Tuesday 4 November 2014

உங்கள் பிரச்சனைகளை தீர்க்கும் நாள் எது?





நாம் ஒருநேரம் இருப்பதைப் போல, மறுநேரம் இருப்பதில்லை. நமக்குள் இருக்கும் ஏதோவொன்று, புரட்டிப்போடுகிறது. அடிக்கடி மனம் தடுமாறுவதால், நிலையற்ற சிந்தனையில் தவிக்கிறோம். பலநேரங்களில் பெரும்பெரும் பிரச்சனைகளை சந்தித்து, மிகச் சுலபமாக தப்பிவரும் நாம், சில நேரங்களில் சின்னசின்ன பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டு வெளியேவரத் தெரியாமல் திணறுவோம். அந்த நேரங்களில் நம்மைப் பார்த்து, நமக்கே கோபம் வரும்.

நம் உறவுக்குள் நடக்கும் பிரச்சனைகள். அதை எந்த நாளில் பேசினால் தீரும். கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு. முரண்டுபிடிக்கும் இருவரிடமும் எந்த நாளில் பேசினால், பிரிந்தவர்கள் கூடுவார்கள். அப்பன், மகன் சொத்து பிரச்சனை அதை எப்போது பேசினால் தீரும்.   அக்கம்பக்கச் சண்டை. அதை மையப் படுத்தி சமாதானப் பேச்சுவார்த்தை எப்போது செய்வது. இது போன்ற பிரச்சனைகளுக்கு, நம் பெரியோர்கள் வழிகாட்டியுள்ளனர்.
சுபக்கிரகங்களான சுக்கிரன், குருவின் இராசிகளான, தனுசு, மீனம், இரிடபம், துலாம். இதில் ஒன்று  இலக்கினமாக வரும், வியாழக் கிழமையோடு, ரோகிணி, பூசம், சதயம், உத்திரட்டாதி நட்சத்திரங்களோடு, மரண யோகமும் இல்லாத நாளாகி,  துதியை, பஞ்சமி, திரயோதசி என்று மூன்று திதிகளில் ஒன்றும் கூடியிருக்கும் நாளில் பிரச்சனைகளைப் பேசினீர்கள் என்றால், உங்கள் பக்கமே நியாயம் பிறக்கும். அதன்பின் அதே போன்ற பிரச்சனை உங்களில் வாழ்நாளில் எழாது.


சின்னசின்ன சண்டைதான் பெரும் வழக்குகளுக்குக் காரணமாக இருக்கிறது. எதையும் சிறிதாய் இருக்கும்போதே தீர்க்கமுயல்வோம். நன்றி.  

முத்துப்பிள்ளை

91501 06069

93436 56268    


No comments:

Post a Comment