Saturday 29 November 2014

“மேளம் கொட்டு….. தாலி கட்டு…”


 


 

 

 
நம்மில் பலருக்கு மிக இளம்வயதிலே திருமணம் முடிந்து விடுகிறது. இன்னும் சிலருக்கு வயது சென்றாலும் மணமுடிக்க முடியாமல் தடுமாறுகின்றனர். இதற்கு குடும்ப ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், உடல், மன ரீதியாகவும் பலகாரணங்கள் இருந்தாலும், நாம் சார்ந்திருக்கும் ஜோதிடரீதியாகவும் காரணங்களை ஆய்வு செய்வோம்.

இலக்கினம் என்பது, “நான்ஆகும். நான் என்கிற இரண்டாமிடத்தில், எனது, “குடும்பம்  உள்ளது. இதே போல் இலக்கினத்திற்கு மூன்றாமிடத்தில், எனது, “வீரியம்அதாவது அடக்கியாளும் திறன் உள்ளது. நான்காமிடத்தில் நான் அனுபவிக்கும்சுகம்உள்ளது. ஐந்தாமிடத்தில் எனது, “குழந்தையும், சொத்தும்உள்ளது. ஆறாமிடத்தில்என் எதிரியும், என் கடனும்உள்ளது. ஏழாமிடத்தில்என் மனைவிஉள்ளாள். இதேபோல் மற்ற வீடுகளுக்கும் பார்த்துக் கொள்ள வேண்டியது.  

 இரண்டாமிடமிடம் எனும் குடும்ப வீட்டிலும், ஏழாம் வீட்டிலும் பாவக்கிரகத் தொடர்பு இருக்க்க் கூடாது. இரண்டாமதிபதியும், ஏழாமதிபதியும் கேந்திர (1,4,7,10) கோண (1,5,9) வீடுகளில் இருந்து, 3,6,10,11 எனும் உபசய தானங்களில் பாவக்கிரகங்கள் நின்றால், ஜாதகனுக்கு இளம்வயதிலே திருமணம் முடியும்.

 குடும்பவீட்டிற்கும், ஏழாம் வீட்டிற்கும் சனி அதிபதியாகி, அவ்வீட்டிலே சனி நின்றால், வரக்கூடிய மனைவி வெகுதூரத்தில் இருந்து வருவாள். இதே போல், மேற்கூறிய வீடுகளில் செவ்வாயும், சுக்கிரனும் இருந்தால் வரக்கூடியவள் வெகுதூரத்தில் இருந்து வருவாள்.    

 சுக்கிரன் 8 ல் இருந்தாலும் வரக்கூடியவள் வெகுதூரத்தில் இருந்து வருவாள். ஆனால், ஜாதகனுக்கு  திருமண பருவகாலம் தள்ளிப் போய்விடும்.                        தொடரும்….

நம்முடைய ஜாதகத்தில் முழுமையான நல்லக்கிரகமான குரு கோச்சாரத்தில்  2,5,7,9,11 ல் இருந்தால் மட்டும் மணமுடிக்க முடியுமா? நம் இராசியின்படி  குருபலம் வந்து விட்டால், அதன் காரணமாக திருமணம் முடிந்து விடும் என்கிற நம்பிக்கை பரவலாக உள்ளது. இந்த எண்ணம் நம் மக்களின் எண்ணத்துக்குள் எப்படி வந்தது?

ஒட்டுமொத்தமாக புனிதமான ஜோதிடத்தின்பக்கம் கைகாட்டி விடமுடியாது. தன் சுயலாபத்திற்காக வானியலை பயன்படுத்தும்ஜோதிடர்கள்தான் காரணம்.

ஆணாக இருந்தால் மனைவியைக் குறிக்கும் சுக்கிரனும், மனைவியைக் குறிக்குமிடமான ஏழாமிடத்தின் அதிபதியும், ஏழாமிடத்தில் இருக்கும் கிரகங்களும், ஏழைப் பார்க்கும் கிரகங்களும், இவைகளோடு தொடர்புடைக் கிரகத்தின் தசாபுக்திகளும், கோச்சாரக்கிரகங்களும் பலம்பெற்று வலுவுடன் இருக்கும் காலத்தில் திருமணம் நிகழும்.

இலக்கினத்திற்கு ஏழுக்குடைய கிரகம், சனியுடன் கூடினாலோ, அல்லது களத்திரக் காரகனோ, குடும்பதிபதியோ சனியுடன் கூடினாலோ, ஜாதகர்க்கு கால தாமதத் திருமணம் தான் நிகழும். பாவருடன் கூடாத முழுமையான நல்லகிரகமான குரு காண, பலன்கள் மாறுபடும்.

இலக்கினம் என்பது, “நான்என்று முன் பதிவில் கண்டிருந்தோம். அதேபோல, ஏழாமிடத்தைமனைவிஇருக்குமிடமாக படித்துள்ளோம். இப்போது, நான் என்கிற இலக்கின அதிபதி, என் மனைவி என்கிற ஏழாமிடத்தில் இருந்தாலும், என் மனைவியைக் குறிக்கும் ஏழாமதிபதி, நான் என்கிற இலக்கினத்தில் இருந்தாலும், கணவன், மனைவி இருவரும் அதீத பிரியமுடன் மிக்க அன்புடன் இணைந்தே வாழ்வார்கள்.

 இலக்கினாதிபதியும், ஏழாமதிபதியும் சாரப்பரிவர்த்தனை செய்து கொண்டாலும் இதே நிலைதான். என் குடும்பவீட்டில் ஏழாமதிபதியான என் மனைவி, மக்களைக் குறிக்கும் ஐந்தாமதிபதி இருக்கலாம் அல்லவா? இதுபோன்ற சின்ன விடயங்களைப் பொருத்திப் பார்த்துக்கொண்டால் நாம் பலன் காண பயன்படும். நன்றி …… மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.       

No comments:

Post a Comment