Thursday 6 November 2014

வாகனம்.


விடிந்ததில் இருந்து உறங்கப் போகும் நேரம் வரைவேலை, வேலையென்றுஓடிக்கொண்டேதான் இருக்கிறோம். நாம் ஓடவேண்டிய வேகத்தைக் கூட்டுவதற்காக நமக்கு ஒரு துணை தேவைப்படுகிறது. அதுதான் வாகனம். பணத்தேடலுக்கு ஆண்பெண் என்கிற பாலின வேறுபாடு இல்லை. ஓட்டம் நின்றால் தேடலும் நின்று விடும் அல்லவா? அதனால்தான் பயணதூரத்தைக் கடக்க  இருசக்கர வாகனமோ, நான்கு சக்கர சொகுசு வாகனமோ பயன்படுத்திக் கொண்டு இருக்கிறோம். நாம் என்றாவது புதிதாக வாகனம் வாங்கும்போதோ, நம்முடைய வரவுசெலவுக்குத் தகுந்தாற்போல் பழைய வாகனத்தை வாங்கும் போதோ, இதை முதன்முதலில் பயன்படுத்துவதற்கும் ஒரு காலநேரம் உண்டு என்பதை நம்மில் எத்தனைபேர் அறிந்து இருப்போம். இன்று அதைதான் பதிவிடப்போகிறோம்.


வாரத்தின் ஏழு நாட்களில் ஞாயிறு, திங்கள், புதன், வியாழன் இந்த கிழமைகளில் வரும், மகம், சித்திரை, ரோகிணி, உத்திரம், உத்ராடம், உத்ரட்டாதி, புனர்பூசம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்களோடு, திதிகளான பஞ்சமி,தசமி, ஏகாதசி, இவைகளும் கூட, மிதுனம், கடகம், கன்னி,தனுசு, மீனம் இலக்கினக் காலங்களும்  கூடி வரும் காலமே நாம் வாகனத்தை வாங்கி முதன்முதலாக பயணத்தைத் துவங்க வேண்டும். இக்காலத்தில் நாம் என்ன நோக்கத்திற்காகவாகனங்களை வாங்கினோமோ, அந்த நோக்கம் மிக எளிதாக நிறைவேறும்.                                                                                                                                                                                                                                                                                                முத்துப்பிள்ளை,    91501 06069,      93456 56268,

No comments:

Post a Comment