Tuesday 28 July 2015

விதிகளும் விளக்கங்களும் .. .3




இன்று ஒருபாடலையும் அதன் விளக்கத்தையும் காணலாம்.
வல்ல உயிரோனும் ஏழாமிடத்திருக்க
வகை ஏழாமிடத்தோனும் உயிரே நிற்க
அல்லது ஓர் இராசினியில் இருந்து கூட
அச்சாதகனைக் கூடும் பெண் மரணமாமே.
இலக்கினத்தின் அதிபதி கணவனையோ, அல்லது மனைவியையோ குறிக்கும் ஏழாமிடத்தினில் இருக்க, அதேபோல், ஏழாம் அதிபதி இலக்கினத்தில் இருக்க, அல்லது இவர்கள் ஒன்று, ஏழு ஆகியவீடுகளில் ஏதோவொன்றில் இருக்க, அச்சாதகனோடு படுக்கையில் உறவு கொள்ளும் பெண் மரணமடைவாள். இதுதான் இந்த பாடல் தரும் விளக்கமாகும்.

பொதுவாக, இலக்கினம் என்பது ஜாதகனைக் குறிக்கும். ஏழாமிடம் என்பது ஜாதகனின் மனைவியைக் குறிக்கும் என்று, நாம் சொல்லிவருகிறோம். இப்போது, இவர்கள் ஒன்று, ஏழில் கூடி படுக்கைச் சுகம் கண்டாதான் மரணம் ஏற்படுவதாக ரோமரிஷி கூறுகிறார். ஆனால், உண்மையில் , 1, 7, 6, 8, 12 ல் மட்டும் ஒன்று, ஏழுக்குடையவர்கள் இருக்கக் கூடாது. ஆனால், மற்ற இடங்களான 2, 3, 4, 5, 9, 10, 11 ல் கூடலாம்.  இதற்கு காரணம் என்னவென்றால், இலக்கினத்திற்கு ஆறாமிடம் என்பதும், பனிரெண்டாமிடம் என்பதும், ஏழாமிடத்திற்கு பனிரெண்டு, ஆறாமிடமாக வரும். அதில் ஜாதகனின் மனைவியோடு ஜாதகன் கூடி வாழ்வது  இயலாத, அல்லது பொருந்தாத வாழ்வாகத்  தான் இருக்கும்.  மனைவியின் இலக்கினமான ஏழாமிடத்திற்கு, எட்டாமிடம் என்பது, ஜாதகனின் இரண்டாமிடத்தைக் குறிக்கும். இந்த இரண்டாமிடம் மனைவியின் மரணத்தையும், ஜாதகனின் குடும்பத்தையும் குறிக்குமிடமாகும். அதனால், இங்கு நல்லக்கிரகங்களின் தொடர்பும், பார்வையும் இருந்தால், ஜாதகன் வளமான வாழ்வான். நன்றி.
விதிகளும் விளக்கங்களும் .. . 4
                               

இன்றும் ஒரு பாடலையும், அதன் விளக்கத்தையும் காண்போம்.

“பொல்லாத கேதுவுடன் குருவும் சேர்ந்து
பொருந்தியே இலக்கினத்தை திருந்தப் பார்க்கில்
வல்லாளன் கன்னக்கோல் கையு(ங்) கள்ளன்” 

அதாவது குரு என்கிற ஜீவனும்,  கேது என்கிற ஞானமும் கூடி, இலக்கினத்தைப் பார்த்தால், ஜாதகன் கன்னக்கோல் வைத்து திருடுவதில் வல்லவன் என்கிறார். இந்த பாடல் ஏழாமிடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில், குரு, கேது கூடுவதைப் பற்றிக் கூறவில்லை என்பதையும், வாசகர்கள் கவனிக்கவும். 

இங்கே, ஏழாம் வீட்டினில்  குருவும், கேதுவும் கூடினால் மட்டுமே, இலக்கினத்தைப் பார்க்கமுடியும். மற்ற இடங்களில் இக்கிரகங்கள் கூடினால், இலக்கினத்தைப் பார்க்க முடியாது. ஆனால், ஏழாமிடத்தின் காரகங்களைப் பார்க்கும் போது, திருடுவதற்கான தேவையும், அவசியமும் இல்லை எனலாம். அதனால், எட்டில் குருவிருந்து வக்கிரமடைய, ஏழில் கேது நிற்க அப்போதும் இலக்கினத்தை கேது சப்தமபார்வையால் பார்க்க வாய்ப்புள்ளது. எட்டில் குருவும் வக்கிரமடைய ஏழில் உள்ள கேதுவை தொடர்பு கொள்ளவாய்ப்புள்ளது. ஏழிலுள்ள கேது பின்னோக்கி சுழலும் கிரகமானதால், அது ஆறாம்வீட்டிக் காரகத்தையும் செய்யவாய்ப்புள்ளது. ஆறாமிடம், சிறைச்சாலையைக் குறிக்கும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.  எட்டாம் வீட்டின் காரகங்களான    ஜாதகர்க்கு எதிர்பாராமல் கிடைக்கும் சட்டவிரோதமான பணம்,  ஜாதகரின் அதர்ம சிந்தனைகள், பெருங்கொள்ளை அடிப்பது, பிறர் பொருளை அபகரிப்பது சக்திக்கு மீறின பெருங்கடனை உருவாக்குவது போன்ற நிலைகளால்,  ஜாதகன் பிறருடைய வீட்டை துளையிட்டு, நுழைந்து திருட வைக்கும். இங்கே குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் ஆய்வு நோக்கில் செய்தால் மட்டுமே, நமக்கு உண்மைகள் விளங்கும்.  

No comments:

Post a Comment