Thursday 13 November 2014

மனநலப் பாதிப்பும்....ஜோதிடம் கூறும் விதிகளும்.....


இடைச்சங்கம், கடைச்சங்க காலத்துக்கும் முற்பட்ட, தமிழின் தொன்மையான தொல்காப்பிய நூலில், உயிர்களின் பருப்பும், சிறப்பும் மரபும் கூறுமிடத்தில்,
ஒன்றறிவதுவே உற்றறி வதுவே
இரண்டறிவதுவே அதனொடு நாவே
மூன்றறிவதுவே அவற்றோடு மூக்கே
நான்கறிவதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறிவதுவே அவற்றோடு செவியே
ஆறறிவதுவே அவற்றோடு மனனே
நேரிதின் உணர்ந்தார் நெறிப்படுத்தினரே
என்றார். இக்கருத்தை வேறு யாரோ உணர்ந்து கூற, மற்றவர்கள் நெறிப்படுத்திச் சொல்ல, அதன்பின் தொல்காப்பிய நூலில், தொல்காப்பியனார் குறிப்பிடுகிறார்.
தொல்காப்பியம் மரபியலில் கூறியது போல், “ஆறாம் அறிவான மனதைஅடக்கி நிலை தடுமாறாமல் வாழ்ந்தால், மனச்சிதைவு ஏற்படாது.
மனதுக்குள் மாசு இல்லாமல் இருக்க வேண்டுமானால், அனைத்து அறங்களையும் பின்பற்ற வேண்டும் என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. அனைத்து அறன் என்பது எது என்றால்,
அழுக்காறு அவா வெகுளி இன்னாசொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். குறள். 35

பொறாமை, ஆசை, சினம், கடுங்கோபம் இவற்றைத் தவிர்த்தாலே மனச்சிதைவு ஏற்படாது.
எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை, நம் சமூகமும், கல்வியும் தருவதில்லை. யாரும் யாரோடும் ஒப்பிட்டுப் பார்க்கும் ஏற்றத் தாழ்வுகளைத் தான், நமக்குக் கற்றுத் தந்துள்ளது. ஏற்றத் தாழ்வுகளைப் பகுத்துப் பார்க்க, ஆறாம் அறிவைப் பயன்படுத்தாமல், அதற்குள்ளேயே கடும் சுமைகளை ஏற்றி வைக்கிறோம்.
மனிதனின்   ஆறாம் அறிவான மனதை, நல்ல உணர்வாலும், நல்ல எண்ணத்தாலும். நல்ல சிந்தனையாலும் வளர்க்க வேண்டும். எந்த செயல்களிலும், முரண்படுபவன், தாக்கப் படுபவன் தடுமாற்றங்களுக்குள் சிக்கிக் கொள்வான். மனச்சிதைவு எனும் நிலையை அடைந்து விட்டால், சித்த சுவாதீனம் ஏற்பட்டு விடும்.
ஜோதிட சாத்திரத்தில், எந்தெந்த கிரக அமைப்புகள், சேர்க்கைகள், ஒருவனின் மனதை எப்படி பாதிக்கின்றன் என்பதை இங்கே காண்போம்.
1.   இலக்கினத்துக்கு மறைவு ஸ்தானங்களான 6, 8, 12 மிடங்களிலோ, பாக்கிய ஸ்தானமான 9 மிடத்திலோ, சூரியன், சந்திரன் கூடி நின்றாலோ, அல்லது சந்திரன் நின்ற இடத்திலிருந்து மறைவு ஸ்தானங்களில் சூரியன் நின்றாலோ மனநலம் பாதிக்கும்.
2.   பொதுவாக இலக்கினத்துக்கு இரண்டாமிடத்தில் சந்திரன் நின்றாலும், இவரை பாவக்கிரகங்கள் கண்டாலும் மனம் குழம்பும்.
3.   சூரியன் சந்திரனை இராகு காண, தற்கொலை சிந்தனை மேலோங்கும்.
4.   சூரியன், சந்திரனை செவ்வாய் காண, மனநலம் பாதிக்கும்.
5.   சூரியன், சந்திரனை சனி காண, பயத்தாலே மனநலம் பாதிக்கும்.
6.   சூரியன், சந்திரனை, கேது காண, அன்மீக எண்ணத்தாலே மனநலம் பாதிக்கும்.
7.   கேதுவோடு பாவக்கிரகங்கள் கூட, தற்கொலை எண்ணம் இருக்கும்.
8.   இலக்கினத்துக்கு ஐந்து, எட்டாமிடங்களில், ஒருவர் மாறி ஒருவர் அமர்ந்தாலும், செவ்வாய், சனி, இராகு, கேது முதலிய பாவக்கிரகங்கள் கண்டாலும் மனநலம் பாதிக்கும்.
9.   சூரியன், சந்திரன், புதன் இவர்களுடன் மந்தன் என்று அழைக்கப்படும் சனியின் மகனான மாந்தி கூடினாலும், அல்லது தனித்தனியே இவர்களுடன் கூடினாலும் மனநலம் பாதிக்கும்.
10.            பாவக்கிரகங்களுடன் புதன் கூட, மனம் சஞ்சலத்தால் புத்தி தடுமாறும்.
11.            பாவக்கிரகங்களுடன் சூரியன் கூட, ஆத்மாவில் தடுமாற்றம் ஏற்படும்.
12.            பாவக்கிரகங்களுடன் மனதுக்காரகன் சந்திரன் கூட, மன நோயால் பாதிக்கும்.
13.            சந்திரன், புதன் இவர்கள் நின்ற ராசிக்கு முன்னே, பின்னே பாவக்கிரகங்கள் நின்று, இவர்களுக்கு பாவக்கர்த்தாரி யோகம் ஏற்பட்டாலும்,
14.            இலக்கினத்துக்கோ, இராசிக்கோ சனி, செவ்வாய் இராகு  இரண்டு, பனிரெண்டில் நின்றாலும்,
15.            ஒன்று, ஐந்தில் சனி, இராகு நின்றாலும்,
16.            சூரியன், சந்திரன், புதன் மூவரும் இலக்கினத்துக்கு மறையக்கூடாது. மேலும், தங்களுக்குள்ளும் மறையக்கூடாது.
17.            இலக்கினத்துக்கு நான்காமதிபதியுடன் சனி, செவ்வாய், இராகு கூட, மனம் பேதலிக்கும்.
18.            இலக்கினத்துக்கு நான்காமதிபதிபதி மறைவிடங்களில் அமர்ந்திருந்தால், எதிரிகளாலும், நோயாலும், கடனாலும், விரயத்தாலும், உடல் நலம், மனநலம் பாதிக்கும்.
19.            இலக்கினத்துக்கு நான்காமிடத்தில் சனி நிற்க, எந்நேரமும் அவமானங்களாலும், மனக்கவலையுள்ளவனாக இருப்பான்.
20.            இலக்கினத்துக்கு ஏழினில்,
             “வள்ளல் இந்த இரவியைச் சனியும் தான் நோக்க
                  வழுத்திட்டேன் மனைவியால் அவதூறு குற்றம்.
             மெள்ளவே வந்துவிடும் கவலை வாய்க்கும்” 
21 ஆறினில் புதன்
 “வித்தகர்க்கு மனக்கவலை உண்டேன் பாரே
22 இலக்கினத்தில் சந்திரன்
மனவருத்தன், மனக்கிலேசன்
23 இலக்கினத்தில் சனி
  “மனோவியாதி உடையவன்
24 பத்தினில் சூரியன்
 “எந்தையே ஆயுள் மட்டும் கவலை உள்ளவன்
25 இலக்கினத்தில் சூரியன்
விடுவதுமில்லை பயித்திய ரோகி
இதுவரை மனோ வியாதிக்கான கிரகச்சேர்க்கைகளைக் கண்டோம். இனி மனோவியாதியால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்போம்.
உதாரண ஜாதகம். 1.
விதி 1ல் கூறியுள்ள படி, இலக்கினத்துக்கு ஆறில் சந்திரன் மறைவதும், சூரியனுக்கு பனிரெண்டில்
சந்திரன் மறைவதும், மனநலம் கெடும் அமைப்பாகும்மேலும்,

விதி 3ல் கூறியுள்ளபடி, ஆத்மக்காரகன் சூரியனை, நிழல் கிரகமான இராகுவும், இருள்கிரகமான சனியும் காண்பதுஆத்மாவை திரைபோட்டு மறைக்கும் நிலையாகும்.

சனி
இராகு
சந்தி
சூரி  சுக்கி செவ்வாய்
புதன்



      25.05. 1968 ஆண்
இரவு 07. 24 நிமிடம்.     



குரு


இலக்கி

கேது
விதி 9, 11 ல் கூறியுள்ளபடி, சூரியனுடன் மாந்தி கூடுவதும், சூரியனுடன் செவ்வாய் கூடுவதும் மனநலம் பாதிக்கும் அமைப்பாகும்.
விதி 13 ல்கூறியுள்ளபடி, சந்திரன், புதன் ஆகிய கிரகங்கள், பாவக்கிரகங்களின் அருகிலமர்ந்து, பாவக்கத்தாரியோகம் அமைப்பு பெறுவது, மனமும், புத்தியும் பாதிப்படையும்.
விதி 15 ல் கூறியுள்ளபடி, இருள்கிரகமான சனியும், நிழல் கிரகமான இராகுவும் ஐந்தில் அமர்ந்திருந்தால் மனநலம் கெடும்.
விதி 16 ல் கூறியுள்லபடி, விருச்சிக லக்கினத்துக்கு ஆறில் சந்திரனும், எட்டில் புதனும் மறைந்துள்ளனர்.மேலும், புதனுக்குள் சூரியன் மறைந்தும், சூரியனுக்குள் சந்திரன் மறைந்தும் உள்ளனர்.
விதி 17 ல் கூறியுள்ளபடி, இலக்கினத்துக்கு நான்காமதிபதியை இராகு கூடியுள்ளார். இதனாலும், மனநிலை பாதிக்கும்.
விதி 20 ல் கூறியுள்ளபடி, இலக்கினத்துக்கு ஏழிலுள்ள சூரியனை சனி காண,
வழுத்திட்டேன் மனைவியால் அவதூறு குற்றம்
மெள்ளவே வந்துவிடும் மனக்கவலை வாய்க்கும்.”
என்ற பாடலின் படி, இந்த ஜாதகர்க்கு மனைவியால் அவதூறு குற்றம் ஏற்படவில்லையென்றாலும், ஏழாமிட காரகமான கூட்டாளிகளால் பெருத்த அவமானங்கள் ஏற்பட்டு, அவதூறுகளை சுமந்தார். இதனாலே மனநலம் கெட்டு, இந்த கவலைகளிலிருந்து வெகுகாலம் மீளவேயில்லை.
உதாரணஜாதகம். 2.
மகர இலக்கினம். மகர இராசி.
விதி 1 ல் கூறியுள்ளபடி,இலக்கினத்துக்கு எட்டில் சூரியன் மறைந்துள்ளார். மேலும், சூரியனும், சந்திரனும் தங்களுக்குள் ஆறு, எட்டாக மறைந்துள்ளனர். இந்த அமைப்பாலும் மனநலம் பாதிக்கப் பட்டுள்ளது
 விதி 9 ல் கூறியூள்ளபடி, சனியின் துணைக்கோளான மாந்தி, மனோகரனான சந்திரனைக் கூடியுள்ளார்.
விதி 10 ல் கூறியுள்ளபடி, புத்திக்காரகனான புதன், ஞானகிரகமான கேதுவுடன் கூடியுள்ளார். ஜாதகரும் ஆன்மீகத் துறவியாவதற்கானப் படிப்பினை  படித்துத் தேறியவர். பின் மனநலம் பாதிக்கப்பட்டு, இறப்பின் விளிம்புவரை சென்று திரும்பியவர்.

இராகு




குரு


     15.09. 1986
03.30 மாலை ஆண்.

இலக் சந்
  மாந்
சூரி
செவ்

சனி
சுக்கி
புதன்     கேது

விதி 16 ல் கூறியுள்ளபடி, சூரியனுக்கு சந்திரன் மறைந்து உள்ளார். அதேபோல், சூரியனுக்கு புதனும் மறைந்துள்ளார். இப்படி ஒரு கிரகத்துக்கு மறுகிரகம் மறைந்திருப்பதும், மனநலம் கெடுவதற்கான அமைப்பாகும்.
விதி 18 ல் கூறியுள்ளபடி, இலக்கினத்துக்கு நான்காமதிபதியான மனதைக்குறிக்கும் கிரகமான செவ்வாய், இலக்கினத்துக்கு பனிரெண்டாமிடமான, தூக்கத்தைக் கொடுக்கும், சயன வீட்டில் செவ்வாய் அமர்ந்திருப்பது, தூக்கத்தை விரையப்படுத்தும் அமைப்பாகும். ஜாதகர்க்கு தூக்கம் என்பதே, மாத்திரைகளின் உதவியோடு தான்.
விதி 22 ல் கூறியுள்ளபடி, மனவருத்தனும், மனதில் அச்சத்துடனும் வாழ்ந்து வருகிறார்.         
உதாரண ஜாதகம். 3.
இந்த ஜாதகரின் இலக்கினம் கடகம். இராசி மிதுனமாகும்.
கடக இலக்கினத்துக்கு பாதக இடமான, இரிடபத்தில் செவ்வாய் அமர்ந்து, சூரியனைக் காண்பதும், கடகைலக்கினத்துக்கு ரோக இடத்தில் சனியமர்ந்து, மனதுக்காரகனை பார்ப்பதும், மனநலம் கெடுகிறது.
விதி 3, 6 ல் கூறியுள்ளபடி, எட்டிலமர்ந்துள்ள கேது, இரண்டிலுள்ள சூரியனைக் காண்பதும், இரண்டிலமர்ந்துள்ள இராகு, பதினொன்றிலமர்ந்துள்ள சந்திரனைக் காண்பதும், மனநலம் பாதிக்கும்.




செவ்வாய்
சந்திரன்
கேது


18.08.1960      04.30அதிகாலை.
இலக்கி
புதன்


சூரி   சுக் இராகு
சனி    இராகு


மாந்


விதி 11 ல் கூறியுள்ளபடி, இலக்கினத்துக்கு பாதகதிபதியான சுக்கிரனுடனும், கடும் பாவியான இராகுவுடனும், ஆத்மாக்காரகன் கூடுவது, ஆத்ம நடுக்கம் ஏற்படும்.
விதி 16 ல் கூறியுள்ளபடி, கடக லக்கினத்துக்கு சந்திரன் மறைவதும், சூரியனுக்கு புதன் மறைவதும் மனநலம்பாதிக்கும்.
 உதாரண ஜாதகம். 4.
இந்த ஜாதகரின் இலக்கினம் தனுசு. இராசி சிம்மம்.
விதி 1 ல் கூறியுள்ளபடி, இலக்கின மறைவிடமான எட்டில் சூரியன் அமர்வதும், மனமெனும் சந்திரனுக்கு பனிரெண்டில் ஆத்மாவெனும் சூரியன் மறைவதும், மனநலம் பாதிக்கும்.




புதன் சனி
இராகு


       26.07.1914                         
            05.07மாலை
சூரி  மாந்தி
குரு

சந் செவ் சுக் கேது
இலக்






விதி 9 ல் கூறியுள்ளபடி, சனியின் மகனான மாந்தி, சூரியனுடன் கூடுவது மனநலம் கெடும்.
விதி 10 ல் கூறியுள்ளபடி, புத்திக்காரகன் புதனுடன், சனி கூடுவதும், மனநலம் பாதிக்கும்.
விதி 12 ல் கூறியுள்ளபடி, மனோகரன் சந்திரன், பாவிகளுடன் கூடுவதும்.
விதி 13 ல் கூறியுள்ளபடி, சந்திரன், புதன் கிரகங்களுக்கு பாவகத்தரி யோகம் ஏற்படுவது. இதனாலும், புத்தியும், மனமும் கெடும் நிலை ஏற்படும்.
விதி 16 ல் கூறியுள்ளபடி, மனோகரனுக்கு, ஆத்மா மறைவதும். ஆத்மாவுக்கு புத்தி மறைவதும், மனம், ஆத்மா, புத்தி மூன்றும் கெடும்.
இதுபோன்ற கிரக அமைப்புகள் உள்ள அன்பர்கள் மனதைச் செம்மைப் படுத்திக் கொள்ள மனவள பயிற்சிகள் எடுப்பதன் மூலமும், ஆழ்நிலை தியானம் மூலமும், கொந்தளிப்புடன் இருக்கும் மனதை அமைதிப்படுத்திக் கொள்ளலாம்.
                                     வாழ்க வளமுடன்.
முத்துப்பிள்ளை
4/7/1. வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர். அஞ்சல் 624 701.
ஆத்தூர், வட்டம்.
திண்டுக்கல் மாவட்டம்.
கைபேசி. 91501 06069.










2 comments:

  1. கிரகணத்தில் பிறந்தவர்கள் மனநிலை பாதிப்பு ஏற்படுவார்கள் என்ற கூற்று உண்மையா

    ReplyDelete
  2. தெளிவான விளக்கம் நன்றி அய்யா!!

    ReplyDelete