Wednesday 12 November 2014

காற்றினிலே வரும்...?




நம் அருகேயுள்ள வாய்பேச இயலாத, மாற்றுத் திறனாளிகளைப் பற்றி, இக் கட்டுரையில் ஆய்வு செய்வோம்.

மனிதன், பேசத் தெரிந்த மிருகம். அவனின் அதீத சிந்திக்கும் திறன் தான், மற்ற உயிரினங்களில் இருந்து, அவனை வேறுபடுத்தி வைத்துள்ளது. அந்த சிந்தனைகளை, தன் மனித குலத்துக்குள்ளும் வெளிப்படுத்தியதால், ஏற்றத் தாழ்வுகள் உருவாகின.
அந்தகனை அதாவது குருடனைக் கண்களால் காண்பதும் தீது”. என்றும்,
நொண்டிக்கு நூறு குசும்புஎன்றும்,
வாய் மட்டும் நல்லா இருந்தாஎன்றும்,
இவன் காது கேக் காதுஎன்றும்,

உடல் உறுப்புக் குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகளை, தரம் தாழ்த்தி விமர்ச்சிக்கும், “நல்ல மனப்பக்குவத்தைஅடைந்த பலர் நம்மில் உள்ளனர். வாய் பேச இயலாதவர்களைப் பற்றி, ஜோதிடமும் பல விடயங்களைப் பதிவு செய்துள்ளது. அதைக் காணும் முன், முதலில் யார் வாய் பேச இயலாதவர்கள் என்பதைக் காண்போம்.

அன்னிய மொழிகளில் தன் உரிமைகளைக் கேட்பவன் ஊமை. தன் தாய்மொழியில் பேசத் தெரிந்தும், மற்ற மொழியில் பேசுபவன் ஊமை. பொதிகளை சுமப்பது போல, பிறமொழி சிந்தனைத் தாக்கத்தை சுமப்பன் ஊமை. தடையற்று தாய் மொழியில், பேசத் தெரியாதவன் ஊமை. தன் மொழிச்சொல்லோடு, பலமொழிச் சொற்களைக் கலந்து பேசுபவன் ஊமை.


பேசத் தெரிந்தும் பேசாதவன் ஊமை. தன் உரிமைகளைப் போராடிப் பெறாமல், விதிவந்தால் சாவோமென இருப்பவன் ஊமை. தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகக் குரல் கொடுக்காதவன் தான் ஊமை.

தனக்காகப் போராடுபவனுக்குத் தான் தலைவனாகும் தகுதியும் உள்ளது. அவனால் தான் பிறருக்காகவும் குரல் கொடுக்கமுடியும்.

பிறவியிலே பேச இயலாதவன், ஊனமுற்றவன் அல்ல”.

பிறவியிலே வாய்ப்பேச்சை இழந்தவர்களைப் பற்றி, ஜோதிடமும் பல விடயங்களைப் பதிவு செய்துள்ளது. அதைக் காண்போம்.   

வாய்பேச இயலாதவர்களுக்கான  விதிகள்.
1.   
இரண்டுக்குடையவனும், சுக்கிரனும், புதனும் கூடி ஆறாமிடத்தில், எட்டு, பனிரெண்டில் இருக்கவும்,  
2ஆறாமதிபனும், சுக்கிரனும், தூமன் என்கிற உபக்கிரகமும் கூடி, ஆறு, எட்டில் இருக்கவும்
.இரண்டு, எட்டுக்குடையக் கிரகம் பலம் குறைந்து இருக்கவும், இவர்களை குருப் பார்த்தாலும், இருக்க வாய் பேச இயலாதவன்.
4.   இரண்டோன், தூமன், எமகண்டன் ஆகிய மூவரும்  கூடி, இலக்கினத்திற்கு எட்டில் அமர, இவர்களை குருபாராதிருக்க, ஜாதகன் வாய் பேச இயலாதவன்.
5.   இலக்கினத்துக்கு இரண்டுக்குடையவன் புதனுடன் கூடி ஆறில் இருக்க  வாய் பேச இயலாதவன்.
6.   இலக்கினத்துக்குரியவனும், மூன்றாம் அதிபதியும், பன்னிரண்டு பாவங்களில் எங்கு கூடினாலும், வாய் பேச இயலாதவன்.
7.   இரண்டாம் வீட்டானோடு, புதன் இலக்கினத்தில் நின்றாலும், மூன்று, ஆறு இவ்விடங்களில் நின்றாலும், ஜாதகன் ஊமையன். இவர்களோடு வேறு எந்தக்கிரகங்கள் கூடினாலும், அந்த கிரக உறவுமுறைகளின்படி, வாய் பேச இயலாதவன்.
8.   இலக்கினாதிபதியுடன் கூடிய சுக்கிரன், ஆறு, எட்டு, பனிரெண்டில் இருக்க, இவர்களுடன் வாக்காதிபதி கூடினாலும், வாய் பேச இயலாதவன்.மற்றக் கிரகங்கள் கூட, கிரகக் காரக உறவுகளின்படி, அவர்களும் வாய் பேச இயலாதவன்.
9.   கடகம், விருச்சிகம், மீனம் இம்மூன்று இராசிகளில் பாவர் அங்கிசமாகி, இரிடப இராசியில் சந்திரன் அமர்ந்து இருந்தால், ஜாதக வாய் பேச இயலாதவன். இவர்களை நல்லக் கிரகம் பார்த்துவிட்டால், பிறந்த சில ஆண்டுகள் கழித்துப் பேசுவான்.  
10. கடகம், விருச்சிகம், மீனம் இம்மூன்று இராசிகளில் பாவர் அங்கிசமாகி, இரிடபத்தில் சந்திரன் இருந்து, எட்டாமதிபதி இரண்டில் இருந்தாலும், இரண்டு, மூன்று, ஒன்பது, பதினொன்று இவ்விடங்களில் பாவக்கிரகங்கள் இருக்க, அந்த வீட்டின் அதிபதி பலமற்று இருக்க, ஜாதகன் வாய் பேச இயலாதவன்.
11. இலக்கினத்தில் தேய்பிறை சந்திரன், இரண்டில் பாவக்கிரகங்களும், எட்டாமதிபனும் இருக்க, இலக்கினாதிபதி எட்டில் இருக்க, இலக்கினாதிபதி இருக்கும் இடத்துக்கு, ஐந்து, எட்டில் கேது இருக்க, ஜாதகன் வாய் பேச இயலாதவன்.
12. இலக்கினச் சந்தியில், அனேகப் பாவக் கிரகங்கள் இருந்தால், வாய் பேச இயலாதவன்.
13. இலக்கினத்தில் தேய்பிறை சந்திரன், இரண்டு, எட்டில் பாவக்கிரகங்களுடன், குருவும், இரண்டாமதிபதியும் இருக்க, இலக்கினாதிபதி இருக்குமிடத்திற்கு ஐந்து எட்டில் கேது இருக்க, இரண்டாமிடத்தில் எட்டாமிட அதிபதி இருக்க, ஜாதகன் வாய் பேச இயலாதவன்.
14. இரண்டுக்குடையவன், வாக்கின் காரகாதிபதி, ஆறு, எட்டு, பனிரெண்டில் இருக்க, ஜாதகன் வாய் பேச இயலாதவன். இவனுடன் மாதுர்காரகன் கூடினால், தாயும்    சூரியன் கூடினால், தந்தையும் வாய் பேச இயலாதவன்.
15. இலக்கினம் எதுவாக இருந்தாலும், குடும்ப உறவுகளைச் சொல்லும் பாவத்திற்கு இரண்டாமிட அதிபதியும், , குருவும் கூடி, குடும்ப உறவுகளைச் சொல்லும் பாவத்திற்கு, எட்டு, பனிரெண்டாம் இடத்தில் இருக்க, அந்த குடும்ப உறவு யாரைக் குறிக்கிறதோ, அவர் வாய் பேச இயலாதவன்.

(உம்) இலக்கினம் மகரம் என்று வைத்துக்கொள்வோம். மூன்றாமிடம் மீனம். அதிபதி குரு. இவர் இளைய சகோதர ஸ்தானாதிபதியாகவும் உள்ளார், இரண்டாமதிபதியுடன் கூடக் கூடியக் கிரகமாகவும் உள்ளார். இப்போது மீனத்திற்கு இரண்டாமிடதிபதி செவ்வாய், குருவுடன் கூடி, மீனத்திற்கு எட்டாமிடமான, துலாமில் இருந்தாலோ, அல்லது பனிரெண்டாமிடமான கும்பத்தில் இருந்தாலோ, ஜாதகரின் இளைய சகோதரர் இருந்தால், அவர் வாய் பேச இயலாதவனாக இருப்பார். இதேபோல் மற்றக் காரக உறவுகளுக்கும் பார்க்கவேண்டும். இப்போது தகப்பனுக்குப் பார்க்கவேண்டும் என்றால், இலக்கினத்திற்கு ஒன்பதாமிடத்துக்கு இரண்டாமதிபதியுடன் குரு கூடி, ஒன்பதாமிடத்துக்கு எட்டு, பனிரெண்டாமிடத்தினில் அமர, ஜாதகனின் தகப்பன் வாய் பேச இயலாதவன்.
16. இரண்டாமதிபதி குருவுடன் கூடி அழிவு ஸ்தானங்களில் இருந்தால், ஜாதகன் வாய் பேச இயலாதவன். அழிவு ஸ்தானம் என்பது, எட்டு, பனிரெண்டாமிடத்தைக் குறிக்கும்.

உதாரண ஜாதகம். (1)
இவர் 02.05.1995 காலை மணி 11.00 நிமிடம். பிறப்பு.

சுக்கிரன்

சூரியன்
கேது
சந்திரன்
புதன்
இலக்கினம்
சனி


          இராசி
செவ்வாய்


மாந்தி


குரு
இராகு


 .   
சந்திர திசை. வருடம். 06. மாதம் 02. நாள் 02
வாய்பேச இயலாதவர்.

3.     இரண்டு, எட்டுக்குடையக் கிரகம் பலம் குறைந்து இருக்கவும், இவர்களை குருப் பார்த்தாலும், இருக்க வாய் பேச இயலாதவன்
இலக்கினத்திற்கு இரண்டாமிடத்தின் அதிபதி சந்திரன், பனிரெண்டாமிடமான விரையஸ்தானத்தில் மறிய, இரண்டில் நீசக்கிரகம் செவ்வாய் இருக்க, இரண்டாமிடம் பலம் குறைந்து குறைந்துள்ளது. மேலும், எட்டுக்குடைய சனி, தனித்து விடப்பட்ட குருவின் சாரத்தைப் பெற்றிருக்க, நீசனின் பார்வையையும் பெறுகிறார். அதனால் ஜாதகன் வாய்பேச இயலாதானாகிறான்.
14.    இரண்டுக்குடையவன், வாக்கின் காரகாதிபதி, ஆறு, எட்டு, பனிரெண்டில் இருக்க, ஜாதகன் ஊமையாவான். இவனுடன் மாதுர்காரகன் கூடினால், தாயும் வாய் பேச இயலாதவன். சூரியன் கூடினால், தந்தையும்  வாய் பேச இயலாதவன்.
இரண்டுக்குடைய சந்திரன்,பனிரெண்டில் இருக்க, வாக்கின் காரகாதிபதியான குரு ஆறாமிடத்தில் இருந்து, பனிரெண்டில் இருக்கும் சந்திரனைப் பார்க்கத் தொடர்பு ஏற்படுகிறது. அதனாலும், ஜாதகன் வாய்பேச இயலாதவனாகிறான்.
16.    இரண்டாமதிபதி குருவுடன் கூடி அழிவு ஸ்தானங்களில் இருந்தால், ஜாதகன் வாய் பேச இயலாதவன். அழிவு ஸ்தானம் என்பது, ஆறு. எட்டு, பனிரெண்டாமிடத்தைக் குறிக்கும்
இலக்கினத்திற்கு ஆறில் குருவிருக்க, பனிரெண்டில் வாக்கின் அதிபதியான சந்திரன், பனிரெண்டில் இருக்கிறார். இருவருக்கும் பார்வையால் தொடர்பு ஏற்படுகிறது.
உதாரண ஜாதகம். (2)
இவர் 22. 06.1999 அதிகாலை மணி 4. 00 நிமிடம்
சந்திரன் வருடன். 02 மாதம் 07 நாள் 28
இந்த ஜாதகர் பிறவியிலே வாய்பேச இயலாதவர். மிகச் சுறுசுறுப்பானவர்.
7.     இரண்டாம் வீட்டானோடு, புதன் இலக்கினத்தில் நின்றாலும், மூன்று, ஆறு இவ்விடங்களில் நின்றாலும், ஜாதகன் வாய் பேச இயலாதவன். இவர்களோடு வேறு எந்தக்கிரகங்கள் கூடினாலும், அந்த கிரக உறவுமுறைகளின்படி, அவர்களும் வாய் பேச இயலாதவன்.


குரு
சனி
இலக்கினம்
சூரியன்



          இராசி
புதன் இராகு  
சுக்கிரன்
கேது
மாந்தி




செவ்வாய்
சந்திரன்

இரண்டாமதிபதியான புதன், மூன்றில் இராகுவுடன் கூடி அமர்ந்து பலமிழந்து இருக்கிறார்.
8.     இலக்கினாதிபதியுடன் கூடிய சுக்கிரன், ஆறு, எட்டு, பனிரெண்டில் இருக்க, இவர்களுடன் வாக்காதிபதி கூடினாலும், வாய் பேச இயலாதவன். மற்றக் கிரகங்கள் கூட, கிரகக் காரக உறவுகளின்படி, அவ வாய் பேச இயலாதவன்.
இலக்கினாதிபதியும், ஆறாமதிபதியும் சுக்கிரனாகவே இருந்து, வாக்கினதிபதியான புதனுடன் கூடி, மூன்றில் அமர்ந்து தொடர்பு கொள்கிறார்.
14.    இரண்டுக்குடையவன், வாக்கின் காரகாதிபதி, ஆறு, எட்டு, பனிரெண்டில் இருக்க, ஜாதகன் வாய் பேச இயலாதவன்.இவனுடன் மாதுர்காரகன் கூடினால், தாயும் ஊமையாவாள். சூரியன் கூடினால், தந்தையும்  வாய் பேச இயலாதவன்.
இந்த ஜாதகத்தில் இரண்டுக்குடையக் கிரகமான புதன், மூன்றில் ஆறுக்குடையவனுடன் தொடர்பு கொண்டு உள்ளான். வாக்கின் காரகக் கிரகமான குரு, எட்டாமதிபதியாகி, இலக்கினத்திற்குப் பனிரெண்டில் இருக்க, ஜாதகன் வாய்பேசா இயலாதவன்
16.    இரண்டாமதிபதி குருவுடன் கூடி அழிவு ஸ்தானங்களில் இருந்தால், ஜாதகன் வாய் பேச இயலாதவன். அழிவு ஸ்தானம் என்பது, ஆறு. எட்டு, பனிரெண்டாமிடத்தைக் குறிக்கும்.
இரண்டாம் அதிபதி புதன், பனிரெண்டில் இருக்கும் குருவின் சாரம் வாங்குகிறார். ஆறாம் அதிபதி சுக்கிரனுடன் இணைந்து இருக்கிறார். சனி எட்டாமதிபதியாகி குருவுடன் உள்ளார். அழிவுஸ்தானங்கள் அனைத்தும் புதனுடனும், குருவுடனும் தொடர்பு கொள்கின்றனர்
உதாரண ஜாதகம். (3)
12.10. 2012 காலை மணி 07.13 நிமிடம் திண்டுக்கல்லில் பிறப்பு.



குரு (வக்)
கேது




          இராசி



சந்திரன்
சுக்கிரன்


செவ்வாய்
இராகு
இலக்கி புதன்
சனி மாந்தி
சூரியன்

15. 9. 2014 வரை நடக்கும். அதன்பின் சுக்கிரதசா துவஙகும்..
7.     இரண்டாம் வீட்டானோடு, புதன் இலக்கினத்தில் நின்றாலும், மூன்று, ஆறு இவ்விடங்களில் நின்றாலும், ஜாதகன் பேச்சற்றவன்.   இவர்களோடு வேறு எந்தக்கிரகங்கள் கூடினாலும், அந்த கிரக உறவுமுறைகளின்படி, அவர்களும் வாய் பேச இயலாதவர்கள்  
இலக்கினத்திற்கு இரண்டாம் வீட்டதிபதி செவ்வாய், இரண்டிலே இராகுவுடன் கூடி இருக்கிறார். இரண்டில் இருக்கும் இராகுவின் சாரத்தை வாங்கும் புதன், செவ்வாயுடனும் தொடர்பு கொள்ளமுடியும். அந்தவகையில் இலக்கினத்திலே இருப்பதால், குரலுக்காக வாய் திறக்கவில்லை.
14.   இரண்டுக்குடையவன், வாக்கின் காரகாதிபதி, ஆறு, எட்டு, பனிரெண்டில் இருக்க, ஜாதகன் பேச்சற்றவர்கள்.  இவனுடன் மாதுர்காரகன் கூடினால், தாயும் பேச்ச்ற்றவர்கள்.  சூரியன் கூடினால், தந்தையும் பேச்சற்றவர்கள்.
பனிரெண்டுக்குடையப் புதன் இரண்டில் இருக்கும் இராகுவின் சாரத்தைப் பெறுவதின் மூலம், இரண்டுக்குடைய செவ்வாய், பன்னிரண்டிற்குடைய புதனின் தொடர்பைப் பெறுகிறார். மேலும், வாக்கின் காரகாதிபதியான குரு வக்கிரம் பெற்று, எட்டாமிடத்தில் இருக்கிறார். அதனாலும், ஜாதகருக்குப் பேச முடியவில்லை.   
17.    இரண்டாமதிபதி குருவுடன் கூடி அழிவு ஸ்தானங்களில் இருந்தால், ஜாதகன்  பேச்சற்றவர்கள். அழிவு ஸ்தானம் என்பது, ஆறு. எட்டு, பனிரெண்டாமிடத்தைக் குறிக்கும்.
அழிவு ஸ்தானமெனக் குறிப்பிடும் எட்டாமிடத்தில் இருக்கும் குரு, இரண்டாமிடத்தில் இருக்கும், செவ்வாயைக் காண்கிறார்.
இந்த ஜாதகத்தில் உள்ள ஒரே ஆறுதல் என்னவென்றால், வாக்கின் காரகன் குரு வக்கிரம் பெறுவது தான். அவனே கேதுவுடன் கூடி, பலமிழந்து இருப்பதால், நாள்கடந்து பேசும் யோகத்தைத் தரும். அப்படிப் பேசும் போது, ஜாதகர், மிக அளந்து அளவாகத்தான் பேசுவார். அந்த பேச்சும் மிகச்சிறந்த ஞானச் செறிவுடையப் பேச்சாகத்தான் இருக்கும்.
நாம் இதுவரை பேச்சறியாதவர்களின் ஜாதகங்கள் மூலம், சில விடயங்களைத் தெரிந்துக் கொண்டோம். வள்ளுவன் சொன்னது போல், “ நன்மைகள் ஏற்படும் போது, அகமகிழும் நாம், நமக்குத் துன்பம் ஏற்படும் போது கலங்கி நின்று விடக்கூடாதுஎன்கிறார். இதுஊழின் பெருவலிதான். ஏற்றுக் கொள்வோம்.
வாழ்க வளமுடன்
     முத்துப்பிள்ளை
       4/7/1 வடக்கு வெள்ளாளர் தெஉ
       ஆத்தூர். 624701
       ஆத்தூர் வட்டம்
திண்டுக்கல் மாவட்டம்.






No comments:

Post a Comment