென்ம காலம் வரை பயன்படுத்தி, தங்கள் வாழ்நாள் செயல்கள் அனைத்தையும், இந்த நீச திசைகளில் துவங்காமல்  வாழ்வில் வளம் பெறவேண்டுகிறேன்.        
                           
வாழ்கதமிழ்.                   வாழ்க…..வாழ்க……வாழ்கவே…...


ஆய்வு.         முத்துப்பிள்ளை
 4/7/1.வடக்குவெள்ளாளர் தெரு .                                      .                                      ஆத்தூர்.624701.அஞ்சல்
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி. 91501 06069  

1 comment: