Saturday 15 November 2014

யோகினியும், வாரசூலமும் மறைந்திருக்கும் சூட்சுமங்களும் 1.….



நின்று நிதானித்து தன் பயணத்தைத் துவங்கிய மனிதனுக்கு, தன்பயணம்  வெற்றி பெறவேண்டும் என்கிற எண்ணம் இருந்தது. அவன் எப்போது எல்லாம்                           தோற்றானோ அப்போது எல்லாம் ஏன் தோற்றோம் என சிந்தித்தான். எப்போது எல்லாம் வென்றானோ, அப்போது எல்லாம் எப்படி வென்றோமென எண்ணினான்.

ஆனால்காலத்தோடு ஓடிக் கொண்டிருக்கும்  இன்றைய காலகட்டத்தில்    வென்றேயாக வேண்டும் என்கிற கட்டாயம் மனிதனுக்கு உண்டு.    தோற்றாலும், தோற்கடிக்கப்பட்டாலும், இந்த சமூகத்தால் புறம் தள்ளப்படுவோம் எனத் தெரியும்.

வாழ்க்கையில் தோற்றவனுக்கு வாய்ப்புகளை, அவனே தான் தேடிக்கொள்ளவேண்டும். யாரும்  வழங்குவதில்லை. காரணம் வெற்றியை ருசித்தவன் தான் மேனிலையில் இருப்பான்.

எந்தசெயலையும் செய்து முடிக்கஒரேவிதமான துல்லிய முயற்சிகள் இருக்கும் போது, வெற்றி, தோல்வியென இரண்டு  முடிவுகள் எப்படி இருக்கும்.

மனிதனின் அறிவு விழிப்படைந்த நாள்முதல் இன்றுவரை, பூமியிலும், வானிலும் அவன் கண்ட காட்சியினையும், அவன் கேட்ட  கேள்விகளையும், அதற்குக் கிடைத்தப் பதில்களையும், தன் அடுத்த தலைமுறைக்காக பதிவு செய்தான். கேட்ட கேள்விகளுக்கும், கிடைத்த பதில்களும் தீர்மானமாய் இல்லாத போது,   

இங்கேதான்விதி”  என்கிற பிள்ளையார் சுழி விழுந்தது. ஒரே செயலுக்காக ஒரே திசையில்  பயணப்படும் இருவரில், ஒருவர் வெற்றிப் பெறுகிறார். மற்றவர் தோற்கிறார் என்றால் காரணம் என்ன? இதுதான்விதிஎன்றால், விதி என்பதின் விளக்கம்தான் என்ன?

பிரபஞ்ச நுட்பங்கள் முதற்கொண்டு தனிமனித வாழும் நொடிவரை இறைவனின் அளவுகோலால் அளந்து வைக்கப்பட்டதாகும். இந்த அளவின் விகிதத்தை மனிதனின் அறிவால் அறியமுயல்வது , பெருங்கடலில் சிந்திய துளித்தேனைத் தெடுவதற்குச் சமமாகும்.

இதுதான் விதி. இதுதான் விதிக்கான விளக்கம் என  யாராவது சொல்ல முற்படும் போது, அங்கே  விதிக்குமாறாக வேறொன்று நடக்கும். விதியை தீர்மானித்து விடும் திறம், இன்னும் மனிதனுக்கு பரிபூரணமாய் சித்திக்கவில்லை.

முழுமையடைந்தவனும், ஏகாந்த பரவெளியில் மெளனியாகி விடுகிறான். அதனால்தான்,

ஏதோவொன்றால் உந்தப்படும்போது பெறும் வெற்றியால் மிதமிஞ்சிய கர்வம் தலைக்கு ஏறுகிறது.. அந்த,

ஏதோவொன்றால் கை விடப்படும்போது பெறும் தோல்வியால், ஏறியதெல்லாம் இறங்கிவிடுகிறது.

அந்த ஏதோவொன்றை இருக்கிறது என்பவனும், இல்லையென்பவனும் ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த  ஏதோவொன்றை”   இருக்கிறது என்பவனால்விதிஎனப்படுகிறது. இல்லையென்பவனால், “முயற்சியென்று அழைக்கப்படுகிறது.

விதியைத்தேடிய மனித அறிவின் தேடலில், விதியென்பது சிக்கியதோ இல்லையோ? மாபெரும் மனித வினைகள் தெரிந்தன. அப்படி மனிதனுக்கு நடந்த, நடக்கிற, நடக்கப்போகும், முக்காலப்பலன்களை அறிந்ததன் விளைவாக,

1. வானியல் ஜோதிடம்
2. பெயரியல்
3. எண் கணிதம
4. ஜாமக்கோள்
5. பிரசன்னம்
6. பஞ்சபட்சி
7. அங்க ஜோதிடம்
8. மருத்துவ ஜோதிடம்  என,

இன்னும் எண்ணற்ற வழிகளில், விதியின் சூட்சுமத்தை அறிந்துவிட துடிக்கிறான்.



இதில் ஒரு வழிதான் பூமியை அடிப்படையாக வைத்தும், சூரிய, சந்திரன் இயக்கத்தைக்கொண்டு, திசைகளை மையமாக வைத்தும்நம் பெரியோர்கள் இலைமறையாய் சொன்ன விடயத்தை, விபரமாக ஆய்வு  செய்வோம்.

ஆண்டவன் முதல் ஆள்பவன் வரை அதர்மத்தை அழிக்கப்பயன்படுத்திய ஆயுதம் சூலமாகும். ஒவ்வொரு கடவுளிடம் ஒவ்வொரு ஆயுதம் இருந்தபோது, அழிக்கும் தொழிலை பிரதானமாக செய்துவரும் சிவனிடம் இருந்ததோ சூலம்தான். அதனால்தான் நம்பெரியவர்கள்,” சங்கரனார் கை சூலம்என்றும், “ருத்தினார் கை சூலம்என்றும், வாரசூலையை குறிப்பிட்டுள்ளனர். சூலமிருக்கும் திசை என்று குறிப்பிடப்பட்டுள்ள, அன்றைய திசைநோக்கி பயணப்படும் ஒருவருக்கு துன்பத்தையே தருகிறது. அதனால் சூலமிருக்கும் திசையை, “சூலதோஷம்உள்ள திசையாக பெரியவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நல்லது செய்யத்தானே அந்த திசை நோக்கி செல்கிறோம். அப்படியிருக்கும்போது அதர்மத்தை அழிக்கும் ஆயுதமான  சூலத்தால் எங்களுக்கு துன்பத்தையோ, பாதிப்பையோ தந்துவிடுமா? என்ற கேள்வி எழுவது இயற்கைதான். உங்களுக்கு நன்மையாக இருக்கும் செயல், மாற்றாருக்கு துன்பமாக இருக்கலாம். மாற்றாருக்கு நன்மையாக இருக்கும் செயல், உங்களில் ஒருவருக்கு துன்பமாக, பாதிப்பாக இருக்கலாம். எந்த வினைக்கும் எதிராக ஓர் எதிர்வினை இருக்கத்தான் செய்யும். அதனால் சூலம் இருக்கும் திசை நோக்கி, அன்றைய பொழுதில் குறிப்பிட்ட நாழிகைக்குள் மட்டும், நம் பயணத்தை துவங்காமல் இருப்பது நல்லது.

வாரசூலத்தையும், யோகினியையும் காலண்டர்களிலும், நாம் அன்றாடப் பயன்படுத்தம் பஞ்சாங்கத்திலும் மட்டுமே குறிப்பிடப் பட்டுள்ளது. இது சிலருக்கு தெரியும், பலருக்குத் தெரியாது. தெரியாமல் இருப்பது என்பது இதைப்பற்றி தெரியாமல் இருப்பவர்களின் குற்றமல்ல. இதைப்பற்றித் தெரிந்தவர்கள் எல்லோரும் இதுபோன்ற சூட்சுமங்களை எல்லாம் தன்னுடைய குலச்சொத்தாகப் பாவிப்பதன் விளைவாக, கேட்பாரற்று பாழாய் போய்விட்டன.

நம் முன்னோர்களின் சொத்துக்களை மீட்டெடுக்க, என்னறிவுக்குள் விடுவிக்கப் பட்ட புதிர்களை, உங்களோடு பகிரவே விரும்புகிறேன். நம்முடைய அறிவுக்குள், வேறொருவருடைய எண்ணமும், கருத்தும் புதைந்திருப்பதால், யாருடைய அறிவும் யாருக்கும் சொந்தமானதல்ல. உங்களால், உங்களின் ஆத்மாவால், எம் அறிவு உணரப்பட்டிருந்தால், என்னறிவும் உங்களுக்குத் தான் உரிமையானது.

இனி கட்டுரைக்குள் செல்வோம்.


பொதுவாக, வாரசூலை உள்ள திசை நல்லசெயல் செய்வதற்கு உகந்த இடமாக இல்லாதைப்போல, யோகினி(துர்க்கை) நிற்கும் திசையும் நல்லது செய்வதற்கு உகந்த இடமாக இருப்பதில்லை. சூலம் என்பது சிவத்தையும், யோகினி(துர்க்கை) என்பது காளியையும் குறிக்கும். சிவமும், காளியும் எந்த திக்கில் நிற்கிறார்களோ, அந்த திசை கடுமையான சோதனைகளைத் தருகிறது. முதலில் வாரசூலையைப் பற்றிய பாடல்களையும், விளக்கங்கலையும் காண்போம்.

ஆய்வு.         முத்துப்பிள்ளை
 4/7/1.வடக்குவெள்ளாளர் தெரு .                                      .                                      ஆத்தூர்.624701.அஞ்சல்
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி. 91501 06069  

1 comment: