Sunday 12 July 2015

76. இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?




“ உச்சனை உச்சனடி உகந்துமே பார்த்தானடி
அச்சம் ஒன்றும் இல்லையடி _ கிளியே
இது அரசனுக்கு ஒப்பாமடி கிளியே! “
இது பழைய தமிழ் ஜோதிடப் பாடல். ஆனால், உச்சனை உச்சன் பார்க்க, பிச்சையெடுப்பான் என்றும் சொல்லி வைத்துள்ளனர். ஆனால், எமது அனுபவத்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர், தாழ்வடைந்து, பின் உயர்வு நிலை அடைந்துள்ளதையும் கண்டேன்.
இலக்கினம் இரிஷபம், துலாமாகி , சந்திரன் இரிஷபத்திலோ, கன்னியில் புதன், சூரியனோ, கடக குருவோ, மகர செவ்வாயும், துலாமில் சுக்கிரன், சனியும் இருக்கப் பிறந்தவர்கள், மிகப்பெரும் இராஜயோகத்தை அடைவார்கள் என்கிற தகவலுடன், உங்கள் …. 


77. இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?

நம் நடைமுறை வாழ்க்கையில் ஒரே இடத்தில், அடுத்தடுத்த வீடுகளில், நம் உறவுகளான, பெரியப்பா, சித்தப்பா, அத்தை, மாமன், மகன்கள் என ஒரு கூட்டமாய் இணைந்து வாழ்ந்தால், நம் உறவுக்குள் இருக்கும் எப்படியப்பட்ட பகை நோக்கம் கொண்டவனும் நம்மோடு மோத விரும்ப மாட்டான். அதேபோல,
சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய் புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய பருக் கிரகங்கள், வரிசையாய், ஒவ்வொரு இராசிகளில் அமர, அதற்கு வீணை யோகம் என்று பெயரிடப்படும். இப்படி வீணையோகத்தில் பிறந்தவன், ஆடல்,பாடல், கல்வி கேள்விகளில் சிறந்தவன், ஞானமிக்கவன், புத்தி கூர்மையுள்ளவனாக இருப்பான் என்கிற தகவலுடன்,

91501 06069,   87548 73378

1 comment:

  1. Kadaka lakkanathula guruvum,kethuvum ullathu santhiran reshaba kattathil ullathu.rajayogam ullatha sir?

    ReplyDelete