Sunday 26 July 2015

சகோதரம் அறிதல் : (2)




1.  இலக்கினத்திற்கு மூன்றாமிடத்தினில் கேதுவும், மாந்தியும் இருந்து, ஆறாமிடத்திலோ, எட்டாமிடத்திலோ சுக்கிரன் இருந்து, சுபக்கிரகங்கள் பார்த்தால், ஜாதகர்க்கு பெண் சகோதரமே இருக்கும்.

2.  சனிக்கிரகத்திற்கு மூன்றினில் சுபக்கிரகங்கள் இருந்து, இரண்டாமதிபதியை சுபக்கோள்கள் பார்க்கவும், இலக்கினத்திற்கு ஆறாமிடத்தினிலே சுபக்கிரகம் ஆட்சி பெற்று நின்றால், இரண்டு ஆண் சகோதரர்கள் இருப்பார்கள்.

3.  மூன்றுக்குடையவன் மூன்றில் அல்லது ஏழினில் இருந்து, பாவக்கிரகங்கள் பனிரெண்டினில் இருக்க, ஒரு சகோதரனே இருப்பான்.

4.  மூன்றாமிடம், ஆறாமிடம் இவைகளில் சுபத்தன்மையுடன் இருக்க, அந்தவீட்டின் அதிபதிகள் இருந்து, சுபருடன் கூடி, நட்படைந்து இருந்தால், அந்த ஜாதகனுக்கு பல சகோதரங்கள் இருப்பாகள்.

5.  இலக்கினத்திற்கு ஒன்று, இரண்டு, மூன்றாம் அதிபதிகள் ஆட்சி, உச்சம், நட்படைந்து நிற்க, அல்லது பதினொன்றாமிடத்திலோ, கேந்திர, திரிகோணங்களிலோ இருந்து, குரு, சந்திரன், புதன் அவர்களைப் பார்க்க, மூன்று பெண் சகோதரங்கள் இருப்பர்.

6.  இலக்கினாதிபதியும், இராசிக்கு அதிபதியும் பெண்கிரகமானால், இரண்டு பெண்கள் ஜாதகர்க்கு இருப்பர்.

7.  இலக்கினதிபதியும், நான்காமதிபதியு ம், இலக்கினத்திலே இருந்தால், பிறக்கும் குழந்தை இரட்டையராய் இருக்கும்.

8.  உங்கள் ஜாதகத்தில் மூன்றுக்கு உரியவர் ஆறிலும், ஆறுக்குரியவர் மூன்றிலும் இருந்தால், ஜாதகர் மட்டுமே இருப்பார்.

9.  சனி நின்ற வீட்டுக்கு ஏழில், சந்திரன், செவ்வாய், இராகு இருக்கவும், ஜாதகர் ஒருவர் மட்டுமே இருப்பார். 

கண்டிப்பாக கருத்துக்களை மட்டும் பதியுங்கள். விருப்பத்தேர்வு செய்யாதீர்கள். காரணம், இது ஆய்வுக்கு உட்படுத்தப்படும் கட்டுரையாகும்.

91501 06069

No comments:

Post a Comment