ஐஞ்சாறுக்குடையோன் காரியானதோர் பதினொன்று
ஏக
மிஞ்சியே இந்து தானும் மேவியே இருக்குமாகில்
எஞ்சலின் குளிகன் தானும் இருபக்கம் இருக்க
நோக்க
வஞ்சியர் கொலைப் பெண் வீட்டில் வளர்க்கும்
நாய்போலே நிற்கும்.
பொதுவாக எந்த லக்கினத்திற்கும் ஐந்தாமிடம் என்பது குலதெய்வத்தைக்
குறிக்குமிடமாகும். அதனால், அவ்வீடு புனிதமானதாக கருதப்படும். இது உடல்கூறில் இருதயத்தைக்
குறிப்பதால், இறைவன் குடியிருக்கும் பகுதியாகும். அதனால், இந்த இடம் பாவக்கிரகப் பாதிப்போ,
இதன் அதிபதி பாவ இடத்திலோ, அல்லது பாவக் கிரகத்தொடர்புடனோ இருக்கக் கூடாது. இதேபோல்
தான் இலக்கினமும் பாவக்கிரகத் தொடர்பும் இல்லாமல் இருக்கவேண்டும்.
ஆனால், இங்கே, கன்னியா லக்கினத்திற்கு ஐந்து ஆறுக்குடைய சனி,
பதினோறாம் வீட்டினில் அதன் அதிபதியான சந்திரனுடன் கூடியிருக்க, இலக்கினத்தில் சனியின்
மகனான மாந்தி அமர்ந்து, முன்னும்பின்னும் பார்க்க, ஜாதகரின் வீட்டில், ஒரு கன்னிப்பெண்
கொலையோ, அல்லது தற்கொலையோ செய்திருப்பாள்.
தன் எஜமானன் போட்ட எச்சில் சோற்றைத் தின்ற நாயும், தன் விசுவாசத்தைக்
காட்ட, அந்த வீட்டையும், வீட்டில் உள்ளவர்களையும் சுற்றிசுற்றியே வருவதைப் போல, அப்பெண்ணின்
ஜீவஆவியும் அந்த வீட்டையும், அவ்வீட்டில் உள்ளவர்களையும் சுற்றி வரும் என்கிறது பாடல்.
ஜாதகக் கட்டம் 1
- 6 -
|
இராசிக் கட்டம் |
சனி – சந்தி
|
|
- 5 -
|
|||
ஜோதிடக்கவிஞர்
முத்துப்பிள்ளை. 91501 06069, 87548 73378

No comments:
Post a Comment