Monday 3 November 2014

அரிட்டம் என்பது எதுவரை?


அரிட்டம் என்று செந்தமிழில் சொன்னாலும், அரிஷ்டம் என்று வடமொழியில் அழுத்திச் சொன்னால்தான் நம்மில் பலருக்கும், “சட்டென்றுபுரிபடும்.

முதலில் அரிட்டம் என்கிற சொல்லுக்கு   அமங்களம், கேடுகள், பிறவித் துன்பம், பங்கம், மரணக்குழி, வலி முதலிய அர்த்தம்தான் கிடைத்தன.

இந்த பிறவி அடையும் துன்பத்தை ஐந்துவகையாகப் பிரித்து வைத்துள்ளார்கள். அது என்னவெனில்,

1) ஒரு உயிர் பிறந்ததில் இருந்து 12 வயதுவரை அடையும் துன்பமே _பாலகத் துன்பமாகும்.

2) ஒரு உயிர் 13வயதில் இருந்து 20 வயதுவரை அடையும் துன்பமே _ குமார பருவத் துன்பாகும்.
3) ஒரு உயிர் 21 வயது முதல் 32 வயதுவரை அடையும் துன்பமே _ இளம்பருவத் துன்பமாகும்.

4) ஒரு உயிர் 33 வயது முதல் 70 வயதுவரை அடையும் துன்பமே _ முதிர்பருவத் துன்பமாகும்.

5) ஒரு உயிர் 71 வயது முதல் 120 வயதுவரை அடையும் துன்பமே _ நிறைபருவத் துன்பமாகும்.

நம் முன்னோர்கள் மனிதனின் ஆயுளை   மூன்றாகப் பிரித்து வகைப்படுத்தியுள்ளனர்.

1) பிறப்பு முதல் 32 வயது வரை குறைவாயுள்.

2) 33 வயது முதல் 60 வயது வரை நடுத்தரஆயுள்.

61 வயது முதல் 120 வயது வரை நிறை ஆயுள்.

ஒருவரின் ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஒன்று, எட்டு, பத்தாமதிபதிகள் அடைந்திருக்கும் பலத்தைப் பொறுத்தே ஒருவருக்கு ஆயுள்பலம் அமைகிறது.   

நாம் கர்மாக்கொள்கையை ஏற்றுக்கொள்வதால், நம் கர்மக்கடன் தீராமல், இறையை அடைய வழி கிடைக்காது. இதைத்தான் பட்டினத்தாரும் கூறுகிறார்.

அன்னை எத்தனை எத்தனை அன்னையோ?         
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ?
பின்னே எத்தனை எத்தனைப் பெண்டீரோ?
பிள்ளை எத்தனை எத்தனைப் பிள்ளையோ?
முன்னே எத்தனை எத்தனை ஜென்மமோ?
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்.
இன்னும் எத்தனை எத்தனை ஜென்மமோ?
என் செய்வேன் கச்சி ஏகம்ப நாதனே! என்கிறார்.

இந்த பிறவிக் கடலை நீந்திக்கடக்க, ஏழுபிறவிகளைக் கொண்டுள்ளோம். இதற்காக நமக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்நாள் கணக்கு 360 வருடங்கள் ஆகும். இந்த 360 வருடத்தை ஏழுபிறவிகளுக்குள் பகிர்ந்து கொண்டுதான், கர்மக்கடன்களை முடிக்கப்போகிறோம். ஒருவர் ஜனித்தவுடன் இறக்கலாம். சிலர்  பிறந்து சில வருடங்களில் இறக்கலாம். மற்றொருவர் 60 வயது வரையோ, இன்னொருவர் 80 வயதுவரை வாழலாம். இப்படி ஏழுபிறவிக்கும் 360 வருடங்களைப் பிரித்துத்தான் வாழப்போகிறோம். இந்த  ஆயுளில் நாமும் சுத்த ஆத்மாவாக வாழ்ந்து, நேர்வழியில் கர்மாவை வழிநடத்தி, தன்னையும், தான் சார்ந்தவர்களையும்,     அப்பாவி மக்களையும், அவர்களின்    ஜீவ ஒளியான ஆத்மாவையும் ஈடேற்றம் அடையச் செய்யவும் வழி காட்ட வேண்டும். அவ்வாறு செய்யாமல் ஏமாற்றி, பிற்போக்குத்தனமாக கர்மாவை  நடத்திச் சென்றால், நம் ஆன்மா அழிந்தொழிய நாமே காரணமாகிவிடுவோம். அதனால்,  நமக்குக் கிடைத்த இப்பிறவியில் நற்பணியாற்றுவோம்.  

பாலர்பாலகன்,
யெளவனம்குமார பருவம்,
கெளமாரப் பருவம்இளம்பருவம்,
விருத்தா பருவம்முதிர் பருவம்
பூரணபருவம்நிறை வயசு,

முழுமையான பருவம் ஆகும். இந்த  ஐந்து பருவங்களில் பாலக, குமார பருவங்களில் சரியான வளர்ப்பு முறையைப் பெறும், எந்த ஜீவனும்  தன் பிறவிக்கடனை எளிதில் கடந்து, ஆத்மாவை ஜீவ ஒளியில் கலக்கச் செய்யும்.
வாழ்க வளமுடன்

முத்துப்பிள்ளை

No comments:

Post a Comment