Monday 20 July 2015

என் கேள்விக்கு என்னப் பதில் ... முத்துப்பிள்ளை 91501 06069





ஜாதகம். 1.
பெயர். எஸ். ஆனந்தன்.

கேள்வி. ஐயா, எனக்கு திருமணம் எப்போது நடக்கும். விரிவான பதிலை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன். சொல்வீர்களா?

30.03. 1979. மதியம் மணி 02.15 நிமிடத்திற்கு வத்தலக்குண்டுவில் பிறப்பு.

சூரிசெவ் புத
            (வக்)

சந்தி  மாந்


சுக்கி கேது


               இராசி                               
இல  குரு


சனி இராகு
(வக்)






சுக்கிரன் தசா வருடம் 16  மாதம் 08 நாள் 06 ஆகும். தற்போது செவ்வாய் தசாவில் சனி புக்தி 22. 02. 2015 வரை இருக்கும்.

உங்களின் ஜாதகத்தைப் பார்த்தேன். இராகு, கேதுக்குள் மற்ற எல்லாக் கிரகங்களும் அடைபட்டு காலசர்ப்ப தோஷம் அடைந்துள்ளது. ஆனால், பாதுகாப்புடைய ஜாதகம். திருமணம் தள்ளிப் போனது கூட நல்லதுக்குத்தான். அதனால், கலங்கவேண்டாம். நல்லதே நடக்கும். உங்களின் ஜாதகத்தில் குடும்பத்தைப் பற்றிச் சொல்லும் இலக்கினத்திற்கு இரண்டாமிடத்தில், மனைவியைத் தரும் ஏழாமதிபதி சனி வக்கிரமடைந்து, இராகுவுடன் கூடியிருப்பதும், மனைவியின் காரகனான சுக்கிரன், எதையும் தடை செய்யும் கேதுவுடன் கூடியிருப்பதும், திருமணத்தைத் தடை செய்யும் அமைப்பாகும்.

தனக்கு இணையான, அல்லது தனக்கு மேம்பட்ட இடங்களில் இருந்து வரனை எதிர்பார்க்காமல், தன்னிலும் தாழ்ந்த, வறிய, அழகற்ற வரனை அமைக்க திருமணம் கைகூடும். இந்தவித கண்ணோட்டம் அனுபவத்தில் சரியாகவே வருகிறது. மேற்கொண்டு விபரங்களை அறிய, ஒருமுறை சந்தியுங்கள். விளக்கமாகப் பேசலாம். இறைவழிபாட்டைத் தவிர மனிதனால் செய்யப் படும்  பரிகாரங்கள் பயன் தராது. நன்றி.     

ஜாதகம் .2.

பெயர். உதயசூரியன்.
10.07.1996. இரவு மணி 10.20 நிமிடம். கடலூர்.

கேள்வி. மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, என் பேரனின் எதிர்காலம் குறித்து, மிகவும் கவலையாக உள்ளது. அவன் வருங்காலத்தில் எப்படி இருப்பான் என்று தெளிவாகக் கூறவும்.

சனி கேது

சந்தி
சுக்கி செவ்
சூரி புத மா
இல

                           
         இராசி





குரு
(வக்)


இரா

சூரியன் தசா  வருடன். 04 மாதம் 07 நாள் 18 ஆகும். தற்போது செவ்வாய்தசாவில் புதன் புக்தி 10.06.2015 வரை நடக்கும்.

திரு ஜெயராமன் ஐயா, வணக்கம். தங்களின் பேரனின் ஜாதகத்தைக் கண்டேன். பாவக்கிரகங்களின் மத்தியில் தாய்க்காரகனான சந்திரன் சிக்கிக் கொண்டான். தாய் இருந்தாலும் இல்லாதவளாகவே போவார். ஆரம்பக் கல்வியே தடுமாற்றத்தில் இருக்கும். செம்மைப் படுத்துங்கள். குழப்பான பேச்சு வார்த்தைகளைக் குறைக்கச் சொல்லுங்கள். இவன்தாய் வீட்டுக்கு இனிய சீமான்” . கவலை வேண்டாம். பாவக்கிரகங்கள் செவ்வாயைப் பார்த்ததால், பல பிரச்சனைகளைச் சந்திக்கவேண்டும். அரசின் அனுகூலம் இல்லாமலே போய்விடும். ஆனாலும், வருங்காலம் வளமுடன் இருக்கும். கவலை வேண்டாம்.

ஜாதகம். 3.

என் பெயர் ஜெயமுருகன். நான் வழக்குரைஞராகப்
பணிபுரிகிறேன். என்பிறந்த நாள் 28.10.1978. நேரம் மாலை மணி 05.30 நிமிடம்.

கேள்வி.அரசியலில் ஆர்வம் அதிகம். இனிவரும்  எந்தத் தேர்தல்களிலும்  போட்டியிடலா? என்பதை தெரியப்படுத்தவும். 
தற்போது இராகு தசா சூரிய புக்தி 15.11.2014 வரை இருக்கும், அதற்கு மேல் 08.05.2016 வரை சந்திரபுக்தி.


கேது

இல





        இராசி

குரு மாந்



சந் சனி



செவ்
சூரி புத
சுக்()


இவரின் இலக்கினம் மேடம். நான்காமதிபதி சந்திரன். அரசியலுக்குக் காரகக் கிரகமான சந்திரன்.   ஒன்றுக்கொன்றுத் தொடர்பு ஏற்பட அரசியலில் பிரபலமாக இருப்பர். இவரின் ஜாதகத்தில் இலக்கினம் சரராசியாகி, நான்காமதிபதியும், காரகனும் சந்திரனாகவே வருவதால், இம்மூன்று அமைப்பும் ஒன்றுக்கொன்றுத் தொடர்பு கொள்கிறது. இதனுடன் சனி இருப்பதால், ஜாதகரின்     எண்ணம் தாமதமாகவே   நிறைவேறும்.
நான்காம் வீட்டை சுபர்கள் பார்க்கவேண்டும். காரணம், நான்காம் வீடு பொது மக்களைக் குறிக்கும் இடமாகும். இவரின் ஜாதகத்தில் உச்சக்குரு, அங்கிருக்க, அந்த இடம் வடக்கு ராசியைச் சேர்ந்தது. அதேபோல், நேர்கோட்டில் செவ்வாய்,கேதுவும் இருக்க, ஜாதகரின் எண்ணம் துடுக்குத் தனத்தால் தடையேற்படும்.

சூரியன் நீசபங்கம் ஏற்பட்டு பலம் பெற்றாலும், குருவின் பார்வைக் கிடைக்கவில்லை என்பதால், தலைமையை அடைவதில் பிரச்சனைகள் ஏற்படும். சூரியனை சனி காண்பதால் தலைமைப் பதவியை அடைந்தாலும், அதை சனி தடுப்பான். அதனால், அரசியலில் இரண்டாம் நிலையைத்தான் ஜாதகரால் அடையமுடியும். தாங்கள் போட்டியிடும் எண்ணம் நல்லதுதான் என்றாலும், கிரகங்களின் அனுக்கிரகங்களும் வேண்டும் அல்லவா? முயற்சி திருவினையாக்கட்டும். நன்றி!

ஜாதகம். 4.

என் பெயர். சண்முகம். என் பிறந்த நாள். 05.02.1950. காலை 07.20 நிமிடத்திற்கு பிறப்பு.
கேள்வி. சொத்திற்காகத் தொடுக்கப்பட்ட வழக்கின் முடிவு எப்படி இருக்கும். என் நிம்மதியைத் தொலைக்கும் மனைவி மக்களின் செயல்பாடுகளில் இருந்து, எப்போது நிம்மதி பெறுவேன்? 


இராகு



இல


     இராசி

மா
 சூரி குரு சுக்
சந்
சனி

புதன்


செவ்
கேது

தற்போது குருவில் இராகு 06.03.2015 வரை நடக்கும். அதன்பின் சனிதசா சனிபுக்தி 21.02.2018 வரை நடக்கும்.

ஜென்மராசி சிம்மம். ஜென்ம லக்கினம் கும்பம். நட்சத்திரம் பூரம். தெற்கு ராசியில் செவ்வாய் கேது கூடி இருக்க, அதே நேர்கோட்டில் தெற்கில் சூரியன், குரு, சுக்கிரன் இருப்பதும், தகப்பன் சம்பாதித்த கோவில் இடம், அதிலுள்ள கட்டிடங்கள், வீடு, தோட்டம் என அனைத்துச் சொத்துக்களும், கேதுவால் பிரச்சனைகள் ஏற்படும். குருவும் கேதுவைப் பார்ப்பதால், பிரச்சனைகள் தங்களுக்கு சாதகமாகவே இருக்கும். கோச்சாரத்தில் குரு, கேதுவைக் காணும்போது வழக்கு தங்களுக்கு சாதகமாக முடியும் என நம்பலாம்.

ஏழில் சந்திரன், சனி இருப்பது, தங்களுக்கு நிகராக, தங்கள் மனைவி இருக்கப் போவதில்லை. மேலும்,

புத்திர ஸ்தானாதிபதியான புதன், புத்திர ஸ்தானத்திற்குப் பாதகவீட்டில் உள்ளதால்,  தங்கள் மகன்களும், தங்களுக்கு உடன்பாடு உடையவர்களாக இருக்கமாட்டார்கள். நன்றி!
ஜாதகம். 5.
என் பெயர் கவிதா. என் பிறந்த நாள்14. 12. 1966. மதியம் மணி 12.27 நிமிடம். அரசு தொலைக்காட்சி நிலையத்தில் டெக்னீசியனாக வேலைப் பார்க்கிறேன்.
கேள்வி. எனக்கு குலதெய்வத்தின் அனுக்கிரகம் உண்டா? நான் யோகா பயிற்சி செய்வேன். இப்போது என்னால் மனதை ஒரு நிலைப் படுத்த முடியவில்லை. இறந்த என் தந்தையின் ஆத்மா என்னோடு இருப்பதாக உணர்கிறேன். இது நல்லதா?

தற்போது 11.02.2016 வரை குருதசாவில் புதன் புக்தி நடக்கும்.
 


இல
இரா



சனி மாந்

     இராசி

குரு
()




சந் சுக்

சூரி புத

கேது

செவ்

 தங்களின் இராசி தனுசு. இலக்கினம் மீனம். நட்சத்திரம் பூரம். கேது எனும் கிரகத்தை மோட்சக்காரகன் என்றும் சனியைக் கர்மக் காரகன் என்றும், குருவை ஜீவக்காரகன் என்றும் அழைப்பார்கள். கேது, குரு, சனியை ஒரு நேர்கோட்டில் சந்தித்தால் அல்லது கூடினால், ஜாதகர் ஞான நிலையை அடைவார்கள். சந்திரனை மனோக்காரகன் என்பார்கள். இராகுவைப் போகக்காரகன் என்பார்கள். இப்போது எதையும் பெரிதாகக் காட்டி, விகாரப்படுத்திவிடும் இராகு, சஞ்சலமாகும், அடக்கப்படாத மனதைப் போல் விரிவடைந்து, மனம் அடங்காமல் அலைபாயும்.
உங்களின் ஜாதகத்தில் கேதுவும்,சனியும் மேற்கு திசையில் ஒரே நேர்கோட்டில்தான் உள்ளனர். குரு வடக்கில் நின்றிருந்து, வக்கிரம் அடைந்ததால், பின்ராசியில் நிற்பதாக அர்த்தமாகிறது. அந்த வகையில் இந்த மூன்று கிரகங்களும் சந்தித்துக் கொ:வதால ஆகிறது.  அதனால், ஜாதகருக்கு ஞானம் சித்திக்கிறது. அப்படி இருக்க, மனம் ஏன் குழம்புகிறது.

இராகுவும், சந்திரனும் கிழக்குத்திசையில் இருந்து, ஒரே நேர்கோட்டில் இருப்பதால், கூடவே அலங்காரப் பிரியனான சுக்கிரனையும் இணைத்துப் பார்ப்பதால், மனம் வயப்படாமல் அலைபாயத்தான் செய்யும். நல்லக்குருவைத் தேடுங்கள். பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

உங்கள் அருகிலுள்ள சக்தி, நல்லதைச் செய்வதாக நம்பினால், அது நல்லதுதானே. வாழ்த்துக்கள்.



அனுப்பவேண்டிய முகவரி.
முத்துப்பிள்ளை,
4/7/1 வடக்கு வெள்ளாளர் தெரு,
ஆத்தூர். 624 701 (அஞ்சல்)
ஆத்தூர் வட்டம்
திண்டுக்கல். மாவட்டம்
கைபேசி. 91501 06069




1 comment:

  1. அய்யா, என் பெயர் வசந்தகுமார் 9:7:1991,7:27am,கரூர்.
    என் வாழ்க்கையில் நான் பட்ட கஷ்டங்கள் ஏராளம், நன்மை என்பது கிடையாது, எப்படி ஆவது முன்னேறுவேன் என்ற ஒறு ஆசை. நடக்குமா

    ReplyDelete