Sunday 19 July 2015

80. இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?




நாம் வாழும் வாழ்வில் தொடர் சறுக்கலும், நிம்மதியற்ற மனநிலையும், குடும்பப் பிரிவினைகளும் ஏற்பட்டால், நமக்கு ஏதோ செய்வினை வைத்ததைப் போன்ற மனநிலை ஏற்படுகிறது.
இலக்கினத்தில் கிரகணச் சந்திரனும், ஐந்து ஒன்பதாமிடங்களில் சனி, செவ்வாயும் இருந்தால், நமக்கு யாரோ செய்வினை வைத்ததைப் போன்ற மனநிலை உருவாகும் என்கிற தகவலுடன், உங்கள் … 
81. இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?
சாத்திரம் என்கிற பெருங்கடலை நீந்திக் கடப்பது இயலாத காரியமாகும். ஆனால், ஏற்கனவே படைத்து வைக்கப்பட்ட மந்திரங்களை அட்சரம் பிசகாமல் உச்சரிப்பதற்கே, நமக்கு புண்ணியம் செய்விக்க வேண்டும் என்றால், அம்மந்திரங்களை படைப்பதற்கான ஆற்றலைப் பெறுவதற்கு, மாதவம் செய்திருக்க வேண்டும் அல்லவா?

எந்த இலக்கினமாக இருந்தாலும், ஆத்மக்காரகன் சூரியனையும், ஜெயக்காரகன் செவ்வாயையும், இரண்டாமிட அதிபதியான வாக்கின் நாயகனையும், அசுரக் கூட்டங்களின் தலைமை ஆலோசகனான சுக்கிராச்சார்யாவும் (சுக்கிரனும்), தேவர்களின் தலைமை ஆலோசகரான பிரகஸ்பதியும் ( குரு என்கிற வியாழனும்) பார்த்தால், அச்சாதகன் வேதங்களை தெளிவுற கற்றவனாகி, தர்க்கசாத்திரங்களையும் அறிந்தவனாக இருப்பான் என்கிற தகவலுடன், உங்கள் ….  

82. இன்றொரு ஜோதிடத் தகவலை அறிவோமா?
நாம் ஒருவரை திருமணம் முடித்து, அவருடன் வாழ்ந்து முடிப்பதே, பெரும் வேலையாக இருக்கிறது. வாலிபத்தில் சிறகடித்துப் பறந்தவனால், திருமணத்திற்குப் பிறகு தனக்கு சிறகுகள் இருக்கிறதே என்பதைக் கூட, மறந்து விடுகிறோம். தன் சிறகுகளை விரித்துக் கூடப் பார்ப்பதில்லை. ஒரு திருமணம்  செய்து, ஒருமுறை வாழ்வதற்கே விடைதெரியாத பலபேர் இருக்க, பல திருமணங்கள் செய்து எப்படித்தான் வாழ்கிறார்களோ!

இலக்கினத்திற்கு ஏழாமிடத்தினில் குருவும், சனியும் கூடிநிற்க, இலக்கினத்தை சந்திரனும் பார்க்க, இரண்டுக்கும் மேற்பட்ட திருமணங்கள் முடிப்பான் என்கிற தகவலுடன், உங்கள் ….  

No comments:

Post a Comment