Sunday 26 July 2015

89. இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?




நம் முன் ஜென்மக் கர்மப்பலனை அனுபவிப்பதற்காக, இறைவன் உருட்டிப் போட்ட சொக்காட்டான்களைப் போல, நம் ஜாதகத்தில்  கிரகங்கள் அனைத்தும்   சிதறிக்கிடக்கும். நாம் இறைவனிடம் இன்னின்ன இராசிகளில் இங்கிங்கே தான் கிரகங்கள் தான் அமரவேண்டும் என,   திட்டமிட்டு கேட்டு வாங்கி வரமுடியாது.

ஒருபெண்ணின் ஜாதகத்தில் இலக்கினத்திற்கு ஏழாமிடத்தினில் சுக்கிரன், செவ்வாய், சனி கூடி நின்றால், தனக்கு மாலையிட்டவனுக்கு உயிர் ஆபத்து ஏற்படும் என்பது ஜோதிட விதி. இதற்கு மாற்றாக, இந்த அமைப்புடைய பெண்கள், சஷ்டி விரதமிருந்து, சிவமுருகனை வழிபட்டு வர, வாழ்க்கையில் நல்லவினைகள் ஏற்படும், என்கிற தகவலுடன், உங்கள் …..

90. 

ஒரு பெண்ணைப் பார்த்ததும், மீண்டும், மீண்டும்  பார்க்கத் தூண்டுவது, அவளின் புற அழகும், வடிவம்தான். நம் மனம் வடிவத்தையும், உடல் கட்டழகையுமே முதலில் காண்கிறது. அதில் ஏற்படும் கிறக்கமே, வாழ்நாள் முழுதும்,  காலடியில் கிடக்க வைக்கிறது.

இலக்கினத்தில் சந்திரனும், சுக்கிரனும் இருந்தாலும், பெண்ராசியில் சந்திரன் அமர்ந்திருந்தாலும், இலக்கினத்தில் இருந்து மூன்று வீடுகளில் தொடர்ந்தாற் போல், சுபக்கிரகங்கள் நின்றாலும், அந்தப் பெண் பேரழகு உள்ளவளாக இருப்பாள் என்கிற தகவலுடன், உங்கள் ….

 92.

பொதுவாக பெண்கள் திருமணம் முடியும்வரை, தன் மேனியழகை பராமரிப்பதைப் போல, திருமணம் முடிந்து ஒன்றிரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டபின்பும் அவ்வளவாக  பேணிக் கொள்வதில்லை. உடல் கனத்து, உண்டி பெருத்து, இடை கொழுத்து விகாரமாக மாறிவிடுகின்றனர்.

ஒரு பெண்ணின் ஜாதகத்தில் இலக்கினத்துக்கு ஒன்று, ஒன்பதுக்கு உடையவர்கள் ஒன்றுக்கொன்று பரிவர்த்தனை பெற்று அமர்ந்தால், எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொண்டாலும், கட்டழகு குறையாமல், தாய்மைக் குணமும், இயற்கை  வனப்பும் இணைய, அழகுக்கு அழகு கூடியதுபோல, பேரழகியாக இருப்பாள் என்கிற தகவலுடன், உங்கள் …

91501 06069

No comments:

Post a Comment