Thursday 6 November 2014

திரு. மீனம் பச்சமுத்து அவர்கள்

நண்பர் அஸ்ட்ரோ செந்தில் குமார் எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த பல எண்ணங்களை எழுப்பிவிட்டார். நான் திரு ஆசான். எடப்பாடி மீனம் பச்சமுத்து அவர்களோடு திரு. செந்தில் அவர்களின் புகைப்படத்தையும் கண்டபோது, மிகவும் கலங்கிவிட்டேன். 





குருவருள் ஜோதிடம்மாத இதழில் ஐயா அவர்கள் துணையாசிரியராக இன்றும் உள்ளார். பல கருத்தரங்களில் தன்னுடைய ஜோதிடக் கருத்துக்களை ஆணித்தரமாக பேசுவதில் வல்லவர். பல நூற்களைக் கற்றுத்தேர்ந்தவர். எங்கும் கிடைக்காத நூல்களையும் சேகரித்து தந்து உதவுவார். காணாமல் போய்விட்டதாக கருதப்பட்ட பலநூற்கள், இவரால் புதுப்பிக்கப்பட்டன. எந்தப் புத்தகத்தையும் இல்லைஎன்று சொல்லமாட்டார். தேடுவோம் ஐயா கிடைச்சா தந்துடுறேன்என்பார். தன்னிடம் 
இல்லை என்றாலும், இருக்கும் இடத்தைச் சொல்லிவிடுவார். 

நான் ஜோதிடத்தில் கற்கும் நிலையில் தான் என்றும் இருப்பேன். என் நண்பர்கள் ஜோதிடக் கட்டுரைகள் எழுதத் தூண்டியபோது, முதன்முதலில் குருவருளில்தான் கட்டுரை எழுதினேன். கட்டுரையின் தலைப்பு திருமணமும் முறிவைக் கொடுத்திடும் ஜாதக அமைப்பும்என்பதாகும். அதிலிருந்து தான் ஐயா எனக்கு அறிமுகமாகிறார். அது என் பிறவின் பலனாகத்தான் பார்க்கிறேன். ஜோதிடத்தில் எந்த சந்தேகமாக இருந்தாலும், ஐயாவிடம் மட்டுமே கேட்பேன். மரணநாளின் மர்மங்கள்என்ற கட்டுரைக்காக இதழ்களில் எழுதுவதை நிறுத்திவிட்டு, அது தொடர்பான தேடல்களில் ஈடுபடும்போது, அந்த கட்டுரைக்காக பல கருத்துக்களை சொல்வார். அந்த கட்டுரைக்காக நான் சிந்தித்தைவிட, அவர் சிந்தித்திருக்கும் நாள்தான் அதிகம். 

நான் கண்ட ஜோதிடப் பேரோளிஇவர்தான்.
நான் கண்ட ஜோதிடப் பேழையும்இவர்தான்.
 

என் முன்னேற்றத்தின் ஊன்றுகோலே, முகநூலில் பல கருத்துக்களைப் பதிய அன்புடன் அழைக்கும் 

உங்கள் முத்துப்பிள்ளை.

No comments:

Post a Comment