Tuesday 4 November 2014

உயிரும், உடலும் நலம்தானா?



நம் முன்னோர்கள் வானத்தை பனிரெண்டு மண்டலமாகப் பிரித்து வைத்திருந்தனர். இதற்கு  மேடம், இரிடபம், மிதுனம், கடகம், சிம்ம்ம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்று பெயரிட்டனர். ஒரு மண்டலத்திற்கு இரண்டேகால் நட்சத்திர வீதமாக, இருபத்தி ஏழு நட்சத்திரங்களை பன்னிரு இராசிகளுக்குப் பங்கிட்டுத் தந்துள்ளனர். ஒரு நட்சத்திரத்தை நான்கு கூறாகப் பிரித்தனர். அப்படியானால், இரண்டேகால் நட்சத்திரம் என்பது ஒன்பது பாகமாகும். இதை ஒரு இராசிக்கு ஒன்பது பாதங்கள் என்று பெரியவர்கள் அழைப்பர். அப்படி என்றால், பன்னிருராசிகளை ஒன்பதால் பெருக்க, 108 பாதங்கள் வரும். இதுதான் இராசிகளின் மொத்த அளவாகும். பாதங்கள் என்பது அடிகள் என்று அர்த்தமாகும். இது சூரியமண்டல திருவடிகளின் மொத்த அளவாகும். அதனால்தான்அஷ்டோத்திர மந்திரங்களுக்குசக்தி அதிகமிருப்பதாக நம்பப்படுகிறது. அஷ்டோத்திரம் என்றால் 108 என்பதாகும். இது உயிரைக் காக்கும் எண் என்பதும், உங்களுக்குத் தெரியும்.

ஒரு பந்தை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சரியளவு இடைவெளி விட்டு பன்னிரண்டு புள்ளிகளை இடுங்கள். பந்தின் நடு உச்சியிலுள்ள புள்ளியில் மேடம் என்று எழுதுங்கள். அதற்கு அடுத்த புள்ளியில் இரிடபம் என்றும், அதற்கடுத்து மிதுனம் என்றும், அடுத்து கடகம் என்றும் வரிசையாக புள்ளிகளில் இராசியின் பெயர்களை இடுங்கள்இப்போது கடகப்புள்ளியில் இருந்து குறுக்காக, கோடு வரைந்து கும்பப் புள்ளியில் வரைக்கும் வரையுங்கள்.    இப்படி சூட்சுமமாக இருபிரிவாகவும் பிரித்தனர்.

சூரியனின் வீடான சிம்மம் முதல், சனியின் வீடான மகரம் வரையுள்ள ஆறுவீடுகள் ஒருபிரிவாகவும்,

சந்திரன் வீடுமுதல் சனியின் வீடான கும்பம் வரை ஒரு பிரிவாகவும் பிரித்துள்ளனர். இதை,

சிம்மம் முதல் மகரம் வரையிலான ஆறுராசிகளும், உயிர்ராசிகள் என்றும்,

கடகம் முதல் கும்பம் வரையிலான ஆறுராசிகளும் உடல் ராசிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.

சூரியன் + சனி கூட்டணி இராசிகளில் நல்ல கிரகங்கள் இருந்தால், உயிருக்கு நல்லது.

சந்திரன் + சனி கூட்டணி இராசிகளில் பாபக்  கிரகங்கள் இருந்தால், உடலுக்கு நல்லதாகும்.

முன்னது அருள் இராசி, பின்னது பொருள் இராசியாகும்

சூரி + சனி கூட்டணிராசிகளை ஆண்ராசிகள் என்றும், சந் + சனி கூட்டணி ராசிகளை பெண்ராசிகள் என்று சொல்வாரும் உள்ளனர்.

இது போன்ற ஜோதிடக்கருத்துகள் இன்னும் ஏராளமாக உள்ளன.
முத்துப்பிள்ளை,
91501 06069, 93456 56268. 

No comments:

Post a Comment