Thursday 6 November 2014

ஒவ்வொரு தசாவிலும் நல்லபலன் தரும் புக்திகள் எவை?

                                                                                                                                                                                   
பொதுவாக இலக்கினத்திற்கு சூரியன் 3,6,10 ல் இருந்து தன் தசாவை நடத்தினால், தசா முழுவதும் நல்லப்பலன்களைத் தருவார். இலக்கினத்துக்கு 1,6,7,10ல் சந்திரன் நின்று தசாவை நடத்தினாலும், இலக்கினத்துக்கு செவ்வாய் 3,6 ல் நின்றும், இலக்கினத்துக்கு இராகு, கேது, சனி 3,6 ல் நின்றும், இலக்கினத்துக்கு  குரு   2,5,7,9 ல் நின்றும், இலக்கினத்துக்கு சுக்கிரன் 6மிடத்தைத் தவிர, மற்ற எல்லாவிடங்களிலும் இருந்தாலும் நல்லப்பலன்களைத் தருவான்சூரியன் தசாவில் சந்திரன், செவ்வாய், குரு ஆகிய புத்திகளும், சந்திர திசாவில் சூரியன், குரு புக்திகளும், செவ்வாய் தசாவில் சூரியன், சந்திரன், குரு புக்திகளும், இராகு தசாவில் செவ்வாய், குரு புக்திகளும், குருதசாவில் சூரியன், சந்திரன், செவ்வாய் புக்திகளும், கேது தஸாவில் சுக்கிரன், சனி புக்திகளும், சுக்கிரன் தசாவில் புதன், சனி இவர்களுடைய புக்திகளும் பொதுவாக நல்லப் பலன்களை தருகின்றன.                                                                                                                                                 
மேலே குறிப்பிட்டுள்ள சில புக்திகள் மட்டும், இலக்கினத்துக்கோ, தசாநாதனுக்கோ கெடாமல் இருக்கவேண்டும். இதில் பாவக்கிரகங்களான சூரியன், செவ்வாய், சனி, இராகு, கேது ஆகிய கோள்கள், இலக்கினத்துக்கோ, தசாநாதனுக்கோ, 8, 12 ல் நிற்கக் கூடாது. நல்லக் கோள்களான சந்திரன், குரு, புதன் இவைகள் 3,6,8,12 ல் நிற்கக் கூடாது. சுக்கிரன் எனும் நல்லக் கோள் 6 ல் இலக்கினத்துக்கோ, திசாநாதனுக்கோ மறைவாய் இருக்கக் கூடாது. இவைகளோடு தசாநாதனும், புக்தி நாதனும் பாவிகள் தொடர்பில்லாமல் இருக்கவேண்டும். இது போன்ற ஜாதகத்தில்தான் யோகப்பலன்கள் நிரம்பி இருக்கும்.

    

No comments:

Post a Comment