Saturday 15 November 2014

யோகினியும், வாரசூலமும் மறைந்திருக்கும் சூட்சுமங்களும்….


         

சூலமும், யோகினியும் எந்த திசையில் உள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ளதோ, அந்த திசைகள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளன. அந்த திசை நோக்கி யாரும் பயணம் செல்லக்கூடாது. கர்ப்பிணிப்பெண்கள் கால்நீட்டி அமரவோ, செல்வதையோ தவிர்க்க வேண்டும். விவசாயப் பணிகளில் முதல் வேலையை அந்தத் திசை நோக்கித் துவக்கக் கூடாது. ஏருழுவதிலிருந்து, நடவு நட்டதிலிருந்து, கதிரறுப்பது வரை எந்த செயலும், சூலமும், யோகினியும், இல்லாத திசைபார்த்து துவங்குவது நல்லது. நிலத்தை விற்கும்போதோ, வாங்கும்போதோ சூலமும் யோகினியும் உள்ளதாகக் குறிப்பிடப் பட்டுள்ள திசைநோக்கி நின்று, பணத்தையோ, பதிந்த பத்திரத்தையோ வாங்கமாட்டார்கள். புது வீடுகட்டத் துவங்குபவர்கள் தங்கள் மனையுள்ள திசையில், அன்று சூலம் இல்லாத நாளில்தான் மனை கோலுவார்கள். புது வீடு கட்டுபவர்கள், வாசலின் நுழைவு இராசநிலையை சூலம் உள்ள திசையன்று, அந்த திசை நோக்கி வைக்கமாட்டார்கள். புது நகை வாங்குபவர்கள், சூலம் உள்ள திசை நோக்கி நின்று வாங்க மாட்டார்கள். புதுத்தாலி செய்பவர்கள் சூலம் உள்ள திசைப்பக்கம், பரிகாரம் செய்த பின்புகூட செல்லமாட்டார்கள்.

வானமண்டலத்தில் உலாவும் கோள்களில், சந்திரனுக்கும் , சூரியனுக்குமிடையே          உள்ளதொலைவின் தூரத்திற்கு திதி என்று அழைக்கப்படுகிறது. நம் ஜோதிடக் கணிதத்தின் படி சந்திரனின் பாகைக் கலைகளில் இருந்தது, சூரியனின் பாகைக் கலைகளைக் கழிக்க வரும், பாகைக் கலைகளே, (தொலைவே) இன்ன திதியென்று அழைக்கப்படும்.

சூரியன், சந்திரன் கூடியிருந்து பிரியும், அதாவது விலகும், முதல் 12 பாகை, வளர்பிறைபிரதமையெனவும். அதன்பின் வரும் 12 பாகை, அதாவது 24 பாகை வளர்பிறை துதியை திதியெனவும், இப்படியாக 12 பாகைகளை கூட்டவரும் ஒவ்வொரு தொலைவுக்கும், ஒவ்வொரு பெயரிடப்பட்டுள்ளது. 168 பாகையிலிருந்து, 180 வது பாகையே பூரணையெனவும், பூரணையிலிருந்து, சந்திரன், சூரியனை நோக்கி நகரும், அதாவது நெருங்கி வரும், முதல் 12 பாகைக்கு தேய்பிறை பிரதமையெனவும், இரண்டாம் 12 பாகைக்கு தேய்பிறை துதியைத் திதினவும், இப்படியாக 12 பாகைகளைக் கூட்டவரும்,    ஒவ்வொருத் தொலைவுக்கும்,   ஒவ்வொருப் பெயரிடப்பட்டுள்ளது. 348 பாகைகளிலிருந்து, 360 பாகைகள் வரையுள்ள தொலைவுக்கு அமாவாசை எனப்பெயரிடப்பட்டுள்ளது.

இப்படியாக  விலகும் முதல் 15 திதிகள் வளர்பிறை எனவும், நெருங்கும் முதல் 15 திதிகள் தேய்பிறை எனவும் அழைக்கப்படுகிறது. இருவேறு பிறைகாலங்களில்  உள்ள 15 தினங்களுக்கும், ஒரேவிதமான பெயர்தான் உள்ளது என்றாலும், வளர்பிறை, தேய்பிறையென இருவேறான காலமாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

சூரிய, சந்திர இயக்கம்தான், திதிகளின் அடிப்படை என்றாலும், இரண்டு                       காலங்களும்  வெவ்வேறானவை என்பது புலனாகும்.

வளர்பிறை, தேய்பிறையெனப் பிரிக்காமல் மொத்தத் திதிகளான 15 க்கும், நீசமான திசைகள் இருப்பதாக, நம் நூல்கள் சொல்லியுள்ளன. ஒன்றுக்கும் மேற்பட்ட திதிகளுக்கு, ஒன்றுக்கும் மேற்பட்ட திசைகளும்  நீசமடைந்துள்ளன . இதற்கு சூலம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அதே போல், ஏழுகிழமைகளுக்கும்  சூலம் (நீசமான) திசையிருப்பதாகவும், இருபத்தியேழு நட்சத்திரங்களில் குறிப்பிட்ட ஏழு நட்சத்திரங்களுக்கும் நீச திசைகள் இருப்பதாகவும், இந்த திசைகள் நோக்கி நாம் பயணப்பட்டால், நம் பயணநோக்கம் நிறைவேறாது என, நம் பெரியவர்கள் கூறியுள்ளனர். மேலும்,

நம் திருக்கோவில்களில் நவக்கிரக மேடைகளில் பார்த்தால், ஒவ்வொரு கிரகமும், ஒவ்வொரு திசை நோக்கி திரும்பி உள்ளதைக் காணலாம். அதேபோல பூமிக்கும் ஒருதிசையுண்டு.



கோள்கள்
திசைகள்
சூரியன் சந்திரன்
செவ்வாய்
புதன்
குரு
சுக்கிரன்
னி
இராகு
கேது

கிழக்கு
தென்கிழக்கு
தெற்கு
வடகிழக்கு
வடக்கு
 கிழக்கு
மேற்கு தென்மேற்கு            
வடமேற்கு


அதுபோல, நாம் வாழும் பூமி 23 ½ டிகிரி சாய்வு கோணத்தில் தென்கிழக்கு நோக்கி இருக்கும். காரணம், சந்திரனும், பூமியும் ஒரேகால அளவைக் கொண்டே, சூரியனை சுற்றி வருகின்றன. அதனால், பூமியில் பருவமாற்றங்கள் ஏற்பட்டு, குளிர், வசந்தம், வெப்பம், மழை என் பல பரிணாமங்களில் பூத்துக் குலுங்குகிறது.

இந்த நவக்கிரகங்களில் இராகு, கேது தவிர்த்து மற்ற ஏழுகிரகங்களும், ஏழு நாட்களை ஆள்கின்றன. சூரியனானவன் ஞாயிறு எனும் தன்பெயரில் தன்முதல் ஓரையை, அந்த நாளுக்கு வழங்கி, தனக்கு அடுத்தடுத்து நின்ற கிரகங்களின் வரிசைப்படி, அந்த நாளை ஆட்சி செய்ய அனுமதிக்கிறான். ஆனால், அந்த நாளின் அதிபதி சூரியன் மட்டுமே. அதேபோல், சந்திரன், திங்கள் எனும் தன் பெயரிலே அந்த நாளை ஆட்சி செய்கிறான்.அதெபோல, செவ்வாயும், மீதமுள்ள புதனும், குருவும், சுக்கிரனும் மற்றும் சனியும் தங்கள் தினத்தை ஆட்சி செய்கின்றன.

          மீனம்
வடக்கு
மேடம்
கிழக்கு
இரிடபம்
தெற்கு
மிதுனம் 
மேற்கு
கும்பம்   
மேற்கு

                             



கடகம்
வடக்கு
மகரம்
தெற்கு

தனுசு
கிழக்கு
விருச்சிகம்
 வடக்கு
துலாம்                          
மேற்கு
கன்னி
தெற்கு


எல்லோருக்குமே தெரியும் சூரியன் கிழக்குதிசையை நோக்கி உள்ளார் என்பது. அதாவது, மேடராசியில் உச்சம் அடைகிறார். அது கிழக்கு ராசியைச் சேர்ந்தது. ஆனால், மேற்கு ராசியான துலாமில் நீச்சம் அடைகிறார்.

இங்கே நாம் கொடுத்துள்ள பட்டியலின் படி, எல்லாக் கிரகங்களும் சரியாக, உச்சமடைந்து, நீசமடைகின்றன. ஆனால், சந்திரன், சுக்கிரனும்தான் உச்சமடைவதிலும், நீசமடைவதிலும், சிறு வேறுபாடுகள் உள்ளன. அதற்கான காரணத்தை அறிய முயல்வோம். வானமண்டலம் 360 பாகைகளாகப் பரந்து விரிந்துள்ளது என்பதும்,ஒரு ராசிக்கு 30 பாகையாகப் பிரிந்துள்ளது என்பதும்,, ஒரு கணக்கீட்டுக்குத் தானேத் தவிர, துல்லியமானதல்ல.


கிரகம்
திசைகள்
உச்ச
ராசி
நீச்ச
ராசி
திசைகள்
சூரிய
சந்திர
செவ்
புதன்      
குரு         
சுக்கி  
சனி  
கிழக்கு
தெற்கு
தெற்கு
தெற்கு
வடக்கு
வடக்கு
மேற்கு
மேட
இரிட
மகர
     கன்
     கடக
மீனம்
துலா
துலாம்
விருச்சி
கடகம்
மீனம்
மகரம்
கன்னி
மேடம்
மேற்கு
வடக்கு
வடக்கு
வடக்கு
தெற்கு
தெற்கு
கிழக்கு


ஒரு கிரகம் எந்த திசையில் உள்ளதோ, அந்த திசைக்கு நேரெதிர் திசை நீசதிசையாகும். (உம்) சூரியன் கிழக்கே உச்சம், மேற்கே நீசம். அதேபோல், சனி மேற்கே உச்சம், கிழக்கே நீசம். இதேபோல், எல்லாக் கிரகங்களுக்கும் மிகச்சரியாக நீசமடையும்.ஆனால், சந்திரனுக்கும், சுக்கிரனுக்கும் சிறு மாறுபாடோடு, மேலே குறிப்பிட்டபடி உச்ச, நீச்சமடையும். சந்திரன் கிழக்கு சார்ந்த தெற்கில் உச்சம் என்றால், அதற்கு நேரெதிர் திசையான கிழக்கு சார்ந்த வடக்கில் நீச்சமடைகிறார்.   அதேபோல, சுக்கிரன் மேற்கு சார்ந்த வடக்கில் உச்சமடைகிறார். மேற்கு சார்ந்த தெற்கில் நீச்சமடைகிறார்.

ஒரு கிரகம் நீசமடைவதற்கும், சூலத்திற்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? என்றால், உண்டு என்றுதான் சொல்லவேண்டும். ஏனெனில், சூலம்தான் நீசம் என்று அழைக்கப் படுகிறது.

ஞாயிற்றுக் கிழமையின் அதிபதியான சூரியன் உச்சத்திலிருக்கும் திசைக்கு நேரெதிர் திசையான மேற்கில், அதாவது துலாமில் (நீச்சவீடு) சூலம் இருப்பதாக அர்த்தம். இதேபோல, சந்திரன் ஆட்சி செய்யும் திங்கட்கிழமைக்கு, கிழக்கு சார்ந்த வடக்கில் சூலம் இருப்பதாக அர்த்தம். செவ்வாய் கிழமைக்கு வடக்கில் சூலமிருக்கும். புதன் கிழமைக்கு வடக்கே சூலம். வியாழக்கிழமைக்கு தெற்கே சூலம். வெள்ளிக்கிழமைக்கு வடக்கே சூலம். சனிக்கிழமைக்கு கிழக்கே சூலம்.

ehl;bdpy; nts;spNahL>  QhapWk;
Nkw;fjhFk;> 
jhl;bfj; jpq;fNshL  rdpANk 
fpof;fjhFk;;.
Nghl;bahf; nrt;thNahL GjDNk 
tlf;fjhFk;.
fhl;bLk;  tpahoDf;Ff; fUjpa
njw;Fj; jhNd. !

என்று பழம் தமிழ் பாடல் ஒன்று உள்ளது. மேலும் சூலம் எவ்வளவு நேரம், அன்றையப் பொழுதில் நீடிக்கும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.


jpq;fSk; rdpAk;  fPo;ghw;
jpirapNyhh;  vl;ljhFk;.
nghq;Fnghd;  ,Ughd;; njw;F
Gfh; fjph;  Nkw;F  <uhwhk;
jq;F  Nra;  tlf;F <nul;L
rhh;GjdJ NtahFk;.
rq;fud;  ifapw; #yk;
jhq;fpLk;  fhykhNk !

அதாவது சனி, திங்கள் 8 நாழிகைமணியில் 03. 36 நிமிடம்.
குரு (வியாழன்) 20 நாழிகை             மணியில் 08. 00 நிமிடம்.
சூரியன் (ஞாயிறு) 12 நாழிகை         மணியில் 04. 48 நிமிடம்.
செவ்வாய், புதன் 16 நழிகை             மணியில் 06. 24 நிமிடம்.

மேலே குறிப்பிடப் பட்டுள்ள அன்றைய தினத்தில் உதயத்திலிருந்து ஒவ்வொரு கிழமைக்கும் சொல்லப்பட்டுள்ள நேரத்திற்கு சூலப்பரிகாரம் செய்துவிட்டு பயணத்தையோ, அலுவலையோ தொடங்கலாம். இங்கு குறிப்பிட்டுள்ள நேரத்திற்கு முன்செய்யப்படும் பரிகாரம் சூலப்பரிகாரம் ஆகாது.      

#yj; jpirajdpy; nrhw;gazk; Nghf ntdpy;
rPyj;Jld; cz;L nry; tlf;F  ghyhk;.
japu; fpof;Fj; njw;F. japykhk; Nkw;F
nrapu;  jPh;e;j  nty;ynkdr; nrg;G.
என்று குறிப்பிடப் பட்டுள்ளது

   கிழமை
 பரிகாரப் பொருட்கள்
    ஞாயிறு
    திங்கள்
    செவ்வாய்
    புதன்
    குரு
    வெள்ளி
    சனி
  வெல்லம்
 தயிர்
 பால்
 பால்
 தைலம்
 வெல்லம்
  தயிர்



இந்த பரிகாரங்களைச் செய்து விட்டு, அதன்பின் தன்பயணத்தையோ, அலுவலையோ தொடரவேண்டும். நாம் இதுவரை கண்டது வாரசூலமாகும். இனி திதிகளுக்கான சூலத்தைக் காண்போம். முதலில் பாடலைக் காண்போம்.

gpujikAk; etkpAk;  fpof;Nf #yk; 
NguhQ;rg;jkp > Jjpia njd;fpof;F 
jphpjpia VfhjrpAk; njw;fjhFk;.
jpfo; rJu;j;jp  JthjrpAk; njd;Nkw;fhFk;.
tuKw;w  r\;b mkhtir  Nkw;F
kfpo; jrkp  G+uizAk; tlNkw;F MFk; .  ;
gukhd rJh;j;jjp  ml;lkp tlf;F 
gQ;rkp  jpuNahjrpAk;  tlfpof;Nf.


           திதி
   சூல திசை
          பிரதமை
          துதியை
         திரிதியை
          சதுர்த்தி
          பஞ்சமி
          சஷ்டி
          சப்தமி
          அட்டமி
          நவமி
          தசமி
          ஏகாதசி
          துவாதசி
       திரயோதசி
         சதுர்த்தசி
         பூரணை
     அமாவாசை
   கிழக்கு
     தென்கிழக்கு
     தெற்கு
  தென்மேற்கு
     வடகிழக்கு
     மேற்கு
     தென்கிழக்கு
      வடக்கு
      கிழக்கு
      வடமேற்கு
      தெற்கு
     தென்மேற்கு
     வடகிழக்கு
     வடக்கு
     வடமேற்கு
     மேற்கு



இனி நட்சத்திரத்துக்கான சூலத்தைக் காண்பொம்.

ey;yNjhu;  mtpl;lk;  Nfl;il
ew;fpof;fhFk; thrp
Gy;ypL Nthze; njw;Fg;
G+rk; NuhfpzpAk; Nkw;F
ty;y cj;jpuKk; m];jk;
tlf;fpdpy;  #ynkz;gh;
nrhy;Yk; ehspy;iyahfpj;
#ykpy;iy  jhNd>

   நட்சத்திரம்
     சூலம்
   அவிட்டம், கேட்டை
     கிழக்கு
    திருவோணம்
      தெற்கு
     பூசம், ரோகிணி
      மேற்கு
     உத்திரம், அஸ்தம்
      வடக்கு

இதுவரை கிழமைகளுக்கும், திதிகளுக்கும், ஏழு நட்சத்திரங் களுக்குமான சூலப் பாடல்களைக் கண்டோம். இன்னன்ன திசைகளில் சூலம் இருப்பதாக சொல்வது, நம்பயணம் சிரமமில்லாமல் செல்வதற்கும், நம் அலுவல்கள் தடையில்லாமல் நடப்பதற்கு மட்டுமே என்றுதான் எண்ணியுள்ளோம். ஆனால், இதை மட்டும் குறிப்பது சூலத்தின் நோக்கமல்ல. நம் பெரியவர்கள் அதைமட்டும் குறிப்பவர்கள் அல்லநமக்கு இதுவரை சொல்லப் பட்டுள்ளது மேலோட்டமான சிந்தனையாகும். எல்லாப் பூடகங்களையும் விலக்கி, உள்ளார்ந்து பார்த்தால், உண்மைகள் புலப்படும்.

நீங்கள் என்ன கிழமையில் பிறந்துள்ளீர்களோ, அந்த கிழமைக்குண்டான திசை, சூலத் திசையாகும்.

நீங்கள் என்ன திதியில் பிறந்துள்ளீர்களோ, அந்த திதிக்கு உண்டான திசை, சூலத்திசையாகும்.

இந்த ஏழு நட்சத்திரங்களில், ஏதோவொன்றில், உங்கள் பிறப்பு நட்சத்திரம் வந்தால், அந்த திசை சூலத்திசையாகும்.

உங்களின் சந்திராஷ்டமத் தினத்தன்று, இந்த, கிழமைகளோ, திதிகளோ, நட்சத்திரங்களோ வந்தால், அன்றைய தினத்திற்கு உண்டான திசைகளில் , எந்த செயலும் துவங்காமல் இருப்பது நல்லது.

நாம் வாழும் பூமி 23 1/2 டிகிரி சாய்வுகோணத்தில்,(வடதென் துருவ) தென்கிழக்குத் திக்கில் உள்ளது. இந்த திசைக்கு நேரெதிர் திசையான கிழக்கு சார்ந்த வடக்கில் பூமியின் நீசப்பகுதி உள்ளது. அதுவே பூமியின் சூலத்திசையாகும். எந்த நாட்டிலும் இல்லாத வழக்கமாக, நம் நாட்டில் மட்டும், நம் பெரியவர்கள், நம்மை வடக்கே தலை தலைவைத்துப் படுக்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். பூமியின் நீசமான சூலதிசையில் நாம் படுத்திருந்தால், எண்சாண் உடம்பின் பிரதானமான தலைப்பகுதி சூலதிசை நோக்கி இருக்கும். மனித இயக்கத்தின் ஆணிவேரான தலைக்குள் இருக்கும் மூளையும், மூளையோடு இணைக்கப்பட்டுள்ள தண்டுவட நரம்புகளும், பூமியின் சுழற்சிக்கு எதிராக செயல்படும் போது, காந்தபுலன் தாக்குதலால் பலமிழக்க, இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இந்த சிறு குழப்பத்தால் தான், நம்மீது யாரோ, அல்லது தீயசக்திகளோ அழுத்துவது போன்ற, மாயத்தோற்றம் உண்டாகிறது. அந்த நேரத்தில், நம் கண்கள் திறந்திருக்கும், நம்மை அழுத்தும் சக்தியை தள்ளிவிட முயற்சிப்பது போன்ற, ஓரு பிரமை ஏற்படும். இந்த செயலை செய்வது பேயோ, பிசாசோ அல்ல. பூமி சுழற்சியினால் தோன்றும் காந்தப்புலத் தாக்குதல் என்பதை அறியுங்கள்.

நம் பூமி வடதென்துருவ அச்சில் சுழல்கிறது. இது நாம் அறிந்த செய்தியாகும். பூமியின் அச்சின் ஒருமுனை  கிழக்கு சார்ந்த தெற்கில் இருந்தால், மறு அச்சுகிழக்கு சார்ந்த வடக்கில் தானே இருக்கும். இந்த திக்கு தனுசு ராசியில் தான் துவங்கும். இந்த தனுசு ராசியில் துவங்கும்  முதல் நட்சத்திரமான மூலத்திற்கு என்ன அர்த்தம் என்று பார்த்தால், ஆதி, தலைமை, ஆதாரம் என்றும் அர்த்தமாகிறது. ஆதி என்பது இரண்டாயிரம் வருடங்களுக்கு முன் நம் பாட்டன் வழிபட்ட ஆதிபகவன் அல்லவா? அன்றும் இன்றும் நாம் வணங்கும் ஆதிபகவன், ஆதிசிவமல்லவா? அவனே ஆதிமூலமல்லவா? அவனின் ஆயுதம் ஆதி சூலமல்லவா? அப்படியானால் பூமியின் சுழற்சியின் முதல் புள்ளி, தனுசுவில் மூலத்தில் தான் துவங்குகிறது என்பது உண்மைதானே. அதனால்தான், மூல நட்சத்திரம் பிரகாசமற்று, இருண்டதாகவே இருக்கிறது.

நம் பெரியவர்கள் இறப்பைக் குறிக்க,”வடக்கே போக இன்னும் காலம் வரமாட்டேன்கிறதேஎன்று குறிப்பார்கள். மேலும், ஆதிசிவனின் இருப்பிடமான  கையிலாய மலையும் வடக்கில் இருப்பதைக் காணலாம். நாம் குடியிருக்கும் வீட்டில் இறைவனை வழிபடும் இடமாக, புனித இடமாக, பூஜையறையாகவும் வடகிழக்கு திசையையே பயன்படுத்துகிறோம். நம் பரதக் கண்டத்து முனிவர்களும், சித்தர்களும், ஞானிகளும் வடக்கு நோக்கியே தவமிருப்பதைக் காணலாம். மீண்டும் பிறவா நிலையை அடைய எண்ணும் எவரும் வடக்கு நோக்கியே தவமிருப்பதைக் காணலாம்.

உச்சம் என்பது குறிப்பிட்ட கிரகத்துக்கும் பூமிக்கும் உள்ள இடைப்பட்ட தூரம் மிகக் குறைவாக இருப்பதே. அப்போது, அந்த கிரகம் பூமியின் மேல் தன்கதிர்வீச்சுக்களை அதிகம் பாய்ச்சும். ஆனால், நீச்சம் என்பது, அந்த கிரகத்துக்கும், பூமிக்கும் உள்ள இடைப்பட்டத் தூரம் மிகவும் அதிகமாக இருக்கும். அப்போது, அந்த கிரகத்தின் கதிர் வீச்சுகள் பூமியில் அதிகம் விழாது. ஒவ்வொரு கிரகமும் பூமியை நெருங்கினால், ஆது உச்சம் என்றும், பூமியை விட்டு விலகினால் நீச்சம் என்றும் அர்த்தம்.

இதுவரை சூலத்தைப் பற்றி தெளிவக அறிந்து கொண்டோம். இனி எந்த கிழமைக்கு, எந்த திசையில் சூலம் உள்ளது என்பதை நாம் அறிந்தது மட்டுமல்லாது, பிறர்க்கும் தெளிவாக எடுத்துச் சொல்வோம். மேலும்,

உங்களின் பிறந்த கிழமையோடும், திதியோடும், ஜென்ம நட்சத்திரத்தோடும் தொடர்புடைய சூலத்திசையை அறிந்து, அதன்படி அந்த திசையை தங்களின் சகல தேவைகளுக்கும் தவிர்த்துவிட்டு, எந்த செயலையும் செய்து வரவும். தவிர்க்க முடியவில்லையெனில், ஒவ்வொரு தினத்திற்கும் கொடுத்துள்ள நேரத்தைப் போக்கிவிட்டு, பரிகாரமாத் தந்துள்ள பால், தயிரை அருந்தி விட்டோ, வெல்லத்டைட் தின்று விட்டோ,  உடலில் தைலத்தைப் பூசிக்கொண்டோ சூலதிசை நோக்கி செல்லவும்.

நம் முன்னோர்களின் வார்த்தைகளில் உண்மை மட்டுமே இருக்கும் என்று எண்ணுவோம்.

ஆய்வு.         முத்துப்பிள்ளை
 4/7/1.வடக்குவெள்ளாளர் தெரு .                                      .                                      ஆத்தூர்.624701.அஞ்சல்
ஆத்தூர் வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.

கைபேசி. 91501 06069  

1 comment:

  1. அருமையான விளக்கம்.
    ஆனால் கட்டங்களில் உள்ள நீல கலர் எழுத்துக்கள் தெளிவாக இல்லை.

    ReplyDelete