Tuesday 4 November 2014

யோகங்கள். 3

 
                                                                                                                                               21. கஜகேசரி யோகம்.
இந்த யோகம் சந்திரனை மையப்படுத்தி அமைந்துள்ளது. சந்திரனுக்கு 1,4,7,10 எனும் கேந்திரங்களில் ஒன்றில் குரு இருப்பது, ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அனித்தும் விலகிவிடும் என்பர். அதாவது, கஜம் என்றால் யானை, கேசரி என்றால் சிங்கம் என்று வடமொழியில் கூறுவர்.   இந்த பூமிக்கிரகத்தில் வாழும் உயிரின்ங்களிலே உருவில் யானைபெரியது. அதேபோல், பலமும் மிகுந்தது. யானையோடு ஒப்பிடும் போது சிங்கம் வலுக்குறைந்தது. உருவில் சிறியது. ஆனால், சிங்கத்தைக் கண்ட யானை அச்சமடையும். பயம் கொள்ளும். காட்டில் அங்குமிங்கும் ஓடி பதட்டமடையும்.அதேபோல, சந்திரனும், குருவும் ஒன்றையொன்று கேந்திரத்தில் அமர, ஜாதகத்தில் உள்ள தோஷங்கள் அனைத்தும் பறந்தோடிப்போகும்.
எதிர்ப்புகளை துச்சமாக மதிப்பார். அதை எளிதில் வெற்றிக் கொள்வார். இருவரில் ஒருவர் உச்சமாகி, மற்றவர் நட்பானால் மிகச்சிறப்பானப் பலன்களே நடக்கும். இரண்டு கிரகங்களும் பகை பெற்று இருந்தால், பலன் மத்துவமாகவே இருக்கும்.

22. சந்திர மங்கள யோகம்.
மங்களன் என்று அழைக்கப்படும் செவ்வாயும், சந்திரனும் கூடினால், இந்த் யோகம் அமையும். இந்த யோகத்தை சசி மங்கள யோகம் என்றும் அழைப்பர். சந்திரனுக்கு சசி என்ற பெயரும் உண்டு. அதேபோல் செவ்வாயை மங்களன் என்று அழைப்பர். இவர் பெண்களின் பூவுக்கும், பொட்டுக்கும் சொந்தக்காரனாக இருப்பதால், அவருக்கு மங்களன் என்று அழைக்கப்படுகிறார்.
சந்திரனும், செவ்வாயும் கூடி இருந்தால், இந்த யோகம் இருக்கிறது என்று அர்த்தம். மேலும், இருவரும் சமசப்தமாகப் பார்த்துக் கொண்டாலும் (ஏழாம் பார்வை ) இந்த யோகம் ஏற்படும். மேலும், சில விதிகள் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டும்உள்ளது.அது என்னவென்றால், மேடத்தில் செவ்வாய் ஆட்சிபெற்று இருந்து, சந்திரன் கடகத்தில் ஆட்சி பெற்று இருந்தாலும் இந்தயோகம் ஏற்படுவதாக ஒரு கருத்து இருக்கிறது. இந்த அமைப்பு ஒன்றுக்கொன்று 4 க்கு 10 ஆக இருப்பதால் கேந்திர நிலை அடைகிறது.
இதன் பலன் என்னவென்றால், கம்பீரத்தோற்றம், எதிர்பாரா தனவரவு, செல்வம், செல்வாக்கு, உயர்கல்வி, அறிகாரப்பதவி, சுலபவெற்றி, வெளிதேசப் பயணம், அறுஐ சிகிச்சை நிபுணர் ஆதல்,கட்டிடக்கலை நிபுணர், விளையாட்டு வீர்ர், எந்த கிரகத்தின் வீட்டி அமர்ந்து, இலக்கினத்துக்கு எந்த கேந்திரத்தில் வருகிறதோ அந்த பாவகப்பலனையும் இணைத்தே தருவார்கள்.

23. வசுமதி யோகம்.
இலக்கின கேந்திர ஸ்தானங்கள், 1,4,7,10  திரிகோணம், 1,5,9. பணபரம், 2,5,8,11 ஆபோலீக்கியம் 3,6,9,12. உபஜெயம் 3,6,10,11. சதுச்சரம் 4,8. மறைவு ஸ்தான்ங்கள் 3,6,8,12  ஆகும். இது நம்மில் எல்லோர்க்கும் தெரிந்த செய்திதான்.
சந்திரன் நின்ற இராசியில் இருந்தோ, இலக்கினத்தில் இருந்தோ, உபஜெய ஸ்தானமான 3,6,10,11மிடங்களில் மற்ற சுபக்கிரகங்களான, புதன், குரு, சுக்கிரன் ஆகியவை தனித்தனியாகவோ, அல்லது ஒன்று கூடியோ இருந்தால், இந்த வசுமதி யோகம் ஏற்படும்.
இந்த யோகத்தை பெற்றவர்கள் சுயசம்பாத்யம் உடையவர்கள். எவரையும் அண்டிப் பிழைக்க மாட்டார்கள். செல்வம், செல்வாக்குடன் அமோகமாக வாழ்வார்கள்.

24.சந்திரிகா யோகம்.
இது மிகவும் அபூர்வமான யோகமாகும். இலட்சத்தில் ஒருவருக்குத்தான் இந்த யோகம் அமைந்திருக்கும். சந்திரனுக்கு இரண்டில் குருவும், சனியும் இருக்க, மூன்றாமிடத்தில் செவ்வாய் இருக்க, எட்டில் சுக்கிரன் இருக்க, சந்திரிகா யோகம் ஏற்படும்.
குருவும், சனியும் ஒருமுறை கூடிப் பிரிந்து, மறுமுறை கூட ஏறத்தாழ பதினாறு வருடங்கள் ஆகும். அதன்பின் செவ்வாய் மூன்றிலும், சுக்கிரன் எட்டிலும் இருக்கவேண்டும். இவர்களோடு வேறு எந்த பாவக்கிரகச் சம்பந்தம் ஏற்பட்டால், இந்தயோகம் பங்கப்பட்டுவிடும்.அதனால் தான் இது அபூர்வமான யோகம். இதன் பலன் என்னவென்றால்,
ஜாதகர் நல்லபரம்பரையில் பிறந்தவராக இருப்பார். கெளரவம் மிக்கவர்.உயர்பதவிகள் கிட்டும். அரச ஆதரவு உண்டு. அதிகாரம் மிக்கவர், ஆலயத்திருப்பணிகள் செய்பவர். ஆகிய மிக நல்லபலன்களும், இவர்கள் எந்த ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார்களோ, அந்த பாவக்க் காரகப் பலன்களையும் செய்வர்.

25. இராஜலட்சண யோகம்
சுபக்கிரகங்களான வளர்பிறை சந்திரன், குரு, சுக்கிரன், புதன் ஆகிய கிரகங்கள் சந்திரனுக்கோ, இலக்கினத்துக்கோ கேந்திரங்களில் தனித்தனியாகவோ, அல்லது ஒன்றாகவோ இருந்தால் இந்த யோகம் ஏற்படும். நான்கு கிரகங்களில் ஏதேனும் ஒன்றோ, இரண்டோ பலஹீனப்பட்டு இருந்தால், நடக்கும் பலன்களும், திருப்திகரமாக இருக்காது. எந்த அளவுக்கு பலம்பெற்று  கிரகங்கள் இருக்கிறதோ, அந்தளவுக்குத்தான் பலன்கள் கிடைக்கும்.இதற்கான பலன்கள். அரசனைப்போல வாழ்வான்.

26. சகடயோகம்
இது வரை சுபயோகமாக பார்த்து வந்தோம். இப்போது அவயோகத்தைக் காண்போம். சந்திரனுக்கு 6,8,12ல் குருவந்தாலும், குருவுக்கு 6,8,12ல் சந்திரன்வந்தாலும் அது சகடயோகமாகப் பார்க்கப்படுகிறது. இதில் ஒரு நூணுக்கமான விடயம் இருப்பதைக் காணலாம்.
சந்திரனுக்கு பனிரெண்டில் குருஇருந்தால், அது அனபா யோகமாகும். குருவுக்குப் பனிரெண்டில் சந்திரன் இருந்தால், அது சந்திரனுக்கு இரண்டில் குரு இருந்ததாக ஆகிவிடும். இது சுனபா யோகமாகும். அதனால் சந்திரனுக்குப் பனிரெண்டில் குருவோ, குருவுக்கு பனிரெண்டில் சந்திரனோ இருந்தால், அது சகடையில் வராது என்று மு. மாதேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்இக்கருத்தை வாசகர்கள் தங்கள் அனுபவத்தில் பார்த்துக் கொள்ளவேண்டியதுதான். மேலும்,
சந்திரனுக்கோ, குருவுக்கோ 6, 8 மிடம் என்பது ஒன்றுக்கொன்று சஷ்டாஷ்டமாகவே வருவதால், சகடயோகமாக ஆகிவிடும். சகடம் என்பது வாழ்க்கையில் எல்லாச் செயல்களிலும் தடையைப் உண்டாக்குவதுதான். ஜென்ன காலத்தில் சகடயோகம் பெற்றவர்கள், கோச்சார காலத்தில் குரு, சந்திரன் 6,8 ஆக வரும் போது, பிரச்சனைகளைச் சந்தித்துதான் ஆகவேண்டும். சந்திரனும், குருவும் சுப அம்சம்பெற்று இருந்தால் அது சுப சகடயோகம் என்றும் கல்யாண சகடயோகம் என்றும் அழைப்பர். சந்த்ரன், சுக்கிரன் கூடியிருக்க, இவர்களுக்கு குரு 6, 8 ஆக இருந்தால் அது கல்யாண சகடயோகம் என்று அழைப்பர். இவருக்கு இளவயதிலே திருமணம் நடக்கும். பொன்பொருள் சேரும்.

27. கேமத்துருவ யோகம்
சந்திரன் நிற்கும் இராசிக்கு முன்னும், பின்னும் உள்ளராசிகளில் எந்தகிரகமும் இல்லாமல் இருப்பதே கேமத்துருவ யோகமாகும். இந்த அமைப்புடைய ஜாதகர் அடிமைத் தொழிலே செய்வார். தன்னைப்பற்றியோ மற்றவர்களைப் பற்றியோ அதிக அக்கறை கொள்ளமாட்டார். தான் அணியும் ஆடை அணிகலன்களைப் பற்றி அதிகம் சிரத்தை எடுத்துக் கொள்ளமாட்டார். பாபச் செயல்களை செய்பவர். கொடூர எண்ணம் கொண்டவர். சற்று கடுமையானப் பலன்கஏ சொல்லப்பட்டுள்ளது.

28. சந்திர சண்டாள யோகம்.
சந்திரன், புதன், சுக்கிரன் ஆகிய மூன்று சுபக்கிரகங்களுடன் கேது இணைந்து இருந்தால், இதற்கு சந்திர சண்டாள யோகம் என்று பெயர்.
குரு எனும் சுபக்கிரகத்துடன், இராகு கூட குரு சண்டாள யோகம் என்று அழைக்கப்படும்.. இதைப்பற்றிய பதிவை பிறகு காணலாம்
மொத்த்த்தில் சுபக்கிரகங்களுடன் இராகு, கேது இணையக் கூடாது. ஏன் சாரம் வாங்கினாலும், ஜாதகர்க்கு பிரச்சனைகளைத் தான் தருகிறது.
சந்திர சண்டாள யோகத்தின் பலனாக, பெரிய குடும்பத்தில் பிறந்து இருந்தாலும், வறுமையில்தான் வாடுவார். பணம் ஈட்ட கேட்கெட்ட வழிகளிலும் அடக்க முற்படுவார். நிலையான புத்தியற்றவர். மனநிலை கெட்டவர். தெய்வநிந்தனை, மதவெறுப்பு கொண்டவர். வாழ்வில் முன்னேற முடியாது போன்ற கெட்டப்பலன்களே நடக்கும். எந்த கிரகத்தோடு கேது கூடியுள்ளதோ, அந்த கிரகத்தின் காரகங்களும் கெட்டுவிடும்.
சந்திரன், புதன், சுக்கிரன், கேது, மற்றும் இராகுவை குருப்பார்த்தால், கெடுபலன்கள் மாறிவிடும்.

29. மாதுர் நாச யோகம்.
கிரகங்களை வைத்து நம்முன்னோர்கள் உறவுமுறை சொல்லியுள்ளனர். அந்த வகையில் செவ்வாய் சகோதரக் காரகன். சந்திரன் தாய் காரகன். சூரியன் தந்தைக் காரகன். புதன் மாமன் காரகன். சுக்கிரன் மனைவிக்கு காரகன். குரு புத்திரக்காரகன். சனி தொழிலுக்கு காரகன். இப்போது ஒவ்வொரு உறவு காரகத்துக்கும், ஒரு வீட்டை ஒதுக்கியுள்ளனர். அந்தவகையில் சகோதரனுக்கு, 3,11 ம் வீடும், தாய்க்கு 4ம் வீடும், தந்தைக்கு 9ம், தாய்மாமனுக்கு 5ம், மனைவிக்கு 7ம், புத்திரத்துக்கு 5ம், தொழிலுக்கு 10 ம்வீடும் ஒதுக்கப்பட்டுள்ளது.அந்தந்த உறவுக்கு ஒதுக்கிய பாவகவீட்டில், ஒறவுமுறைக்கான காரக்க்கிரகங்கள் அமர்ந்தால், அந்த காரக உறவுகள் நாசமாகி விடும்.
சந்திரன் எனும் தாய்க் கிரகம், நான்காமிடம் எனும் தாய்வீட்டிலே அமர, ஜாதகரின் தாய் ஏதோவொரு வகையில் பாதிக்கப்பட்டு இருப்பார். மேலும், நான்கினில் இருக்கும் சந்திரனுடன் சனி,இராகு அல்லது கேது கூடியிருக்க, எட்டில் செவ்வாய் இருந்தால், ஜாதகரின் இளவயதில் தாய் மரணமடைவாள்.

30.இரவி யோகம்.   
இலக்கினத்துக்கு பத்தாமிடத்தில் சூரியன் இருந்து, பத்துக்குடையக் கிரகம் மூன்றில் சனியுடன் இணைந்திருந்தால், இரவியோகம் ஆகும்உபஜெயஸ்தானமான பத்தில் சூரியன் திக்பலம் பெறுவார். பத்தாமிடத்துக்கு ஆறாமிடமான மூன்றாமிடம் மற்றொரு உபஜெய ஸ்தானமாகும். இப்படி உபஜெயஸ்தானங்களான 3,6,10லே இந்த இரவி யோகம் அமைந்து விடுகிறது. இந்த யோகம் இருப்பின், பிறர்மேல் அதிகாரம் செலுத்தும் நிலை ஏற்படுவதுண்டு.

இகவாழ்வில் எல்லோரும் பயன்படுத்தக்கூடிய ஏதோவொன்றைக் கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாக இருப்பார்.செல்வாக்குடையவர். எளிய உணவை உட்கொள்பவராக இருப்பார்.                                                                                                                                                                                                                                                                                    முத்துப்பிள்ளை                                                                                                                           91501 06069            93456 56268    

No comments:

Post a Comment