சூரியனும் சந்திரனும் ஒன்று கூடினால், அது அமாவாசையாகும். இதற்கு இரவிச்சந்திர யோகம் என்று நம் முன்னோர்கள் கூறினர். ஒரு ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் 2,8,12 மிடத்தைத் தவிர மீதி உள்ள அனைத்து இடங்களிலும் கூடலாம். ஜாதகர் பகலில் பிறந்தவராக இருந்தால், 3,6,10,11ல் இருக்கவேண்டும். அப்போது அந்த கிரகத்தால் பலம் அதிகம். ஜாதகர் இரவில் பிறந்தவராக இருந்தால், 1,4,5,7,9 ல் பலம் அதிகம்.
சூரியன் தலைமைக்கிரகமாக
இருப்பதால்,
வாக்குவன்மை,
அரசு
உயர்பதவி,
கூர்மையான
மதிநுட்பம்,
தொழில்
முதன்மை,
செல்வம்,
செல்வாக்கு
முதலிய
சீரான
நல்ல
பலன்களே
நடந்து
வரும்.
32.
மாருத
யோகம்.
சூரியனுக்கு கேந்திரத்தில்
சந்திரன்
இருந்திட,
சந்திரன்,
குரு, சுக்கிரன் மூன்றுகிரகங்களும்
ஒன்றுக்கொன்று
திரிகோணத்தில்
இருக்க,
அதற்கு
மாருத
யோகம்
என்பர்.
இதன்பலன்கள்; ஜாதகர் நல்ல மனதுடையவர். தைரியமுடையவர்,செல்வவளம், நல்ல புலமை உடையவர், சாத்திரங்களைக்
கற்றவர்,
பெரிய
வியாபாரி,
அதிகாரமிக்கவர்,
பக்தியுள்ளவர்,
வெற்றியான
வாழ்க்கை
அமைத்தவர்
ஆகிய
பலன்கள்
நடக்கும்.
33.
திரிலோசனா
யோகம்.
சூரியனுக்கு 5,9 ல் சந்திரன், செவ்வாய் நின்றாலோ, இந்த மூன்றுகிரகங்களும்
ஒன்றுக்கொன்று
திரிகோணங்களில்
நின்றாலும், மேலும், சூரியனுக்கு கேந்திரத்தில்
சந்திரன்,
செவ்வாய்
நின்றாலும்,
அல்லது
மூன்று
கிரகங்களும்,
ஒன்றுக்கொன்று
கேந்திரத்தில்
நின்றாலும்,
இந்த
யோகம்
ஏற்படும்.
இவர்கள் ஞானமிக்கவர், தீர்க்கதரிசனம்
மிக்கவர்,
தியாக
உணர்வு,
கொடைத்தன்மை,
இறை
காரியங்களில்
உளப்பூர்வமான
ஈடுபாடு,
சொற்பொழிதல்,
சாத்திர
ஞானம்,
ஒருவரைக்
கண்டதும்
உள்ளுணர்வு,
ஆகிய
சிறப்பானப்
பலன்களே
நடக்கும்.
34.
பாஸ்கரா
யோகம்.
சூரியனை பாஸ்கரன் என்று அழைப்பர். சூரியனை மையமாக வத்து இந்த யோகம் இருப்பதால், அதற்கு பாஸ்கரா யோகம் என்று பெயர். சூரியனுக்கு இரண்டில் புதன் இருக்க, புதனுக்கு பதினொன்றில் சந்திரன் நின்று, சந்திரனுக்கு கேந்திர, கோணங்களில் குரு நின்றால், அது பாஸ்கர யோகமாகும்.
இன்னும் ஒரு அமைப்பாக இலக்கினத்துக்கு
மூன்றில்
சூரியன்,
நான்கினில்
இராகு,
ஏழினில்
குரு,
பத்தினில்
சனி
இருந்தால்
அதுவும்
பாஸ்கர
யோகமே
என்ற
கருத்தும்
உண்டு.
மேலும், சூரியனுக்கு இரண்டில் சந்திரனும், புதனும் இருந்தாலும் பாஸ்கரயோகமே. இலக்கினத்தில்
சூரியனிருந்து,
அவருக்கு முன்னே புதன் இருந்து, பின்னே சந்திரனிருந்து, சந்திரனுக்கு கேந்திரத்தில்
குரு
இருந்தாலும்
பாஸ்கரயோகமே
என்பார்கள்.
சூரியனைச்
சுற்றி
சுபக்கிரகங்கள்
தான்
இருக்கவேண்டும்.
பாபக்
கிரகக்
குறுக்கீடு
இருந்தால்,
தோஷம்
பங்கப்படும்.
சூரியன் அதிகாரம் தரும் கிரகமாக இருப்பதால், அதிகாரம், செல்வாக்கு, சொல்வாக்கு, நீதிவழங்குதல், மதக்கடமையாற்றுதல், தொழில் மேன்மை உடையவராகவும் இருப்பார்.
35.
பெளர்ணமி
யோகம்.
சூரியனும், சந்திரனும் நேரெதில் இருந்தால் பெளர்ணமி யோகமாகும். இலக்கினத்திலிருந்து
சூரியனும்,
சந்திரனும் எந்தெந்த பாவத்தில் நின்று, பெளர்ணமி யோகத்தை தருகிறார்கள் என்று கவனிக்கவேண்டும். இலக்கினத்திற்கு
ஆறில்
ஒரு
கிரகம்
இருந்தால்,
மற்றொரு
கிரகம்
பனிரெண்டில்
இருக்கும்
அல்லவா?
இந்த
அமைப்பு
தீமையைத்தரும்.
இலக்கினத்தில்
இருந்து
ஒருகிரகம்
நல்ல
வீட்டில்
இருந்தால்,
மற்றொரு
கிரகம்
தீமை
பயக்கும்
வீட்டினில்தான்
இருக்கும்.
இங்கே
இரண்டு
கிரகங்களின்
கதிர்வீச்சுக்கள்
தான்,
ஜாதகர்க்கு
(அதாவது
சமசப்தம
பார்வை)
நன்மையைத்தருகின்றன.
சூரியனோடு,
புதன்,
குரு,
சுக்கிரன்
இருக்கும்போது
நிகழும்
பெளர்ணமி
யோகம்,
ஜாதகர்க்கு
அதிகப்படியான
நன்மையானப்
பலன்களைத்
தருகின்றன.
ஆனால்,
தீயக்
கிரகங்களான
இராகு,
கேது,
சனி
இவைகளில்
ஒன்று
கூடியிருந்தாலும்,
யோகம்பங்கப்படும்.
36.
அமாவாசையோகம்.
சூரியனும், சந்திரனும் கூட அமாவாசையோகம் ஏற்படுகிறது. இவர்கள் இருவரும் இலக்கினத்திற்கு
மறைவிடமான
6,8,12 மிடங்களைத்
தவிர,
மீதமுள்ள
எல்ல
இடங்களிலும்
இருக்கலாம்.
இன்னும்
சிறப்பாக
இருக்கும்
என்றால்,
அது
கேந்திர
ஸ்தான்ங்கள்
தான்.
அதற்கு
அடுத்தபடியாக,
திரிகோண
ஸ்தான்ங்களில்
சூரியன்,
சந்திரன்
கூடியிருப்பது
சிறப்பானப்
பலனைத்தரும்.
ஜோதிடம் தொடர்புடைய எவ்வளவோ மூடத்தனமான சொற்களைப்போல, அமாவாசை யோகத்தைப் பற்றியும், சில தவறான கருத்துகள் பரப்ப்ப்பட்டுள்ளன. அது என்னவென்றால், அமாவாசையில் பிறந்தவன் திருடினால் வெளியேதெரியாது
என்பதுதான்.
ஏதோ
அமாவாசையில்
பிறந்தவன்
திருடனாகத்தான்
இருப்பான்
என்பது
போன்ற
வார்த்தைகள்,
இந்தயோகத்தில்
பிறந்த
ஆண்பெண்ணுக்கு
திருமணம்
செய்து
பார்ப்பதில்
பாதிப்பைத்
தருகிறது.
ஆதாரமற்ற
செய்திகள்
வாழ்வைப்
பாழாக்கும்.
இளைய
தலைமுறையினர்
இதுபோன்ற
வார்த்தைகளை
நம்பாதீர்கள்.
அமாவாசையோகம்
ஆணையோபெண்ணையோ
திருடனாக
ஆக்காது
என்பதை
மீண்டும்
வலியுறுத்துகிறேன்.
37.
புதாதித்ய
யோகம்.
சூரியனும், புதனும் ஒருராசியில் கூடினால், இந்த யோகம் ஏற்படும். இவர்கள் 7,10 ல் கூடினால் மிகவும் சிறப்பானது. “ விளையும் புதனும், சூரியனும் விரும்பியே ஒன்று, நான்கு, எட்டில் வளையக் கூடிட்டால் மன்னவனாம்” என்கிறது தமிழ் ஜோதிடப்பாடல். அனைத்து கேந்திர வீடுகளில், இவர்கள் இருக்க மிகவும் சிறப்பாகிறது. மேலும் மறைவிடங்களான 6,8,12 ல் எட்டாமிடத்தைத்
தவிர,
மீதமுள்ள
6,12ல்
இருப்பது
கடுமையான
எதிர்விளைவுகளைத்
தரும்
பலன்களைத்
தரும்.
மீதமுள்ள
2,5,9,11 மிடங்களில்
இருந்தாலும்,
யோகபலன்கள்
உண்டு.
நுண்ணறிவு மிக்கவர், கூர்த்த மதி, சிந்தனைத் திறன், பேச்சாற்றல் மிக்கவர், எல்லாமே கற்பது, கற்றதை வெளிப்படுத்துவது
முதலிய
அறிவுத்
தொடர்புடையப்
பலன்களே
அதிகம்
நடக்கும்.
38. உபயசர யோகம்.
சுரியனுக்கு முன்னும்பின்னும்
பஞ்சமகா
புருஷக்கிரகங்களில்
(செவ்வாய்,
புதன்,
குரு,
சுக்கிரன்,
சனி) தனித்த கிரகமோ, ஒன்றுக்கு மேற்பட்டக் கிரகங்கள் இருந்தால், அதற்கு உபயசர யோகம் என்று பெயர்.
சூரியனுக்கு முன்னே, பின்னே சுபக்கிரகங்களான புதன், சுக்கிரன், குரு இருந்தால் “சுப உபயசர யோகம்” என்று பெயர்.
சூரியனுக்கு முன்னே, பின்னே பாபக்கிரகங்களான
செவ்வாய்,
சனி
இருக்க,
அதற்கு
“ பாப
உபயசரயோகம்
“ என்று
பெயர்.சுப உபயசரயோகத்தின்பலன்களான,
வாக்குவன்மை,
பேச்சுத்
திறமை,
செல்வாக்கு,
அந்தஸ்து,
கெளரவம்,
தனச்சேர்கை,
சுகபோகமான
வாழ்க்கை,
ஆகியவைகளை
அளிக்கும்.
பாபௌபசரயோகத்தின்
பலன்கள்
இதற்கு
நேர்மாறானவை.
39.
வெசி
யோகம்
சூரியனுக்கு முன்னே பஞ்சமகா புருடக் கிரகங்களில் (புதன், குரு, சுக்கிரன், செவ்வாய், சனி).ஒன்றோ, ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்களோ இருந்தால், அதற்கு வெசியோகம் என்று பெயர். சூரியனுக்கு முன்னே (சூரியனுக்கு இரண்டாம் வீட்டில்) சுபக்கிரகங்கள்
இருந்தால்,
“சுப
வெசியோகம்”
என்றும்,
சுரியனுக்கு
இரண்டில்
பாபக்கிரகங்கள்
இருந்தால்,
“பாப
வெசியோகம்”
என்றும்
அழைக்கப்படும்.
சுபக்கிரகங்கள்
நன்மையைத்
தரும்.
பாவக்கிரகங்கள்
தீமையைத்
தரும்.
40.
சதுர்சாகர
யோகம்.
ஒரு ஜாதகத்தில் 1,4,7,10 எனும் கேந்திர ஸ்தானங்களில் இராகு, கேதுவைத் தவிர்த்து, மற்ற ஏழுகிரகங்கள் இருந்தால், அதற்கு சதுர்சாகர யோகம் என்று பெயர். இது இலக்கினத்தைப்
பாதுகாக்கும்
கோட்டைபோன்ற
அமைப்பாகும்.
இந்த
கேந்திர
அமைப்பிற்குள்
நிற்கும்
கிரகங்கள்
ஆட்சியோ,
உச்சமோ
பெற்று
இருந்தால்,
ஜாதகர்க்கு
அபரிதமான
யோகத்தைத்
தந்துவிடும்.
நீண்ட் ஆயுளும், சமூக மதிப்பு மரியாதையுடனும்
வாழ்வார்.
செல்வாக்குடையவர்,
நலகுழந்தைப்
பேற்றினை
உடையவர்.கடல்கடந்த வெளிதேசங்களிலும்
பேரும்புகழும்
பெற்று
வாழ்வார். முத்துப்பிள்ளை. 91501 06069 93456 56268
.jpg)
No comments:
Post a Comment