Tuesday 28 July 2015

விதிகளும் விளக்கங்களும் .. . 1






இதுவொரு பழம் தமிழ் ஜோதிடப் பாடல்தான். 
“உயிர்க்கு ஏழில் பாவர்
ஏழோனுடன் பாவர்கூடி மூன்றினிலே
ஏகுமிடம் பகைவீடா இருக்கவையா
என்ன சொல்வேன் ஒருக்காலும் கலியாணமில்லை
வாகுடனே பிலத்து சுபக் கிரகமே நோக்க
மணம் புரிவான் அல்லாதில்லை மைந்தனே கேள்
பாகமாம் ஐந்தனிலே பாவர்வாழ
போச்சுதையா புத்தி மந்தனாய் தேகத்தில்
சோகபலயீனனாய் துக்க மனகிலேசனுமாய்”
இலக்கினத்திற்கு ஏழாமிடத்தினில் பாவக் கிரகங்கள் சூழ்ந்திருக்க, ஏழுக்குடையவன் பாவக் கிரகங்களுடன் கூடி மூன்றாமிடத்தினில் அதாவது வீரிய ஸ்தானத்தில் பகைபெற்று இருக்க, ஜாதகனுக்கு திருமணம் நடப்பதில்லை. ஒருவேளை நல்லக்கிரகங்கள் பார்த்தாலும், பலருக்கு திருமணம் நடக்கிறது. சிலருக்கு நடப்பதில்லை. இந்த அமைப்போடு ஐந்தாமிடங்களில் பாவக்கிரகங்கள் சூழ்ந்திருக்க, ஜாதகன் மந்த சுபாவம் உள்ளவனாகவும், உடல் சோர்ந்து பலமற்றவனாகவும் மற்றும் மனக்கிலேசம் உள்ளவனாகவும் இருப்பான்.

மூன்றாமிடம், அதற்கு மூன்றாமிடம் ஐந்தாமிடமாகும். அதற்கு மூன்றாமிடம் ஏழாமிடமாகும். இதில் ஏதும் நுணுக்கமான விடயம் உண்டா ஜோதிடத் தோழர்களே!!! சொல்லுங்களேன்.    

விதிகளும் விளக்கங்களும்.. . 2


சொல்ல உயிர்க்குடையவனும் நாலுக்குடையவனும்
தொல்லாறில் எட்டில் பனிரெண்டில் இருந்த அந்த
தொல்லை வீடது பகைவீடாயிருந்தால்
சொற்பனத்திலும் சுகமில்லை இல்லை.

இலக்கினத்தின் அதிபதியும், நான்கின் அதிபதியும், ஜாதகனுக்குத் தீமையைத் தரும் இடங்களான 6, 8, 12 ல் ஏதோவொரு வீட்டினில் அமர,  தூக்கத்தில் வரும் கனவில் கூட சுகமிருக்காது.

இப்பாடலை ஏதோ மேலோட்டமாகப் பார்த்தால், இதுபோன்ற அர்த்தம்தான் தென்படும். கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்தோமேயானால்,  நான்குவரிப் பாடலில் கூறியுள்ள நுட்பம் என்ன என்பது விளங்கும்.

இலக்கினம் என்பது ஜாதகரின் ஒழுக்கத்தைச்  சொல்லும் இடமாகும். அதுவே, இலக்கினம் ஆண்ராசியில் இருந்தால், நான்காமிடம் பெண்ராசியில் இருக்கும். இலக்கினம் பெண்ராசியில் இருந்தால், நான்காமிடம் ஆண்ராசியில் இருக்கும்.  இப்படி ஆணும் பெண்ணும் கலவியில் கூடினால் தான் கட்டில் சுகமே கிடைக்கும். அதனால் தான் நம் பெரியவர்கள் நான்காமிடத்தை சுகத்தைச் சொல்லும் இடமாகச் சொல்லியுள்ளார்கள். மேலும், நான்காமிடம் ஒரு மனிதனின் அந்தரங்க வாழ்வையும், நெறிதவறாத கற்பின் ஒழுக்கத்தையும், களங்கம் ஏற்படாத உடல்  ஒழுக்கத்தையும், ஆண், பெண்ணின் அலித்தன்மையும் குறிக்குமிடமாகும். 

நாம் பார்த்த பாடலின்படி ஒன்று, நான்குக்குடையக் கிரகம் ஆறாமிடத்தில் இருக்க, ஜாதகன் அல்லது ஜாதகி    தன் கணவன் அல்லது மனைவியின் மேல் ஆதிக்கம் செலுத்துவார்கள்.  இதுபோன்ற ஆதிக்கச் சிந்தனையால் ஒருவரையொருவர் எதிரியாக ஆக்கிக்கொள்வர். உஅடல் சுகத்திற்காக நெருங்குபவரிடமிருந்து விலகி புறக்கணிப்பார்கள். அதனால், ஜாதகனுக்கு கடுமையான மனநோய் ஏற்படும். இலக்கினத்தின் அதிபதியும், நான்காமதியும் எட்டாமிடத்தில் கூட, உடல்சுகத்திற்கு முக்கியக்காரணமே, மறைவிட உறுப்புகள் தான். அதுவே பழுதாகிப் போகும்.

மேலும், பனிரெண்டில், இலக்கினத்தின் அதிபதியும், நான்காமதிபதியும் கூட, மறைவான விடயங்களில் பிரச்சனைகள் ஏற்படும். ஜாதகன் தோல்வியடைவதும், அதனால், மறைந்து வாழ்தலும், குடும்பத்திலிருந்து பிரிதல் அல்லது தொலைதூரத்துக்கு சென்று துறவு போவது விடல்,  பிரித்து வைத்தலும், தடைகளும் ஏற்பட்டுவிடும்.

அதனால், இலக்கினாதிபதியும், நான்காமதிபதியும் 6, 8, 12 ல்  அமரக்கூடாது. அமர்ந்தால், ஜாதகனுக்கு நனவிலும், கனவிலும் சுகமிருக்காது. 

No comments:

Post a Comment