Sunday 16 November 2014

பேரின்பத்தைத் தரும் துறவும், யாகமும்….



மாண்டவர் மாண்ட வினைபெறுப வேண்டாதார்
வேண்டா வினையும் பெறுபவே_ யாண்டும்
பிறப்பார் பிறப்பார் அறனின்  புறுவர்
துறப்பார் துறக்கத் தவர்.” நான்மணிக்கடிகை 59.

விளக்கம்: அறிவால் மேன்மைப் பெற்ற நிலையில் உள்ளவர்களால், அந்த அறிவுக்குத் தகுந்தாற்போல்தான், அப்பழுக்கற்றவகையில் செயல்களைச் செய்ய முடியும்

விருத்தியற்ற அறிவை உடையவர்களால், தீவினைச் செயல்களை மட்டுமே செய்ய முடியும்.

உயர்ந்த பிறப்பில் பிறப்பவர்கள், அறத்தை விரும்பி ஏற்று, அதில் இன்புற்று, வீடுபேற்றை அடையப் பற்றைத் துறப்பார்கள்.

நாம் காணப் போகும் மூன்று ஜாதங்களும், தெய்வாம்சம் பொருந்தியவையாகும். 1. காஞ்சிப் பெரியவர். உன்னதமானவர். 2. ஆதீனக்கர்த்தா. ஆன்மீகச் சொற்பொழிவாளர். துறவி. 3. காலக்கணிதமும், யாக நுட்பங்கள் அறிந்தவர். கோவில் பரிகாரங்களில் சிறப்பானவர்.

இவர்களைப் போன்ற உன்னத நிலையை அடைய, நாம் என்றாவது சிந்தித்தது உண்டா? இறைவனை நோக்கி இவர்கள் கடந்த தூரம் எவ்வளவு என்றாவது நமக்குத் தெரியுமா? எங்கெங்கோ இருக்கிறானே என்று, நமக்குள் இருப்பவனை மறந்து, தேடி ஓடுகிறோமே. நம்மை நாமே தொலைத்து விட்டு தேடினோமா? என்னை நான் தேடிக் கண்டுபிடித்தால், மற்றவர்கள் கண்களுக்கு நிர்வாணமாகத் தெரிவேன் என்பதாலே, இழுத்துப் பொத்தி இருக்கிறேன். என்மேல் போர்த்தியிருக்கும் மாயைகள் எப்போது கிழிபடும்.  

 இவர்கள் இந்தப் பிறவியில் இந்த நிலையை அடைய, எத்தனைப் பிறவிகள் கடந்தனரோ? இவர்களின் நிலையை நாம் அடைய, இனி எத்தனையெத்தனைப் பிறவிகள் எடுத்து, எம்மைத் தொலைக்கவேண்டுமோ?

ஜோதிட சாத்திரத்தின் மூலம், இம்மகான்களின் ஜாதகங்களை ஆய்வு செய்வோம்.

உதாரண ஜாதகம். 1.
காஞ்சிப் பெரியவர்.20. 05. 1894 நண்பகல் மணி 01. 22 நிமிடம். விழுப்புரத்தில் பிறப்பு.


சுக்    இரா


சூரி புத
குரு



 
          இராசி

செவ்

இல

      சந்

சனி கேது

1.   இலக்கினத்தையோ, இலக்கின அதிபதியையோ, செவ்வாய் பார்க்க, ஜீவக் காரகனானக் குரு சுபவர்க்கம் பெற ஜாதகன் அனுதினமும் சிவனை அர்ச்சனை செய்வார்
இவர் இலக்கினம் சிம்மம். அதிபதி சூரியன். செவ்வாய் தன் எட்டாம் பார்வையால் இலக்கினத்தைக் காண்கிறார். ஜீவவானக் குரு, ஆத்மாவான சூரியனுடன், கர்மாவில் இணைகிறார்.
2.   இலக்கினாதிபதியும், பத்தாமதிபதியும் புதன், குருவைக் கூடினால் துறவி.
இலக்கினாதிபதிச் சூரியனை புதனும், குருவும் கூடியுள்ளனர்.
3.   புதன் நின்ற வீட்டீன் அதிபதி, உச்சம் பெற்றால், துறவியாவார்.
புதன் நின்ற வீட்டின் அதிபதியான சுக்கிரன், உச்சம் அடைந்துள்ளார்.
4.   ஒன்பதாம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் சுபவர்க்கம் பெற்றால், ஜாதகன் யாகங்கள் பல செய்வான்.
ஒன்பதாமதிபதி செவ்வாய், மகரத்தில் உச்சம். பத்தாமதிபதி சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று சுபவர்க்கம் அடைகிறார். அதனால் யாகங்கள் பல செய்யும் அமைப்பு ஏற்பட்டுள்ளது.
5.   பத்தாம் அதிபனுக்கும், இலக்கின அதிபனுக்கும், ஒரே ஆதிபத்தியம் ஏற்பட்டால், உலக நன்மைக்காப் பல  யாகங்கள் செய்வர்.
பத்தாமதிபதி சுக்கிரன், குரு வீட்டிலும், இலக்கினாதிபதி சூரியன் குருவுடன் இணைந்தும் தொடர்புக் கொள்கின்றார்.
6.   கேந்திர வீடுகளில் சுபக்கிரகங்கள் நின்றாலும் துறவியாவார்.
சதுர்கேந்திரத்தில் சந்திரனும், தசமக் கேந்திரத்தில் புதன், குருவும் அமர்ந்துள்ளனர்.
7.   கர்மாவைக் குறிக்கும் பத்தாமிடத்தில் மூன்றுக் கிரகங்கள் நிற்க, துறவு வாழ்க்கை வாழ்வன்.
பத்தாம் வீடானக் கர்ம ஸ்தானத்தில் சூரியன், புதன், குரு கூடியுள்ளனர்.
8.   ஆன்மாவைக் குறிக்கும் சூரியனும், உடம்பைக் குறிக்கும் சந்திரனும், கர்மாவைக் குறிக்கும் பத்தாம் வீட்டில்,   
ஜீவக்காரகன் குரு அமர்ந்தாலும், ஜாதகன் உலகோர் பெருமைப்படும் துறவியாக வாழ்வன்.

காஞ்சிப்பெரியவர் ஜாதகத்தில், முத்தாய்ப்பாக சூரியன், குரு கூடி பத்தாம் வீட்டில் இருக்க, சந்திரன் காண்கிறார். அதனால், உலகப் புகழ்ப்பெற்ற ஞானியாக, துறவியாக வாழ்ந்தார்.

உதாரண ஜாதகம்.2.
12. 10. 1954 முன்னிரவு மணி 07.30 நிமிடம் செவ்வாய்க்கிழமை.
இவர் மிக எளிமையானத் தோற்றம் கொண்டவர். அடக்கமானவர். தன்னிலையில் மாற்றம் இல்லாதவர். பல யாகங்கள் செய்வித்து, பலரையும் இன்னல்களில் இருந்து காப்பாற்றிய ஆபத்பாந்தவன். அன்னை பராசக்தியின் பேரருள் பெற்றவர். அன்னைக்குத் திருக்கோவில் எழுப்பி, குடமுழுக்கு நடத்தியவர்.



இல சந் மா

கேது



           இராசி
குரு
செவ்


இராகு
சுக்கி
புதன்  சனி
சூரியன்

1.   இலக்கினத்தையோ, இலக்கின அதிபதியையோ, செவ்வாய் பார்க்க, ஜீவக் காரகனானக் குரு சுபவர்க்கம் பெற ஜாதகன் அனுதினமும் சிவனை அர்ச்சனை செய்வான்.
இலக்கினம் மேஷம். இலக்கினாதிபதி செவ்வாய். இவர் ஜாதகத்தில் இலக்கினத்தைத்தான் செவ்வாய் பார்க்கமுடியும். தன் நான்காம் பார்வையால் செவ்வாய், இலக்கினத்தைக் காண்கிறார். குரு சுபவர்க்கமாக உச்சம் பெறுகிறார்.
2.   இலக்கினாதிபதியும், பத்தாமதிபதியும், நண்பர்களாய், கேந்திரக் கோணங்களில் நின்றால், ஜாதகன் யாகங்களைச் செய்வான்.
இலக்கினாதிபதி செவ்வாய் தசமக் கேந்திரத்திலும், பத்தாமதிபதி சனி, சப்தமக் கேந்திரத்திலும் உள்ளனர்.
3.   இலக்கினாதிபதியும், பத்தாமதிபதியும் புதன், குருவைக் கூடினால், ஜாதகன் யாகங்களைச் செய்வான்.
இலக்கினாதிபதி செவ்வாயைக் குருக் காண்கிறார். பத்தாமதிபதி சனியைப் புதன் கூடியுள்ளார்.
4.    ஒன்பதாம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் சுபவர்க்கம் பெற்றால், ஜாதகன் யாகங்கள் பல செய்வான்.
ஒன்பதாமதிபதியும், பத்தாமதிபதியும் சுபவர்க்கம் பெற்று, உச்சமடைகின்றனர்.
5.   பத்தாம் அதிபதியுடன், புதன், குரு கூடியிருக்க, யாகம் செய்யும் பாக்கியம் கிட்டும்.
பத்தாமதிபதியுடன் புதன் கூடி உள்ளார்.
6.   பத்தாமிடத்தில் ஒருக்கிரகம் இருக்க, புனிதன்.
இலக்கினத்துக்குப் பத்தாமிடத்தில் செவ்வாய் உச்சம் அடைகிறார்.

உதாரண ஜாதகம். 3.
31.12 1948 இரவு மணி 08,45 நிமிடம். வெள்ளிக்கிழமைசூரியன் வரு 03. மா11. நாள் 05
இவர் ஆதீனக்கர்த்தா. படிப்பாளி. தத்துவப் பேராசிரியர். பெரும் துறவி. நாள்தோறும் ஆன்மீகக் கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்றும் செம்மல். இவர் பேசாத ஆன்மீகக் கூட்டங்களே, பேரூரில் இல்லை எனலாம்.



இராகு





          இராசி

சந் செவ்

இல சனி
சூரிபுத கு

சுக்கி
கேது மா


1.   இலக்கினாதிபதியும், பத்தாமதிபதியும், நண்பர்களாய், கேந்திரக் கோணங்களில் நின்றால் துறவி.
இலக்கினாதிபதி சூரியன் திரிகோணத்தில், பத்தாமதிபதி சுக்கிரன் சதுர்கேந்திரத்தில் உள்ளதால், ஜாதகர் துறவு வாழ்க்கை வாழ்கிறார்.
2.   இலக்கினாதிபதியும், பத்தாமதிபதியும் புதன், குருவைக் கூடினால், துறவி.
இலக்கினாதிபதி சூரியன், புதன், குருவைக் கூடியுள்ளனர். அருகாமையில் சுக்கிரன் உள்ளார்.
3.    ஒன்பதாம் அதிபதியும், பத்தாம் அதிபதியும் சுபவர்க்கம் பெற்றால், ஜாதகன் யாகங்கள் பல செய்வான்.
ஒன்பதாமதிபதி செவ்வாய் உச்சம் பெற்று உள்ளார். பத்தாமதிபதி சுக்கிரன், பாக்கியாதிபதி செவ்வாயி வீட்டில் உள்ளார்.
4.   இலக்கினத்தையோ, இலக்கின அதிபதியையோ, செவ்வாய் பார்க்க, ஜீவக் காரகனானக் குரு சுபவர்க்கம் பெற ஜாதகன் அனுதினமும் சிவனை அர்ச்சனை செய்வான்.
இலக்கினத்தைச் செவ்வாய் பார்க்கிறார். இலக்கினாதிபதி சூரியனுடன் கூடிய குரு ஆட்சிப் பெற்று உள்ளார்.
5.   இலக்கினத்துக்கு ஐந்தாம், ஒன்பதாம் வீடுகளில் நான்குக் கிரகங்கள் கூடி நின்றால் துறவி.
ஐந்தாம் வீட்டில் மூன்றுக்கிரகங்களும், ஒன்பதாம் வீட்டில் ஒருக் கிரகமும் உள்ளனர்.
6.   சூரியனோ, புதனோ உச்சம் பெற்றிருக்க, அவர்களுக்குப் பின்ராசியில் அதாவது பனிரெண்டில், சுக்கிரன் இருக்க, தனித்தச் சனி காண, ஜாதகன் பிறந்தது முதல் சமாதி அடையும் வரை துறவியாக வாழ்வன்.
ஆட்சிப்பெற்ற குருவுடன் சூரியனும், புதனும் இருக்கின்றனர். அவர்களுக்குப் பனிரெண்டாம் வீடான விருச்சிகத்தில் சுக்கிரன் உள்ளார். அதனால், இன்றுவரை துறவறத்தில் வழுவாமல் இருக்கிறார்.
நம் கர்மாவைத் தொலைத்து, புண்ணிய ஆத்மாவாக வாழ முயல்வோம்.  
வாழ்க! வாழ்க! வாழ்கவே….
முத்துப்பிள்ளை
4/7/1 வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர்.624 701
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம். கைபேசி 91501 06069ச்


No comments:

Post a Comment