Tuesday 4 November 2014

புவனம் வியக்கும் யவன காவியச் சூட்சுமங்கள்.





 எங்கள் ஊர் பழமையும், புதுமையும் கலந்த ஊர். இங்கே சங்ககாலம் தொட்டே விவசாயம் தான் முக்கியமானது. ஏன். சங்ககாலம் தொட்டு என்கிறேன் என்றால், எங்கள் ஊரிலுள்ள மூன்று குளங்களும் பாண்டிய மாமன்னர்களின் ஆட்சி காலத்தில் வெட்டப் பட்டது. அதற்கான ஆதாரங்கள் கல்வெட்டுக்களில் உள்ளன. அந்த மூன்று குளங்களின் தாய்க்குளமான, கருங்குளமெனும் முதல் குளத்தில் பாசனத்துக்கு நீர்த்தேக்கினால், பழுதடைந்து இரண்டு மதகுகளும் உடைந்து, ஊருக்குப் பேராபத்தை உருவாக்கிவிடும். அதனால், ஊரிலுள்ள விவசாய சங்கத்தார் மக்களின் நலன் காக்க, அப்போது  சங்கப் பொறுப்பில் இருந்த ஜாதகரிடம் கண்மாய் வேலையை ஒப்படைத்தனர். நாம் ஆய்வுக்கு எடுத்துள்ள ஜாதகத்துக்குச் சொந்தமான ஜாதகரின் பொறுப்பில் புறவாய்க்கால் வெட்டப்பட்டது. மேற்கு மலைத் தொடர்ச்சியின் பழனிமலைக் குன்றுகளில் பெய்யும்  மழை     காட்டாற்று வெள்ளமாய்  பழுதடைந்த குளத்தில் நிரப்பாமல், அந்தக் குளத்துக்குள்ளேயே   தனியாக மற்றொரு வாய்க்கால் வெட்டி, தாய்க்குளத்தைத் தாண்டி இரண்டாவது குளத்துக்குத் தண்ணீர் கொண்டு சென்று, அதன்பின் மூன்றாவது குளத்திலும் நிரப்பப் பட்டது. கடந்த எட்டு வருடமாக, இதேபோன்று தான் எங்கள் ஊரில், விவசாயப் பணிகள் நடந்து வருகின்றன.

அதேபோல, “புதைச்சுக் கண்டம்எனும் விளைச்சல் பகுதியில், கீழ் புதைச்சு, மேல் புதைச்சு எனும் இருபகுதிகள் உள்ளன. இதில் மேல் புதைச்சுப் பகுதி மேட்டாங் காடாகும். இங்கே ஏறத்தாழ தொன்னூறு காணி நிலம் உண்டு. இப்பகுதிக்குத் தண்ணீர் கொண்டு செல்ல, ஆதியிலிருந்து ஒரு பரம்படி அகலம் கொண்ட  பெரிய வாய்க்காலே இருந்தது. அதை ஒரு அடி அகலம் கொண்ட சாக்கடைப் போல, சிலபெரிய மனிதர்கள்குறுக்கிக் கட்டிவிட்டனர். காரணம், மேட்டிலே தண்ணீர் ஏறவில்லையென்றால், அது பள்ளத்தில் உள்ள வயற்காட்டுக்காரர்களுக்குத் தான் நல்லது. பருவ மழை குறைவாகப் பெய்யும் காலத்தில், இந்த மேட்டுப்பகுதி நிலங்களுக்கு, இந்த சாக்கடைப் போன்ற வாய்க்காலில் வரத்துக் குறைவான பாசன் நீரைக் கொண்டு செல்ல இயலாது. அதனால், இந்த சாக்கடைப் போன்ற வாய்க்காலை உடைத்து அகலமான வாய்க்காலாக மாற்ற, நாம் ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட ஜாதகத்துக்குச் சொந்தக்காரரான,  இந்த ஜாதகர் மிகத்தைரியமாக, சாதுர்யமாக நிலைமையைக் கையாண்டு, சாக்கடைப் போன்ற வாய்காலை அப்புறப் படுத்தி, ஆதிகாலத்தில் இருந்தது போன்ற வாய்க்காலை உருவாக்கி, ஏழை விவசாயிகளின் நன்மதிப்பைப் பெற்றார். இனி ஜோதிடப் பாடலைப் பார்ப்போம்.

மித்திரத் தலமும் அதற்கு இறையோன் இலக்கின பூபதி
மிக்க நற்சல வர்க்கமாய் மதி சுக்கிரன் பெலமாகினும்
சுத்தமா நதிமிக்க ஓடைகள் வெட்டு கூவல் குளக்கரை
தொட்டு மாநிலம் மெச்ச வாழ்குவன் அப் பகீரதன் ஒப்பவே.”  

ஜோதிட யவனகாவியம்.

இலக்கினாதிபதி, நான்காமதிபதி, நான்காமிடம், இம்மூன்றும் நீர்க் கிரகங்களின் தொடர்புப் பெற்றிருக்க, நீர்க்கிரகமான சந்திரனும், மழைக் கிரகமான சுக்கிரனும் பலம்பெற்று இருந்தால், ஜாதகன் ஆறு, குளம், கால்வாய், ஓடை, கிணறு வெட்டி வாழ்வார்.

ஜாதகர் பிறப்பு. 18.02.1966 அதிகாலை மணி 04.34 நிமிடம். வெள்ளிக்கிழமை.

ஜாதகரின் ஜென்ம லக்கினம் மகரம். ராசி மகரம். ஜென்ம நட்சத்திரம் உத்ராடம்.




குரு இரா

சூரி புத
செவ்சனி
                                                    
          இராசி

இல சந் சுக்



கேது



இலக்கினாதிபதி சனி, நான்காமிடம் மேடம். நான்காமதிபதி செவ்வாய். ஜலக்கிரகங்கள் என்பது சனி, சந்திரன், குரு ஆகும். இந்த ஜாதகத்தில் ஜலக்கிரகமான சனி, தன் மூன்றாம் பார்வையால், நான்காமிடத்தைப் பார்க்கிறார். மேலும், நான்காமதிபதியான செவ்வாயுடன் கூடி தொடர்பு பெறுகிறார். மற்றொரு ஜலக்கிரகமான குரு, செவ்வாய்க்கு சாரம் வழங்குகிறார். சந்திரனும், சுக்கிரனும் இலக்கினத்திலே பலம்பெற்றும் அமர்கின்றனர். ஜோதிட யவனகாவியத்தில் இடம்பெற்றப் பாடலைப் போன்றே, இந்த ஜாதகமும் மிகச் சரியாகப் பொருந்திவருகின்றன. பாடலில் குறிப்பிட்டுள்ளபடி பலன்களும், பிசகாமல் உள்ளன


எவ்வளவோ விடயங்களை ஜோதிடத்தின் மூலமாக கணித்து விடும் போது, இதுபோன்ற அறியமுடியாதப் பல நுட்பமான விடயங்களையும், நம் ஜோதிட பெருமகனார்கள் எப்படி அறிந்து வெளிப்படுத்தினர் என்பது விவரிக்க முடியாத வியப்புதான்
வாழ்க வாழ்க வாழ்கவே!
முத்துப்பிள்ளை
4/7/1 வடக்கு வெள்ளாளர் தெரு
ஆத்தூர். 624701
ஆத்தூர் வட்டம்
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி 91501 06069
        



No comments:

Post a Comment