Sunday 19 July 2015

குருகுலத்தின் எழுச்சி








நண்பர் அவர்கள், நேற்று 07. 07. 2015 அன்று செவ்வாய்கிழமை அதிகாலையில் திருப்பூர் மாநகரில், குருப்பெயர்ச்சி விழாவிற்கு பத்தொன்பது சிறப்பு அழைப்பாளர்களையும், நண்பர்களையும் அழைத்து சிறப்பித்தார். தமது குடும்பத்தார், மற்றும் தமது குருகுல மாணவர்கள் அனைவரும், தங்கள் அழைப்பை ஏற்று வந்திருந்த ஆசான்கள் அனைவரையும், முகமகிழ்வோடு கைதட்டி ஆராவாரம் செய்து வரவேற்றக் காட்சி, எங்கள் அனைவரையும் பிரமிக்க வைத்தது. இதிலெல்லாம் முத்தாய்ப்பாக, முதல் நாளே ( 06. 07. 2015 ) அன்று, பேருந்து, புகைவண்டியில் வந்திறங்கும் ஆசான்கள, வழிதெரியாமல் திணறி விடக்கூடாது என்பதற்காக, ஒவ்வொரு ஆசான்களுக்கும், ஒவ்வொரு மாணவர் நியமிக்கப்பட்டு, அவர்களை தங்கும் விடுதியில் சேர்க்க, இரவு பகலெனப் பாராமல் சேர்த்தது மட்டுமல்லாமல், அந்த ஆசான்கள் குருப்பெயர்ச்சி விழா முடிந்து, புகைவண்டியிலோ, பேருந்திலோ இருக்கையில் அமரும் வரை உடனிருந்து கவனித்துக் கொள்ளும் பொறுப்புகள், அந்த குருகுல மாணவர்களையே சேரும். அந்த மாணவனின் அழைப்பு எண் அந்தந்த ஆசான்களிடமும் இருக்கும். அவர்களை அழைத்த மறு வினாடி நம்முன் நிற்பார்கள். தேவைகள் பூர்த்தி செய்யப்படும்.

நாங்கள் நண்பர்களுடன் தேனீர் அருந்த சென்று கொண்டிருந்தோம். அப்போது ஒரு மாணவர் . அவர் என்னைக் கவனிக்க அனுப்பப்பட்டவர் அல்ல. ஆனாலும், அவரை எதிரஏ சந்தித்துக் கொண்டேன். அப்போது அவருக்கு அறிமுகமில்லாத இரண்டு ஆசான்கள் என்னோடு நின்று கொண்டிருந்தனர். இவர்களை, மாணவரிடம் அறிமுகப்படுத்தினேன். அப்போது அந்த அறிமுகத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால், அவர், தன் காலணிகளை கழட்டி, காலால் நகர்த்தி வைத்து விட்டு,  கைகட்டி, பவ்யமாக, தன்னை ஆசீர்வதிக்கும் படியாக  நின்றார்.. ஆனாலும், நான் பிரமிப்போடுதான் நின்று கொண்டு இருந்தேன். அதற்கும் காரணம் உள்ளது. பின்னவர், மெதுவானக் குரலில் சொன்னார், ஆசான்களே! ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், டீயை நானே வாங்கி வந்திருப்பேன் என்றார். ஆனாலும்,  என் பிரமிப்பு மாறவில்லை.

முதல்நாள் முன்னிரவு நேரம் இரவு 07. 15 நிமிடத்திற்கு திருப்பூர் நகரில் பேருந்தில் இருந்து, இறங்கினேன். எனக்கு முன்னே சேஷாத்திரியும், பெருந்துறை astro senthil kumar அவர்களும், தங்கும் விடுதியில் இருந்தனர். என்னை அழைத்துச் செல்ல வேண்டிய பவானி யோகா வல்லுனர் வந்து கொண்டிருக்க, astro senthil kumar அவர்களை இறக்கிய இந்த குருகுல மாணவர், இராஜன் என்பவர் என்னை அழைத்துச் செல்ல வந்தார். நாங்கள் அனைவரும் விடுதி அறைக்கு வந்தோம். நான் மட்டும் மெத்தையில் அமர்ந்திருக்க, திரு. astro senthil kumar அவர்களில் கால்களில் குருகுல மாணவர் இராஜன் வீழ்ந்து,  “என்னை ஆசீர்வதியுங்கள் என்றார். அதன்பின் சேஷாத்திரி அவர்களின் காலில் விழ, அவர் மந்திரங்களைச் சொல்லி வாழ்த்தினார். மேலும் அவர் என்னையும் மெத்தையில் இருந்து கீழிறங்கி நில்லுங்கள். என்னை ஆசீர்வதியுங்கள் ஆசானே ! என்று காலில் விழ எத்தனிக்கிறார். நான் மறுக்க, அவரும் விடுவதாக இல்லை. நான் ஒரேடியாய் மறுத்து விட்டேன். ஆனாலும், அந்த காட்சியின் தீவிரத்தில் இருந்து என்னால்  விலகமுடியவில்லை. அந்த இராஜனிடம் என் நண்பர்களையும், இவர்களும் ஆசான்கள் தான் என்று சொன்னதும், பவ்யமாக நின்றிந்த அவர் எங்கே பரபரப்போடு இயங்கிக் கொண்டிருக்கும் ரோடு என்றும் பாராமல் அவர் பாணியில் ஆசீர்வாதம் கேட்டு விடுவாரோ என்று பயமாக இருந்தது.

இப்படி ஒவ்வொரு நிகழ்விலும் Kaniyan AN Rajasekar தன் குருகுல மாணவர்களின் செயல்களில் எங்கள் கண்களில் நின்று கொண்டிருந்தார். ஒவ்வொரு ஆசான்களும் தங்களுக்குக் கொடுக்கப் பட்ட நேரத்தில் உரை நிகழ்த்திய பின் அனைவருக்கும், நினைவு கேடயமும், இரண்டு பொன்னாடைகளும், பழங்களும், தன் குருகுல மாணவர்களை வைத்தே கொடுக்க வைத்தார். இதில் ஒவ்வொரு ஆசான்களுக்கும் குறிப்பிட்ட நால்வர், அல்லது ஐவர் என் முன்பே திட்டமிட்டு வைத்திருந்தார். தனக்கான ஆசான் பேசும் போது அவர்களாகவே பொன்னாடை போடவேண்டியர் பொன்னாடை எடுத்துக் கொள்கிறார். கேடயம் தரவேண்டியவர் கேடயத்தை எடுத்துக் கொள்கிறார். பழத்தட்டு தரவேண்டியவரும் அப்படியே குழப்பமில்லாமல் எடுத்துக் கொள்கிறார்கள். இந்த ஒழுங்குமுறை எங்கிருந்து வந்தது. பள்ளிக்கூடங்களில் மறைந்து போன ஒழுக்கக் கல்வி, இங்கே “குருகுலம்” எனப் பெயர் வைத்ததால் வந்து விட்டதா? ஆசான்களின் மேல் மதிப்பு வைத்திருக்கும் இவர்களிடம்தானே ஜோதிடம் வாழவேண்டும். இவர்களால் தான் ஜோதிடத்தை வளர்க்க முடியும். ஒழுக்கம் உள்ள இடத்தில் தான், இறைவன் இருக்க வேண்டிய இடமாகும்.

07. 07 2015 மாலை நேரம். நாங்கள் குருகுலத்தைப் பிரிந்து செல்வது போன்ற வேதனையில், அனைவரிடமும் சொல்லிவிட்டுக் கிளம்பினோம். இராஜன் எதிரே வந்தார். வந்தவர் என்னிடம், “ என்னை ஆசீர்வதிக்காமலே செல்கிறீர்கள் “ என்றார். திகைத்து விட்டேன். அவர்க்கு என்ன சொல்வது என்றும் தெரியவில்லை. “ உம்மை ஆசீர்வதிக்க, எனக்கு தகுதியில்லை இராஜன் “ என்றேன். அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.

என்னை ஏன் இவன் சித்ரவதை செய்கிறான். எங்கு திரும்பினாலும், அவன் முகமே வந்து நிற்கிறதே! அவன் கண்களின் தாழ்ச்சியை, இதுவரையிலும் எவனிடமும் பார்த்ததில்லையே! என் மழுங்கிக் கிடக்கும் என்னிதயத்தை சம்மட்டியால் அடிக்கிறானே!. இன்னும் மனிதனின் காலில் மட்டுமல்ல…. இறைவனின் சன்னதியிலும் தெண்டனிட்டு வீழாமல், நட்டமரமாய் நிற்கிறாயே ! என்பதை உணர்த்துகிறாயா? அகத்தியனின் கால்களில் கனவில் வீழ்ந்தபின், இன்னும் நனவில் விழமறுக்கிறாயே ! என்பதை குருகுலக் குருப் பெயர்ச்சியில் உணர்த்துகிறாயா?  

கணியர் ஏ என் இராஜசேகர் உனக்காகத்தான் எழுதினேன். முடிக்கும் போது எனக்காகி விட்டது.

குருகுலம் என்பதே குரு முனி அகத்தியனின் குலம்.

குருப்பெயர்ச்சி என்பதே ! குருமுனியின் இடமாற்றம்தான்.

குருவே வாழ்க!  குருவே வாழ்க !        

No comments:

Post a Comment