Saturday 29 November 2014

“மேளம் கொட்டு….. தாலி கட்டு…” பாகம்.5.


 
கணவன், மனைவி இருவருக்கும் காம உணர்வுகள் பொதுவானவை. தனக்குக் கிடைக்கும் இன்பசுகத்தைப்போல, தன் இணையான பெண்ணுக்கும் கிடைக்க வேண்டுமென நினைக்கும் மனப்பக்குவத்திற்கு ஆண் வந்து விட்டான். முன்பெல்லாம் தன் உச்சக்கட்ட சுகத்தை வெளிக்காட்டும்சின்ன முனங்களைக்கூட, ஒரு பெண்ணால் வெளிக்காட்ட முடியாது. ஆனால் இன்று அப்படியல்ல. தனக்கான தேவையை, தான் விரும்பும் தேக சுகத்தை எப்படி வேண்டும், அல்லது இப்படி வேண்டாம் சொல்லுவதும், அதைக்கேட்டுப் பெறும் நிலையில் தான் பெண் சமூகம் உள்ளது. இந்த விழிப்புணர்வு எல்லா நிலைகளிலும் இருக்கிறது. இருபாலரும் அதிகமான உடல்சுகத்தை எந்த கிரக அடிப்படையில் பெறுகிறார்கள் என்று பார்ப்போம்.
இலக்கினம் என்கிற ஜாதகர் பலமானவராக இருக்கவேண்டும். அதன்பின்வீரியத்தைத் தரக்கூடிய மூன்றோனும், ஜாதகரின்சுகத்தைக் குறிக்கும் நான்கோனும், ஜாதகரின் மனைவியைக் குறிக்கு ஏழோனும். இவர்களோடே காரகன் சுக்கிரனும், மனதுக் காரகன் சந்திரனும் பலவான்களாக  இருக்க வேண்டும்.

இலக்கினத்தில் சந்திரன், சுக்கிரன் இருந்தாலோ, மனைவியைக் குறிக்கும் ஏழில் இருந்தாலோ, அல்லது இருவரில் ஒருவர் இலக்கினத்தில் இருந்து, மற்றவர் ஏழில் இருந்தாலோ காம சுகத்தில் எல்லை மீறி நடப்பார்.
அதீத வேகத்தையுடைய செவ்வாயும் சுக்கிரனும், சந்திரனும், இராகும் தொடர்பு கொள்ளஉச்சக்கட்டத்தையும்மீறிய காமவேட்கை கொண்டவர். இவர்கள் சனி, கேதுவின் தொடர்பையோ, சாரத்தையோ பெற்றிருக்கக் கூடாது.    

ஒரு இலக்கினத்திற்கு எட்டுக்குடையக் கிரகம், ஏழாம் வீட்டில் அதாவது எட்டாமிடத்திற்கு பனிரெண்டாமிடமான விரையவீட்டில், அமரக் கூடாது. அது கட்டிய மனைவிக்கு ஆபத்தாக முடியும். அது ஜாதகனுக்கும் ஆபத்தான அமைப்பாகும். மேலும், மனைவியின்  குடும்பம் என்பது எட்டாமிடமாகும். அது மனைவியின் ஸ்தானத்துக்கு இரண்டாமிடமாகும். அந்த எட்டாமதிபதி உங்களின் இலக்கினாதிபதியை தொடர்பு கொண்டு, ஏழில் இருந்தால் மனைவியோடு மாமனார் வீட்டில் வாழ்வார். அல்லது மனைவியின் குடும்பத்தோடு அவர்களின் வருமானத்தில் வாழ்க்கை நடத்துவார்.
இலக்கினத்திற்கு ஏழில் இலக்கினாதிபதி நின்றால், மனைவியின் வீட்டில் கணவன் இருப்பதாக அர்த்தமாகும். இவர்கள் மனம் நெருங்கிய ஆத்மார்ந்தம் உணர்ந்தவர்களாக மகிழ்ச்சியோடு வாழ்வார்கள்.

ஜென்ம லக்கினாதிபதி என்கிற ஆணும், ஏழாமதிபதி என்கிற பெண்ணும் கூடினால் தான் நான்காமதிபதி என்கிற சுகம் கிடைக்குமல்லவா? அதேபோல், இவர்கள் ஒன்று கூட பேரழகியும், மனதுக்கினியவளுடனும் வாழ்க்கை நடத்துவான். மேலும், கிழக்கு இராசிகளிலும், இரிடபத்திலும் கூட அவளிடம் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கிற மனநிலையுடன் இணைந்து  வாழ்க்கை நடத்துவீர். 

இன்று தனக்கு வாழ்க்கைத் துணைவியாக வரும் பெண் அழகானவளாக இருப்பாளா? அவளின் குணநலன் எப்படி இருக்கும் என்பதனை   காண்போம்.
இலக்கினத்திற்கும் ஏழாமிடத்தில் உள்ள கிரகத்தை வைத்தோ, அதிலுள்ள கிரகங்கள் பெற்ற சாரத்தை   மையப்படுத்தியோ, அல்லது அவ்வீட்டின் அதிபதியையும், அவர் பெற்ற சாரநாதனையும் வைத்தோ மனைவி, அல்லது கணவனின் குணநலன்கள் ,அழகு அனைத்தும் காணவேண்டும்.

 இலக்கினத்திற்கு ஏழாமிடம் நல்லகிரகத்தின் வீதாக இருந்து, அதில் நல்லகிரகம் இருந்து, நல்லகிரத்தின் பார்வையும் பெற்று இருந்தால், அவர்க்கு கிடைக்கும் வாழ்க்கைத் துணை, நல்லகுணமுள்ள, அழகான, அமைதியானதாக கிடைக்கும்.
இலக்கினத்திற்கு ஏழாமிடத்தில் வளர்பிறை சந்திரன் இருந்தால், ஜாதகர்க்கு கிடைக்கும் வாழ்க்கைத் துணை அற்புத அழகுடையவளாக இருப்பாள். அழகுதான் ஆபத்து என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். அதேசமயம், தேய்பிறை சந்திரனாக இருந்தால், வெறுக்கத்தக்க பிடிவாதத்துடன், சண்டையிடும் மனைவி வாய்ப்பாள்     

ஏழாமிடத்தில் ஆதித்தன் எனும் சூரியன் இருந்து நல்லகிரகம் காண, வாழ்க்கைத்துணை அழகான, ஆளுமைத் திறன் மிக்க, அமைதியானதாக வாய்க்கும்.
ஏழாமிடத்தில் சந்திரனும், ஆறாமதியும் கூட, ஒருவருக்கு ஒருவர் ஆதிக்க உணர்வோடு இருப்பார்கள். அது குடும்பவாழ்வுக்கு தேவையற்றதாகும். இது பிரிவினையைத் தூண்டும் அமைப்பாகும்.

 பொதுவாக ஏழாமிடத்தில் பாவக்கிரகங்கள் இருந்தாலோ, பாவக்கிரக சாரம்பெற்ற கிரகம் இருந்தாலோ, வாழ்க்கைத்துணையால் பிரச்சனைதான் ஏற்படும். ஏழில் சூரியன் இருக்க வாழ்க்கைத்துணை உயர்ந்த இடத்தில் இருந்து வரும். இதேபோல, கிரகங்களின் காரகங்களை வைத்து காணவேண்டும். செவ்வாய் கிரகம் எப்படி வெப்பநிலையில் தகித்துக் கொண்டுள்ளதோ, அதேபோல் ஏழில் இருந்தாலும் அதேநிலைதான். புதனும் குருவும் ஏழில் இருந்தால் ஜாதகரின் வாழ்க்கைத்துணை புனிதமாக இருக்கும். ஆனால், பாவக்கிரகங்களின் தொடர்போ, மறைவு அதிபதிகளின் தொடர்போ இருக்க்க் கூடாது. ஏழில் சுக்கிரன் நின்றாலோ, சுக்கிரனின் சாரம்பெற்றக்கிரகம் நின்றாலோ, வரும் வாழ்க்கைத்துணை பாக்கியம் நிறைந்த்தாக இருக்கும். ஏழில் குளிகனோ, கேதுவோ இருக்க தன்தகுதிக்கு கீழான வகையில் அமையும். இவை போன்ற அனைப்புகளில் சீர்தூக்கி பலன்பார்ப்பது நல்லது.

No comments:

Post a Comment