Friday 21 November 2014

கற்பது கை மண்ணளவு.

     
                
          கண் உடையர் என்பவர் கற்றோர் முகத்து இரண்டு
          புண் உடையர் கல்லாதவர். குறள்.393.
கல்வி கற்றவர்களுக்குத்தான், முகத்தில் கண்களிருக்கும். கல்வி கல்லாதவர்களின் முகத்திலோ, கண்களுக்குப் பதில் இரண்டு புண்கள் தான் இருக்கும்.

மத்திய, மாநில அரசுகள் தங்கள் வருடாந்திர வரவுசெலவுக் கணக்கில், கல்விக்காக பெரும் தொகையை செலவிட்டு வருகின்றன. சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களும், கல்விக்காக பெரும் தொண்டாற்றி வருகின்றனர். , சேவை மனப்பான்மையுடன் செயல்படும்,   எத்தனையோ தனியார் நிறுவனங்களும், கல்வியை பொருள் ஈட்டப்பயன்படுத்துவதில்லை. அறிவுக்கண்ணைத் திறக்கும் எத்தனையோ, அறநிலையங்களும், கல்வியை அமுதம்போல் ஊட்டுகின்றன.

அரசாங்கம் முதல் அறநிலையங்கள் வரை, கல்விக்காக தன்னை அர்ப்பணித்தாலும், ஒரு தனி மனிதனுக்கு கிரகங்களும் உறுதுணையாக இருக்கவேண்டும். வானமண்டலத்தில் உள்ள நட்சத்திரங்களும், கிரகங்களும், ஒருவரின் ஜாதகத்தில் எந்த நிலையில் உள்ளதோ, அதையொட்டியே, அந்த ஜாதகரின் கல்விநிலையும் இருக்கும்.

கற்றறிந்தவர்களின் ஜாதகங்களில் கிரக அமைப்புகள் எப்படி உள்ளன என்பதை நாமும் ஆராய்வோம்.

இரா செ
சுக்
குரு

சூரி புதன்


26.06.1894.காலை 11.00 கல்லூரி விரிவுரையாளர்.





இல

சந்



சனி


 உதாரண ஜாதகம். 1: 1) ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில் இலக்கினாதிபதி புதனுடன் கூடவேண்டும், இல்லையென்றால், இலக்கினத்தில் புதன் அமர்ந்திருக்க, இலக்கினாதிபதி கண்டாலும், கல்வியில் தேர்ச்சி அடைவார்.

2) இலக்கினத்திற்கு 9ல் சுபக்கிரகங்கள் அமர்ந்திருந்தால், மொழி ஆராய்ச்சியில், மிகச் சிறப்பாக ஈடுபடுவார்.
3) 4ம் அதிபதியும், சந்திரன், சுக்கிரன் இவர்களும், இலக்கினத்துக்கு கேந்திர, கோணங்களில் நின்றாலும், மிதுனம், கன்னியில் புதன் நின்றாலும்,, தான் எந்த துறையில் சார்ந்திருக்கிறோமோ, அந்த துறையில் மிகச்சிறந்த வல்லவனாக இருப்பான்.
4) இலக்கின கேந்திர கோணத்தில் சூரியன், புதன் அமர்ந்திருந்தாலோ, இலக்கினத்துக்கு 11 ஆம் வீட்டில் அமர்ந்திருந்தாலோ, தணிக்கைத் துறையில் நிபுணனாக இருப்பார்.
5) செவ்வாய்க்கு கேந்திரத்தில் புதனிருக்க, கணிதத் துறையில் பணியாற்றுவார்.
6) இர்ண்டு, மூன்றுக்குடையவர்களை Wதிரன் காண, ஜோதிடம், சிற்பம், இலக்கணம், கணிதம் அறிந்தவர்.

உதாரண ஜாதகம். 2.
1) ஒன்பதில் சுபக்கோள் நிற்க, மொழிவளம் மிகுந்தவர்.
2) செவ்வாய்க்கு முன்னே, பின்னே புதன் அமர,அல்லது இருவரும் கூடி பத்திலமர, கல்வியில் தேர்ச்சியடைவார்.
  


இல

இரா

       குரு


சந் சனி

03.11.1965 மாலை 05.40.                                                         
         மருத்துவர்








செவ் சுக்

  புதன்  கேது

சூரி




3) இலக்கினாதிபதி ஒன்பதில் அமர்ந்தாலும், புதனோடு இரண்டுக்குடையவர் கூடினாலும், கல்வியில் சிறப்பாக தேர்ச்சியடைவார்.
4) இலக்கினத்தில் ஏழாமதிபதி திரிகோணமேற, தான் சார்ந்த துறையில் வல்லுனராய் இருப்பார்.

உதாரண ஜாதகம். 3.

1) இலக்கினத்திற்கு நான்காமிடத்தில் புதன் அமர்ந்தால், சாத்திரங்கள் பல கற்பார்.
2) இலக்கினக் கேந்திரங்களில் புதன் அமர்ந்தால், கணிதம் அறிந்தவர். இவர் கணித ஆசிரியர்தான்.


    சனி இராகு






       சுக்

                        12.01 1969.அதிகாலை 01.06.
             கணித ஆசிரியர்.




புதன்




சூரி


இல சந் செவ்

      குரு கேது


3)இலக்கினத்திற்கு நான்கில் பாவிகள்  தொடர்பு இல்லாமல் அமரும் புதன், ஜோதிடஞானத்தைத் தருவான். இவரும் ஜோதிடர் தான்.
4)  இரண்டாமதிபதி செவ்வாயாகி சந்திரனுடன் கூடவும், கேந்திரத்தில் புதன் அமரவும் உள்ள ஜாதகர் கணித சாத்திரங்களில் வல்லவராக இருப்பார்.
5) செவ்வாய்க்கு கேந்திரத்தில் புதன் அமர, கணித ஆராய்ச்சியில் வல்லவன்.
6) இலக்கினாதிபதி சந்திரனுக்கு திரிகோணம் பெறவும், இலக்கினத்துக்கு இரண்டுக்குடையவரும்சந்திரனும் கேந்திரம் பெறவும்,, ஜாதகர் கல்விக்கேள்விகளில் சிறந்தவராவார்.

உதாரண ஜாதகம். 4.
1)இலக்கினத்தில் குரு உச்சம் பெற, கணக்குப் போட்டு வேலை செய்வதில் வல்லவர்.
2) இரண்டில் செவ்வாய் வழக்குரைஞர்.


      கேது


 சூரி புதன் சனி







பிரபல குற்றவியல் வழ்க்குரைஞர்.

    இல   குரு



       செவ்





       இராகு


3) இரண்டில் செவ்வாய் அமர, கேந்திர, கோண, இலாபஸ்தானத்தில் புதன் அமர. சகலத்துறையில் நிபுணத்துவம்  பெறுவார்.
4) இலக்கினத்துக்கு பத்துக்குடைய ஜீவனக் கிரகம், வாக்கு ஸ்தானத்தில் அமர, பேசுவதிலே பெரும் பணம் சம்பாதிப்பார்.
5) சுபக்கிரகங்களுடன் சூரியன், சனி எங்கு கூடினாலும், பெரும் கல்விமான்.
6) இலக்கினத்துக்கு இரண்டுக்குடையவருடன் புதன், சுக்கிரன் தொடர்பு ஏற்பட, பெரும் கல்விமான்.
7) இலக்கினத்துக்கு இரண்டுக்குடையவருடன் புதன் கூடினாலும்இலக்கினத்தில் குரு உச்சமடைந்து நின்றாலும், பெரும் கல்விமான்.

உதாரண ஜாதகம். 5.

1)செவ்வாய்க்கு முன்னே, பின்னே புதன் அமரவும், அல்லது செவ்வாய், புதன் கூடவும், இல்லையென்றால், செவ்வாய்,புதன் பத்தில் அமரவும் பெரும் கல்விமான்.
2) சூரியனுக்குப் பின்னே குரு, சுக்கிரன் அமர, பாலை யோகம் எற்படும். இதன் பலன் என்னவென்றால், கணக்கற்ற பட்டப் படிப்புகளை படிப்பார். பல நூல்களைக் க்ற்பார். வித்தைகளில் சிறந்தவர். பலகவிதை நூல்களைக் கற்பார்



இராகு







31.10.1948. 08.45 மாலை துறவி.

இல


    சந் செவ்

       சனி


  சூரி புதன் குரு

சுக்

கேது





3)இரண்டாம் அதிபதியையும் சூரியன், செவ்வாய் இவர்களையும் குரு, சுக்கிரன் காண,கூட, அல்லது இவர்களுக்கு அருகில் குரு, சுக்கிரன் அமரவும், ஜாதகர் வேதங்களை அறிந்த ஞானி.
4) இலக்கினத்துக்கு நான்காம் அதிபதியை திரிகோண அதிபதிகள் கூடுவதும், காண்பதும், அருகிலுள்ல ராசியில் அமர்வதும், பரிவர்த்தனை பெறுவதும், கல்விச்செல்வமும், பெரும் பதவியும், இலட்சுமி கடாட்க்ஷமும் பெறுவார்
5) சந்திரன், சுக்கிரன், குரு இவர்கள் தொடர்பு கொள்வதும் இவர்கள் அருகருகே அமர்வதும், வேதாந்த கல்வியைத் தரும்..
6) இரண்டு, மூன்ருக்குடையவர்களை சந்திரன் காண்பதும், பார்ப்பதும், ஜோதிடம், சிற்பம், கணிதம், இலக்கணம் இவைகளை அறிந்திருப்பார்.
7) இரண்டுக்குடையவருடன் புதன் கூடுவதும், அல்லது இரண்டாமதிபதியின் இராசிக்கு  அருகிலுள்ள இராசியில் புதன் அமர்வதும் கல்வியில் தேர்ச்சியடைவார்.
                                            வாழ்க வளமுடன்
முத்துப்பிள்ளை
4/7/1 வடக்கு வெள்ளாளர் தெரு
ஆத்தூர் அஞ்சல்.624 701
ஆத்தூர் வட்டம்
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி எண். 91501 06069. 93456 56268











































No comments:

Post a Comment